Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவமகா புராணம் ஸநத்குமார ஸம்ஹிதை ... சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பகுதி-2) சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ ...
முதல் பக்கம் » சிவமகா புராணம்
சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பகுதி-1)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2012
04:05

5. வாயுஸம்ஹிதை- (பூர்வ பாகம்)

காப்பு: நமஸ் மைஸ்த ஸம்ஸார சக்ரப்ரமண ஹேதவே, கௌரீ குசதடத்வந்த்வ குங் குமாங்கீத வக்ஷஸே (எல்லாவிதமான சம்சார சக்கரத்தை சுழற்றுகிற காரணரும், உமாதேவியாரின் உபயதனங்களில் படிந்த குங்குமத்தால் அடையாளஞ் செய்யப்பட்ட திருமார்பையுடையவருமாகிய சாம்பவமூர்த்தியை வணங்குகிறேன்.)

1. வித்தியாவதாரம் விளக்கம்

சூதமுனிவர், நைமிசாரணிய வாசிகளை நோக்கிக் கூறலானார். அனைத்துலக நாயகனாகிய, சிவபெருமானின் திருவருளால் உபமந்யு முனிவர் உணர்ந்த அநேக நியமங்களை, வாயுதேவனுக்கு சொல்ல, வாயுபகவான் அந்த நியமங்களையெல்லாம் அனுஷ்டித்து ஒருநாள் நடுப்பகலில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது மிகப் பெருந்தவசிகளாகிய மாமுனிவர்கள் பலர், உச்சிக் காலக்கடனை முடித்துக் கொண்டு இருந்து, வாயுதேவனைக் கண்டு, இவரால் நம்முடைய சந்தேகங்களை நீக்கிக் கொள்ளலாம் என்று மகிழும் மனதோடு, அவரை எதிர் கொண்டழைத்து வந்து சிறந்த ஆசனமளித்து, அவரை அதில் இருக்கச் செய்து, தாங்களும் அவரைப் புடைசூழ்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களை நோக்கி, வாயுதேவன் சர்வேஸ்வரனுடைய மகிமாதிசயங்களை இதயத்தில் நிறுத்தி, சாக்ஷõத் சாம்பமூர்த்தியின் விபூதியே சராசரப் பிரபஞ்ச முழுவதும் அன்றோ? அத்தகைய சர்வக்ஞனும் அபராஜிதனுமாகிய மகாதேவனை நான் வணங்குகிறேன் என்று கூறினான். அவ்வார்த்தையைக் கேட்ட முனிவர்கள் யாவரும், தங்கள் பாவங்களை ஒழித்தவர்களாய், வாயுதேவரே! சர்வலோக நாயகனாகிய சாம்பவமூர்த்தியின் மகிமைகளை நாங்கள் கேட்க விரும்புகிறோம். தாங்கள் இதுவரையில் உபமந்யு முனிவர், கிருஷ்ணமூர்த்திக்குப் பாசுபத தீøக்ஷ செய்வித்ததாகச் சொல்லியிருக்கிறீர். ஆகையால் அந்தக் கிருஷ்ணமூர்த்தி, ஞானவானாகிய பாசுபத விரதம் அனுசரித்த வகை யாது என்பதை எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்க, வாயுதேவன் சொல்லியவாறே சூதமுனிவர் கூறலானார்.

ஸநாதனனாகிய விஷ்ணுமூர்த்தியின் அவதாரமாக இருந்தாலும் கிருஷ்ணாவதாரத்தில் தம்முடைய மானுட தேகத்தை நிந்தித்துக் கொண்டு உருத்திராக்ஷ மாலிகாபரணரும் ஜடாமண்டலங்காரரும் சாஸ்திரங்களால் சூழப்பெற்ற வேதத்தைப்போல, உத்தம முனி மாணவர்களால் சூழப் பெற்றவரும், சிவத்தியானத்தையே எப்போதுமுடையவரும், முனிவர்களெல்லோரையும் விட உத்தமருமாகிய உபமந்யு முனிவரைத் தரிசித்து உடல் முழுவதும் புளங்காங்கிதமடைந்து, பக்தியுடன் அந்த முனி புங்கவரை மும்முறை வலம் வந்து நிற்கையில், அந்த முனிவரது தரிசனத்திலேயே, மகாபுத்திமானாகிய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியின் சகலவிதமான தோஷங்களும் மாயா சம்பந்தமான கர்மங்களும் நீங்கின. அப்பொழுது ஸ்ரீகிருஷ்ண பகவான் உபமந்யு முனிவரை நோக்கி, எனக்குத் தாங்கள் சிவ தீøக்ஷ செய்விக்க வேண்டும் என்று பிரார்த்திக்க உபமந்யு முனிவர் தம்மையடுத்த ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு விதிப்படி அக்நிரிதிபஸ்மா - இத்யாதி மந்திரத்தால் கிரமமாகப் பஸ்மதாரணஞ் செய்து, பாசுபத விரதம் உபதேசம் செய்து பன்னிரண்டு மாதங்கள் அனுஷ்டானம் செய்வித்து, அற்புதமான ஞானத்தை தந்தருளினார். அன்று முதல் சிறந்த பாசுபத ஞானி என்று ஸ்ரீகிருஷ்ணரை யாவரும் கொண்டாடலாயினர். பிறகு ஸ்ரீகிருஷ்ணர், தம் குருவின் கட்டளையை ஏற்று தமக்குச் சற்புத்திரன் உண்டாகவேண்டும் என்னும் கருத்தோடு, பார்வதி தேவியையும் பரமசிவனையும் குறித்து ஓர் ஆண்டுத் தவஞ் செய்தார். அப்போது சிவபெருமான் பார்வதி தேவி சகிதமாகவும் சிவகணங்களோடும் காட்சியளித்தார். அவரை ஸ்ரீகிருஷ்ணர் நோக்கி, மகாதேவா! எளியேனுக்கு ஒரு புத்திரனைத் தந்தருள வேண்டும்! என்று வரம் கேட்டார். இறைவரும் அவ்வாறே வரம் தந்தார். அதனால் ஸ்ரீகிருஷ்ணருடைய அஷ்டபாரியைகளில் ஜாம்பவதி என்பவளிடம் ஒரு புத்திரன் பிறந்தான். அம்பாள் சகிதமான சாம்பவமூர்த்தியின் கிருபையால் பிறந்த புதல்வனாகையால் அந்தக் குழந்தைக்குச் சாம்பன் என்று பெயரிட்டார்கள்.

