மனித குலத்துக்காக இறைவனால் அனுப்பப்பட்ட வழிகாட்டி குர்ஆன். இதுவே சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகிறது. வானவரான ஜிப்ரீல் மூலமாக இறக்கியருளப்பட்டது. வாழ்க்கையின் நோக்கம், இறைவன் விரும்பக் கூடிய செயல்கள், வெறுக்கத்தக்க செயல்களும், இறைத்துாதர்களின் வாழ்க்கை வரலாறு, சொர்க்கம், நரகம், இறுதித் தீர்ப்பு நாள் பற்றிய செய்திகள் இதில் உள்ளன.