மகா கும்பமேளாவில் திருப்பதி ஸ்ரீநிவாஸ ஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2025 12:01
பிரயாக்ராஜ்; உலகின் மிகப்பெரிய விழாவான மஹா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள தசாஸ்வமேதகாட்டில் இன்று வியாழக்கிழமை ஸ்நபன திருமஞ்சனம் நிகழ்ச்சியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தியது.
திருமலை ஸ்ரீவாரி கோயிலின் தலைமை அர்ச்சகர் வேணுகோபாலன் தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் குழுவினர் புனித கங்கை நதிக்கரையில் ஸ்ரீநிவாஸ ஸ்வாமியுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நிகழ்ச்சி நடத்தினர். பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் நடத்தப்பட்ட ஸ்நபன திருமஞ்சனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் சூக்தம், பூசூக்தம், நீல சூக்தம், புருஷ் சூக்தம், நாராயண சூக்தம், போன்ற ஐந்து சூக்தங்களை பாராயணம் செய்தனர். அபிஷேகம் முடிந்ததும் உற்சவருக்கு துளசி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சாஸ்திரங்களின்படி சஹஸ்ரதாராபாத்திரத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க கங்கை நதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.