இனி சிவபெருமான், சர்வ வித்தைகளுக்கும் உற்பத்தி ஸ்தானம் என்பதைச் சொல்லுகிறேன். புராணம் தர்ம சாஸ்திரம் முதலிய வித்தைகள் பதினான்கு ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம் என்னும் நான்கையும் உடன்கூட்டிப் பதினெட்டு என்று சொல்லுவது வழக்கு. இவ்வாறு பல திறப்பட்ட பதினெட்டு வித்தைகளும், ஆதிகவீஸ்வரனாகிய திரிசூல பாணியினாலேயே இயற்றப்பட்டன. எல்லா உலகங்களுக்கும் நாயகனாகிய சிவபெருமான். சராசரப் பிரபஞ்சங்களையும் சிருஷ்டி செய்யவேண்டும் என்ற விருப்பமுடன், பிரமன் என்னும் புத்திரனை முதலில் படைத்து, பிரபஞ்சத்திற்கு, அந்த வித்தைகளையெல்லாம் கொடுத்து, இனிப் பிரபஞ்சத்தைப் படைப்பாயாக! என்று கூறினார். இறைவனின் அருள்வாக்கின் திருவருளால் பிரமதேவன் பிரஜா சிருஷ்டியைச் செய்துகொண்டு எல்லா சாஸ்திரங்களுக்கும் மத்தியில் முதலாகவுள்ள புராணத்தைப் பிரமதேவன் கூறினான். பிரமனுடைய முகத்திலிருந்து வேதங்கள் தோன்றின. இவ்வாறு பிரமதேவனிடம் தோன்றிய வேத, சாஸ்திர, புராணங்கள், சிறப்பாக விளங்கியதால், பிரஜைகள் அவற்றையெல்லாம் ஓதியுணர்ந்து அத்தியயனஞ் செய்ய அசாத்தியமாக இருந்ததால், அந்த அசக்தியை ஒழிக்கும்படித் திருமால், சிவாக்ஞையின்படி துவாபரயுகாந்தங்களில் வியாஸரூபமாகத் திருவவதாரஞ்செய்து, அவரே இந்தத் துவாபரயுகத்தில், அரணியில் அக்கினியைப் போல, சத்தியவதியிடமாகக் கிருஷ்ணத்வைபாயனராக ஜெனித்தார். வேதம் எனும் பெருங்கடலில் வியாசருடைய புத்தியாகிய மத்தினால் கடைய, உலகத்தில் சிறந்துள்ள பாரதம் என்னும் சந்திரன் தோன்றியது. மீண்டும் வேதங்களைச் சுருக்கி, நான்காகச் செய்தார். அதனால் அவருக்கு வேதவியாசர் என்ற பெயர் உண்டாயிற்று. தேவலோகத்தில் நூறு கோடி கிரந்தங்களையுடைய புராணங்களை நான்கு லக்ஷமாகத் தொடுத்தார்கள். நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் எல்லா உபநிஷத்துக்களையும் உணர்ந்த பிராமணனாயினும் புராணங்களை வாசிக்காதவன் புத்திசாலியாக மாட்டான். வேதங்களின் பொருளைப் புராண இதிகாசங்களாலேயே அறியத்தகும். புராணத்தைச் சிறிது ஆராய்ந்தாலும் வேதத்தின் பொருள் நன்றாக விளங்க மாட்டாது. சர்க்கம், பிரதிசர்க்கம், வமிசம், மன்வந்தரம், வமிசாசாரம் என்னும் ஐந்து லக்ஷணங்களையுடையது புராணம். அந்தப் புராணம், பதினெண் வகையாகச் சொல்லப்பட்டுள்ளது. அவையாவன; பிரமம், பதுமம், வைணவம், சைவம், பாகவதம், பவுஷியம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்நேயம், பிரமகைவர்த்தம், இலிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மச்சம், கருடம், பிரமாண்டம் என்பவையாகும்.

இவற்றின் முறையில் சைவம் நான்காவது. இது சிவபெருமானுடைய புகழை எடுத்துரைப்பதும் எல்லாப் புருஷார்த்தங்களையும் வழங்கச் சாதகமானதும் இலக்ஷம் கிரந்தங்களையுடையதும் பன்னிரண்டு ஸம்ஹிதைகளாகப் பிரிக்கப்பட்டதுமாக, எல்லாத் தருமங்களும் நன்றாக விளங்கும்படி, சாக்ஷõத் சிவபெருமானாலேயே திருவாய் மலர்ந்தருளப்பெற்றது. இந்த சைவ (சிவ) புராணத்தில் கூறிய ஆசாரங்களை அனுஷ்டித்தவர்கள். சாம்பவமூர்த்தியின் திருவருளால் ஒரே பிறவியில் முக்தர்களாவார்கள். ஆகையால் முக்தியை விரும்பியவர்கள், சிவபெருமானே சர்வலோக நாயகன் என்று அவருக்குத் தொண்டு செய்யவேண்டும். தேவர்களும் சிவபெருமானை ஆராதித்தே தங்கள் பதவிகளை அடைந்தார்கள். அவரையன்றி வேறொருவரும் முக்தியை அளிக்க வல்லவர்களல்லர். வேதத்திற்குச் சமானமான இந்தச் சைவ புராணத்தின் பாகங்களைச் சொல்லுகிறேன். வித்யேஸ்வர ஸம்ஹிதை, ருத்திரஸம்ஹிதை, சிரேஷ்டமான விநாயக ஸம்ஹிதை, உமாஸம்ஹிதை, மாத்ருஸம்ஹிதை, ஏகாதச ருத்திரஸம்ஹிதை, கைலாயஸம்ஹிதை, சதருத்திரஸம்ஹிதை, கோடிருத்திரஸம்ஹிதை, ஸஹஸ்ரகோடி ஸம்ஹிதை, வாயுஸம்ஹிதை என்ற பன்னிரண்டு பாகங்களையுடையதாக இருக்கும். அவற்றின் கிரந்த சங்கிதையும் சொல்லுகிறேன். வித்யேஸ்வரம் பதினாயிரமும் ருத்திரம், விநாயகம் உமா, மாத்ரு ஸம்ஹிதைகள் எவ்வெண்ணாயிரமும் ஏகாதசருத்திரம் பதின்மூவாயிரமும் கைலாயம் ஆறாயிரமும் சத்ருத்திரம். கோடிருத்திரம் சகஸ்ர கோடிஸம்ஹிதைகள் பப்பத்தாயிரம் வாயுஸம்ஹிதை நாலாயிரமும், தர்ம ஐயாயிரமும் ஆகிய கிரந்தங்களையுடையனவாகும். ஆக பன்னிரண்டு ஸம்ஹிதைகளும் கூடிய ஸ்ரீசிவ மஹாபுராணமானது. லக்ஷம் கிரந்தங்களையுடையது. அவற்றில் வாயுஸம்ஹிதையானது பூர்வம், பரம் என்னும் இருபாகங்களையுடையது. அவற்றைச் சொல்லுகிறேன். இந்த ஸம்ஹிதையை - வேதம் அறியாதவனுக்கும் சிரத்தையில்லாதவனுக்கும் புராணஞானம் இல்லாதவனுக்கும் சொல்லக்கூடாது. ஒருவனை அசூயை முதலிய துர்க்குணங்களினின்றி சிவபக்தி, தர்மசிந்தனை முதலிய நற்குணமுடையவனாகப் பரிசோதித்த பிறகே இதனைச் சொல்லத்தகும். உத்தம குருவாகிய வியாசபகவானின் கருணையால் இந்த ஸம்ஹிதைகளையெல்லாம் உணர்ந்தேன். அத்தகைய வியாசபகவானுக்கு நமஸ்காரம்! என்று சூதமுனிவர் மேலும் சொல்லத் தொடங்கினார்.

2. முனிவர்கள் பிரமலோகம் செல்லுதல்

நைமிசாரண்ய வாசிகளே! அனேக கற்பங்கள் கடந்த பிறகு, இந்தச்சுவேத வராஹ கல்பத்தில், சிருஷ்டித்தொழில் விஸ்தரிக்கும் பொழுது, மானுடர் யாவரும் விசேஷ புத்திமான் களாகுகையில், ஆறுகுலத்தில் உதித்த அந்தணர்கள் ஒருவரோடொருவர், பேசிக்கொண்டிருக்கும்பொழுது, பரதத்துவப்பொருள் சம்பந்தமாக விவாதம் உண்டாயிற்று. அந்தப் பரதத்துவப்பொருளைத் தீர்மானிக்க முடியாமற் போனதால், உண்மையறியாது அவர்கள் தத்தமக்குத் தோன்றிய கருத்துக்களைக் கூறியவர்களாய் யாவரும் ஒன்று சேர்ந்து, பகவானாகிய பிரமதேவரிடம் சென்று தம்முடைய சந்தேகங்களை நீக்கிக் கொள்வோம் என்று உறுதி செய்து கொண்டு பிருமலோகத்திற்குப் புறப்பட்டார்கள். மேருமலையை நோக்கிச் சென்றார்கள். அந்தமலை மங்களகரமானது, தேவ சமூகங்களையுடையதும் சித்தர் சாரணர், யக்ஷர், கந்தர்வர் முதலானவர்களால் சேவிக்கப் பெறுவது பலவிதமான பறவைகளின் ஒலிகள் அங்கு நிறைந்திருக்கும். முத்து, பவளம், இரத்தினம் முதலியவற்றால் அலங்கரிக்கப் பெற்றதும் புதர்வீடுகளும் குகைகளும் அமையப் பெற்றதுமான அத்தகைய மேருமலையின் சிகரத்தில் பிரமவனம் ஒன்று உண்டு. அதில் பலவித மிருகங்கள் வசிக்கும். பத்து யோசனை அகலமும் நூறு யோசனை உயரமும் உள்ளது. சுவைமிக்க நன்னீர் நிரம்பிய தடாகங்களும் மதர்த்தவண்டுகள் ரீங்காரம் செய்யும் மலர்கள் நிறைந்த மரங்களும் அந்த வனத்தில் இருக்கும். அதில் தான் பிரமநகரம் இருக்கிறது. அது உதய சூரியன் போன்றதும் மதவெறி கொண்ட தைத்தியதானவர் களாலும் அசைக்க முடியாதது. ஸ்புடமிட்ட பொன்னால் செய்த கூட கோபுரமாட மாளிகைகளும், பலவகை இரத்தின ஒளியால் ஆகாய மளாவியபடி எண்ணற்ற விசித்திர மாளிகைகளும் அந் நகரை அலங்கரிக்கின்றன. அந்த பிரம நகரத்தை முனிவர்கள் அடைந்தார்கள். அங்கு நாசரஹிதனும் சுராசுரர்களால் துதிக்கப் பெற்றவனும், சாதுக்களால் சூழப்பெற்றவனும், பரமாத்ம ஸ்வரூபனும் எல்லாவுலகங்களுக்கும் பிதாமகனும், தூய்மையான பொன் மேனியுடையவனும், தேவராக்ஷஸ முனிவர் கணங்களால் சேவிக்கப் பெற்றவனும் சகல ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவனும் மலர்ந்தமுக மண்டலமுடையவனும், செந்தாமரை மலர் போன்ற நொடிய விழிகளையுடையவனும் திவ்விய சந்தன கந்த புஷ்பாதிகளால் அலங்கரிக்கப் பெற்றவனும் வெள்ளிய பட்டாடையுடுத்தவனும் தேவேந்திரன் முதலிய தேவசிரேஷ்டர்களும் முனிசிரேஷ்டர்களும் அசுர சிரேஷ்டர்களும் நமஸ்கரிக்கும் பாத தாமரைகளையுடையவனும், கலைமகளோடு கூடி வசிப்பவனுமாகிய பிரமதேவனை முனிவர்கள் தரிசித்து, அகமும் முகமும் மலர சிரமிசைத் தம் கரங்களைக் குவித்து, பலவாறு தோத்திரஞ் செய்யலானார்கள்.

பகவானே! திருமூர்த்தி ஸ்வரூபனும் சுவர்க்காதி போகங்களைக் கொடுக்கும் காரணனும் புராண புருஷனும் பரமாத்மனும் திரிகுணாத்மகனுமான பிரகிருதி சரீரனும் மஹதாதி தத்துவபேதனும் விகாரமற்றவனும் பிரமாண்டத்துக்குக் காரணமாகவுள்ளவனும் அந்தப் பிரமாண்டத்திலேயேயுள்ளவனும். பிரமாண்டத்தில் உண்டான பஞ்சீக்ருத மஹாபூதாத்மக சிருஷ்டியாதி காரியங்களையுடையவனும் யாவற்றையும் காணவல்லவனும் எல்லாவுலகங்களிலுமுள்ள பிராணிகளுக்கெல்லாம் சையோக வியோகலிபிக்குக் காரணனுமாகிய தங்களை வணங்குகிறோம். தாங்களே யாவற்றையும் படைப்பவரும் காப்பவரும் அழிப்பவருமாக இருக்கிறீர். தங்களை நாங்கள் அறிந்து கொள்ளச் சக்தியற்று இருக்கிறோம் என்று பலவாறு தோத்திரஞ் செய்தார்கள். அத்தகைய தோத்திரங்களால் மனங்களித்த பிரமதேவன், கம்பீரமான வார்த்தைகளால் சொல்லலானார். மகிமையும் தேஜசுமுடைய மாமுனிவர்களே! நீங்கள் யாவரும் ஒருங்குகூடி இங்கு எதற்காக வந்தீர்கள்! அதை சொல்லுங்கள் என்றார். ரிஷிகள் யாவரும் அவரை வணங்கி, சிருஷ்டி கர்த்தாவே நாங்கள் பெரிய அந்தகாரத்தில் அகப்பட்டவர்களாய் ஜகத்துக்குக் காரணமான பரம்பொருளை இன்னது என்று உணராமல் விவாதஞ்செய்து கொண்டு தங்களிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ளவே வந்தோம். உலகங்கள் யாவையும் படைத்தவரும், எல்லாக் காரணங்களுக்கும் பரமகாரணரும் தாங்களேயாகையால் தாங்கள் அறிந்திராத விஷயம் ஏதுமில்லை. ஜீவகோடிகள் யாவற்றுக்கும் புராண புருஷன் யார்? மாயையற்றவன் யார்? பரிபூரணன் யார்? நித்தியன் யார்? யாருடைய சித்திரச் செயலால் இந்த உலகம் இவ்வாறு சித்திக்கப்பட்டுள்ளது? இது மீண்டும் எவனிடம் ஒடுங்கும்? எவனுக்குப் பூதங்கள் அனைத்தும் வசமாக இருக்கும்? எவன் யாவற்றையும் நடத்துவிப்பவன்? அத்தக புருஷனை நாங்கள் எவ்வாறு காணவல்லவர்களாவோம்? இவற்றையெல்லாம் திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்று கேட்டார்கள்.

அதற்குப் பிரமதேவன் ஆச்சரியமும் ஆசையும் அடைந்து அவர்களை நோக்கி, தேவதானவ முனிவர்கள் முன்னிலையில், துண் என்று எழுந்து, தன் இருகரங்களையும் சிரமிசை கூப்பிக் கொண்டு ருத்ரா என்று சொல்லிய வண்ணம் ஆனந்த மயமாகி எந்தப் பிரமா சமீபத்திலிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அந்தப் பிரமத்தையுணராதவனாக மயங்குகின்றனவோ, எந்தப் பரப்பிரம ஸ்வரூபத்தின் நிரதிசயானந்த சுகத்தைப் பிரமஞானி தெரிந்து கொண்டு, எதனாலும் பயப்படாது இருப்பானோ, எந்த பரமாத்ம ஸ்வரூபத்தில் எல்லாப் பூதேந்திரியங்களுடன் பிரம, விஷ்ணு, ருத்திரன், இந்திரன் முதலியவர்களுடன் இந்தப் பிரபஞ்சம் முதலில் தோன்றியதோ, எவன் படைப்புக்குக் காரணமாகவுள்ள ஆகாசாதிகளுக்கும் கர்த்தனோ. எவன் பரமகாரணமாகத் தியானிக்கத்தக்கவனோ, எவன் அன்னியனாலும் வேறொன்றும் உண்டாகவொட்டாமல், யாவையும் படைத்தானோ, எவன் எல்லா ஐசுவரியங்களையும் அடைந்து, சர்வேசுவரன் என்ற பெயரைப் பெற்று, மோட்ச விருப்பமுடைய முனிவர்களுடைய இதய ஆகாசத்தில் தியானிக்க விளங்குவானோ, எவன் என்னைப் புதல்வனாகப்பெற்று, எனக்கு ஞானத்தை வழங்கியவனோ எவனுடைய திருவருளினால் யான் பிராஜாபத்தியம் என்னும் உன்னதத்தை அடைந்தேனோ, எவன் திவ்விய ஆகாசத்தில் விருக்ஷம் போலத் தனியாக ஈஸ்வரனாக, விளங்குகிறானோ, எந்த மகாத்மாவினால் இந்த உலகம் நிறையப் பெற்றிருக்கிறதோ, எவன் எல்லாப் பிராணிகளுக்கும் கிரியைகளையெல்லாம் கற்பிக்கிறானோ, எவன் ஒருவனாகவே இருந்தும் எண்ணிறந்த வற்றுக்குக் காரணனாக இருக்கிறானோ, எவன் எந்த உலகையும் இது நிறையப் பல சிருஷ்டிகளையுஞ் செய்து, அவற்றிற்கு நாதனாக விளங்குகிறானோ, எவன் எப்பொழுதும் எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் இருந்து கொண்டு, விருப்பு வெறுப்புகளை உண்டாக்குகிறானோ, அவன் தான் காணப்படாமல் பிரபஞ்சத்தை பிரகாசிக்கச் செய்து கொண்டு, அதிலேயே துலங்குகிறானோ, எவன் காலம், புத்தி முதலியவற்றுடன் கூடிய ஆகாசாதி பூதங்களையும் அனந்த சக்தியுடன் அதிஷ்டித்துள்ளவனோ, எவனால் புத்தி ஒவ்வோர் இடத்திலும் பிறக்கிறதோ, எந்த புராண புருஷனுடைய பராசக்தி பாவகம்மியமாகவும் சிறந்ததாகவும் குணங்களால் மறைக்கப்படாததாகவும் நிஷ்களமாகவும் மங்களமாகவும் நித்திய ஞானகிரியாரூபமாகவும் ஸ்வபாவ சித்தமாகவும் இருக்கிறதோ, எவனுக்குச் சமானகனாவது அதிகனாவது இல்லையோ, எவன் க்ஷரனும் அக்ஷரனும் ஆக விளங்குகிறானோ, அக்ஷராக்ஷர ஸ்வரூபமாக உள்ள ஒரே தேவன் யாவனோ, ஜீவனாகவுள்ளவனுக்கு யாருடைய கிருபையால் மாயையானது ஒழிக்கப்படுமோ எவனுடைய பிரகாசம் இல்லாமையால் சூரிய சந்திராதிகள் பிரகாசிக்க மாட்டாதோ, எவனுடைய பிரகாசத்தினால் சூரிய சந்திராதிகள் பிரகாசிக்கின்றனவோ, எவன் அத்விதீயனோ, எவன் ஏகனோ, அவனே மஹாதேவன் அவனே சர்வேசுவரனென்று நீங்கள் அறியக்கடவீர்கள்.

அந்தப் பகவானைவிட உயர்ந்தவர்களாவது, அந்தப் பகவானுக்குச் சமானமானவர்களாவது ஒருவரும் இல்லை. அந்தச் சதாசிவனுக்கு ஆதியந்தங்கள் இல்லை. அந்தச் சர்வேசன் இயல்பாகவே நிர்க்குணன், சுதந்திரன், பரிபூரணன், சுய இச்சையால் சராசரப் பிரபஞ்சங்களைச் சுவாதீனமாகவுடையவன். திவ்விய தேகமுடையவன். அளவிட முடியாத ஆற்றலையுடையவன். தன்னைப் பணிபவர்களுடைய மாயாவிகாரத்தை ஒழிப்பவன். இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலங்கள் இல்லாதவன். காலங்களை நடத்துகிறவன். யாவர்க்கும் உயர்ந்த பதவியை உடையவன். எல்லாப் பூதங்களிலும் வசிப்பவன்; யாவும் அறிந்தவன். உலகத்திற்கெல்லாம் காரணன், உத்தமர்களுக்கெல்லாம் உத்தமன்; தனக்கு மேல் ஒருவனும் இல்லாதவன்; மகிமைகளுக்கெல்லாம் இருப்பிடமானவன்; சர்வைசுவரியவன்; தன் சக்தியாகிய அமிர்த பானஞ்செய்பவன், நல்ல வயதையுடையவன்; ஆனந்த சமூகமாகிய மகரந்தத்தில் மொய்த்துள்ள வண்டு போன்றவன்; சர்வ அண்டங்களையும் கணநேரத்தில் சங்கரிக்கவல்லவன்; உதாரம், வீரியம், கம்பீரம், மாதுரியம் முதலியவற்றுக்குச் சமுத்திரமானவன்; ஒப்பு உயர்வற்றவன். தேவநாயகன் பூதநாதன், அத்தகைய பரம்பொருளைப் பக்தி ஒன்றாலன்றி வேறொன்றினாலும் காணமுடியாது. விரதங்களும் தானங்களும் தவங்களும் நியமங்களும் பெரியோர்களால் கூறப்பட்டிருப்பன வெல்லாம் ஈசுவர சிந்தனைக்காகவே தவிர வேறல்ல. இவையாவும் பக்திக்கு ஈடாகமாட்டாது.

முனிவர்களே! விஷ்ணுவும் நானும் இந்திரனும், சுராசுரர்களும் சர்வேசுவரனுடைய தரிசனத்தை நாடி, உக்கிரமான தவங்களை இப்போதும் செய்து வருகிறோம். பதிதர், மூடர், துர்ச்சனர், குச்சகர், முதலானோர் ஈஸ்வர தரிசனத்தை ஒருபோதும் அடைய மாட்டார்கள். பக்திமான்களே சர்வேசனை அகத்திலும் புறத்திலும் கண்டு, அவரைப் பூஜிக்கிறார்கள். ஈஸ்வர ஸ்வரூபம், ஸ்தூலம், சூட்சுமம், மரம் என்று மூவகைப்படும். எம்மைப் போன்றவர்களால் காணகூடிய தேகமானது. ஸ்தூலதேகம் (பருவுடல்) யோகிகளால் காணக்கூடியது சூக்குமம் (நுண்ணுடல்). நித்தியமாகவும், ஞான ஆனந்தமயமாகவும் இருப்பது பரம அந்தத் தேகமானது, சர்வேசனிடமாக நிஷ்டையுடையவர்களும் சிவ விரதங்களையே அனுஷ்டித்து வருவோர்களும் தரிசிக்கத்தக்கது. அந்த ஈஸ்வர அனுக்கிரகம் பக்தியினாலேயே உண்டாகக்கூடியது. விதையும் விதைக்கு மரமும் காரணகாரிய சம்பந்தமுடையதுபோல பக்திக்கு அனுக்கிரகமும் அனுக்கிரகத்திற்குப் பக்தியும் காரண காரியங்களாகும். அனுக்ரக சாதனம் பெற்றவர்களுக்கே ஆயுள் முடிவில் பரமசிவசாந்நித்தியம் உண்டாகும். அனுக்கிரக ரூபமான சாதனம் தர்மம் என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வேதத்தைப் பயின்றால் ஜன்மாந்தர புண்ணிய பாவங்களில் சாம்மியம் உண்டாகும். சாம்மியத்தில் பிரசாத சம்பந்தம் உண்டாகும். பிரசாத சம்பந்தத்தினால் தர்ம விருத்தியுண்டாகும். தர்மவிருத்தியினால் பாபநலிவு உண்டாகும். பாப நலிவால் சர்வேஸ்வரனிடத்தில் பக்தியுண்டாகும். பக்தியினால் சர்வேஸ்வரனுடைய அனுக்கிரகம் உண்டாகும். அனுக்கிரகத்தினால் காமிய கர்ம பரித்தியாகம் உண்டாகும். அதனால் சிவதர்மம் பரிக்கிரமம் உண்டாகும். அது குருகடாக்ஷத்தால் உண்டாவது என்றும் குருவில்லாமலேயே உண்டாவது என்றும் இருவகைப்படும். குரு கடாக்ஷத்தால் உண்டாகும் சிவ தர்மபரிக்கிரகமே நூறு பங்கு, மற்றதைவிடச் சிறந்தது. சிவ தரும பரிக்கிரகத்தால், சிவஞான சம்பந்தம் உண்டாகும். சிவ ஞானசம்பந்தத்தால், சம்சார நீக்கம் உண்டாகும். அதற்குப் பிறகு விஷய வைராக்கியம் உண்டாகும். வைராக்கியத்தால் மனது தூய்மைப்படும். மனோசுத்தியுண்டானவனுக்குத் தியான நிஷ்டை உண்டாகும். தியான நிஷ்டையால் யோகம் உண்டாகும். யோகத்தால் பக்தியும் பக்தியால் ஈஸ்வர அனுக்கிரகமும் உண்டாகும். ஈஸ்வர அனுக்கிரகத்தால் மட்டுமே மனிதன் முக்தன் ஆகிறான். ஒவ்வொருவர் கருவில் இருந்தபடியாகவும், பிறந்தவுடனேயும் பிறக்கையிலேயும் பாப, யவுன, கவுமாரவிருந்த தசையிலும் முக்தியடைவதன்றி திரியக்கு முதலிய யோனிகளில் பிறந்தும் முக்தியை அடைகிறார்கள். சுவர்க்காதி பதவிகளை அடைந்தும் மீண்டும் மத்திய லோகத்தை அடைந்தும் முக்தியை அடைகிறார்கள். ஆகையால் மானுடருக்கு முக்திமார்க்கம் ஒரே வகையாக அமைவது இல்லை. பக்தி, ஞானத்தால் வருவதாகும். ஈஸ்வர அனுக்கிரகமே பரமானந்த சுகத்தைக் கொடுக்கவல்லது.

ஆகையால், நீங்கள் அனைவரும், அந்தச் சர்வேசனுடைய அநுக்கிரகத்தைச் சம்பாதிக்கவேண்டி, கிரகஸ்தாசிரம (இல்லற) தர்மத்தை அநுசரித்து மனவாக்குகளாலும் தோஷமில்லாமல், பரசிவத்தினிடமே மனோ பக்தியையுடையவர்களாய், அவருக்கே தொண்டு செய்பவர்களாய் சிவபெருமானையே வழிபட்டு எல்லாக் கிரியைகளையும் செய்துகொண்டு, சிவபெருமானே கதி என்று தீர்மானஞ்செய்து, ஆயிரம் ஆண்டுகள் செய்யக்கூடிய சத்திரயாகத்தைச் செய்யக்கடவீர்கள். அந்த யாகத்தின் முடிவில் மந்திரப் பிரபாவத்தால், அந்த இடத்திற்கு வாயுதேவன் வருவான் வாயுதேவன் உங்களுக்கு நன்மையுண்டாகும்படி உங்களுக்கு சிவஞானத்தை உபதேசிப்பான். நீங்கள் வாரணாசிப் பட்டணத்தையடைந்து, பக்தி அநுக்கிரக காரணமாகப் பார்வதி சமேதராக எழுந்தருளியிருக்கும் விசுவநாதனைத் தரிசித்து, மீண்டும் என்னிடம் வருவீர்கள். அப்போது மோக்ஷ உபதேசம் செய்து, ஒரு பிறவியிலேயே அது உண்டாகும்படி பக்தியைப் பிறப்பிப்பேன் என்று கூறி, மானசீகமாக உண்டாக்கிய சூரிய காந்திக்குச் சமானமான ஒளியையுடைய சக்கரத்தைக் காட்டி, இது உருண்டு சென்று விழும் இடமே உங்களுக்குச் சித்திகளை அளிக்கவல்ல இடமாகும் என்று கூறி, அதை உருட்டிவிட்டார். முனிவர்களும் பிதாமகரைப் பணிந்து விடைபெற்று, அந்தச் சக்கரத்தைத் தொடர்ந்து சென்றார்கள். அந்த நேமியானது நெடுந்தூரம் சென்று நல்ல புனிதமான நிர்மலமானதோர் இடத்தில் விழுந்தது. அது விழுந்த காரணத்தால், அந்த வனம் நைமிசவனம் என்ற பெயரைப் பெற்றது. அந்த இடம் தான் முற்காலத்தில் பல முனிவர்களும் வேத வேதாங்கங்களைப் பழகியவர்களாய், நாஸ்திகர் முதலானோரை வாயடக்கிச் செயலடக்கி, யாவருக்குமே நன்மையுண்டாகும்படியாக செயல்களை இடைவிடாமல் செய்து வந்த இடமாகும். அத்தகைய சிறப்பையுடைய வனமே, பிறகு நைமிசவனம் என்றும் நைமிசாரணியம் எனவும் வழங்கலாயிற்று.

3. வாயுபகவான் நைமிசவனத்தை அடைந்த கதை

இத்தகைய புண்ணிய பூமியாகிய, நைமிசாரணியத்தில் முனிவர்கள் அனைவரும் ஒருங்குகூடி, சிவபகவானை ஆராதித்துக் கொண்டு, முன்காலத்தில் உலக சிருஷ்டியைச் செய்யக்கருதிப் பிரமதேவன் செய்த வகையிலேயே மிகச் சிறந்த சத்திர யாகஞ் செய்யத் துவங்கினார்கள். அவ்வாறு, அநேக காலங்கழிந்த பிறகு அவபிருத ஸ்நானமும் பூரிதக்ஷிணையும் செய்து, யாகம் முடிவாகும் தருணத்தில் பிரமதேவர் அம்முனிவர்களுக்கு முன்பு கொடுத்த வரத்தை நிறைவேற்றக் கருதி தம் மாணவனான வாயுதேவனுக்குக் கட்டளையிட்டார். அந்த வாயுதேவனோ யாவற்றையும் பிரத்தியக்ஷமாகக் காணக்கூடியவனும் புலன்களை வென்றடக்கியவன் நாற்பத்தொன்பது மருந்து கணங்கள் புடைசூழப் பணி செய்யப் பெற்றவன். பிராண அபானாதி விருத்தி பேதங்களால் அணிமாதி அஷ்ட ஐசுவரியங்களையுடையவன். உதக பாகத்தைச் சூரிய கிரணங்களால் மேகரூபமாகச் சேர்ந்து, உலகங்களைப் போஷிப்பவன். ஆகாயத்தையே பிறப்பிடமாகக் கொண்டவன். சப்த ஸ்பரிச குணங்கள் இரண்டையும் உடையவன். அக்கினி முதலிய தேஜஸுகளுக்குக் காரணன். அந்த வாயுதேவன், அவ்வகையே நைமிசவனத்தை அடைந்து, அம்முனிவர்களின் ஆசிரமத்தை அணுக, அங்கு நெடுங்காலம் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்கள் யாவரும் கண்டு பூர்வம் பிரமதேவர் கூறிய வார்த்தைகளை நினைத்து மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வாயுதேவனை வணங்கி, பொன்மயமான ஆசனமளித்து, அவனை அதில் வீற்றிருக்கச் செய்து, அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் உபசரித்து நின்றார். வாயுபகவான் அவர்களை நோக்கி, நீங்கள் அனைவரும் பெரும் புண்ணிய சாலிகள், மகான்கள் என்று புகழ்ந்து, முனிவர்களே!

நீங்கள் சிறந்ததோர் யாகத்தைச் செய்தவர்கள். ஆகையால் பகவானின் திருவருளால் நலமாக இருக்கிறீர்களா? இந்த யாகமானது, ராக்ஷசபாதை முதலிய இடையூறுகளில்லாமல் பரிபூரணமாக நிறைவேறியதா? இந்த யாகத்தை முடித்த பிறகு என்ன செய்தீர்கள்? என்று சிவ சிந்தனையுடைய வாயுபகவான் முனிவர்களைக் கேட்டார். முனிவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன், அவரைப் பணிந்து, வாயுதேவா! எங்கள் கீர்த்தி விளங்கும்படி தாங்கள் இங்கு எழுந்தருளின்மையால், இப்போது தான் எங்களுக்குச் சகல நன்மைகளும் உண்டாயின. முன்பு நாங்கள் அஞ்ஞான முடையவர்களாய், எங்களுக்கு ஞானம் உண்டாக வேண்டும் என்று கருதி பிரமதேவரை அடைந்து அவரை உபாசிக்க, அவருக்கு எங்களிடம் கருணையுண்டாகி, யாவருக்குஞ் சிறந்தவனும், பரமகாருண்ய ஸ்வரூபியுமாக வுள்ளவனே ருத்திரன். அவ்வுருத்திரனை, குதர்க்கம் செய்யாமல் உண்மையாகப் பக்தி செய்பவனே தரிசிப்பான். அந்தச் சர்வேஸ்வரனுடைய பக்தியானது, அந்த மகாதேவனுடைய அநுக்கிரகத்தினாலேயே உண்டாகும். அத்தகைய அனுக்கிரகத்தால், பரமானந்த சுகம் உண்டாகும். ஆகையால், அந்தப் பகவானுடைய அநுக்கிரகத்தை நீங்கள் அடைய வேண்டி, மந்திர சாமர்த்தியத்தால், நைமிசாரணிய வனத்திலிருந்தே தீர்க்கமான சத்திரயாகத்தைப் பரமகாருண்யனாகிய சிவபெருமானைக் குறித்துச் செய்வீர்களாக. அந்தப் பெருமானின் திருவருளாலேயே உங்களுடைய யாகமானது பரிபூரணமாகும் காலத்தில் வாயுபகவான் அங்கு வருவான். அந்த வாயுபகவானால் நீங்கள் ஞானவான்களாவீர்கள். ஞானத்தால் நல்லபுகழை அடைவீர்கள் என்று கூறி எங்களை வாழ்த்தியனுப்பி வைத்தார். நாங்களும் அன்று முதல் தங்கள் வருகையை எக்காலமும் விரும்பியவர்களாய் ஆயிரம் திவ்விய வருஷங்களாக இந்தச் சத்திரயாகத்தைச் செய்திருக்கிறோம். நாங்கள் இந்த யாகத்தின் முடிவு நேரத்தில் எழுந்தருளீர்கள் ஆகையால் இனி நாங்கள் விரும்பத் தக்கது ஏதுமில்லை என்று முன்பு நடந்தவற்றைச் சொன்னார்கள். வாயுதேவன், அவர்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ந்து, அவர்களுடைய ஞான விருத்தியை விரும்பி, படைப்புக்காலம் முதற்கொண்டு நடந்தேறிய சர்வேஸ்வரனுடைய மகிமைச் சிறப்புக்களையெல்லாம் சங்கிரகமாகச் சொல்லத் துவங்கினான்.

4. சிவஞான நிலை

நைமிசாரணியவாசிகளான தவமுனிவர்கள், வாயுபகவானை நோக்கி, சுவாமி! தாங்கள் எந்த வகையாக இந்தச் சிவஞானத்தை அடைந்தீர்கள். பிரமதேவருக்கு தாங்கள் எப்படி மாணவரானீர்கள்? இவற்றை எங்களுக்கு விளக்கமாகக் கூறவேண்டும் என்று வணக்கமாகவும் விநயமாகவும் கேட்டார்கள். அதற்கு வாயுதேவன் கூறலானான். மாமுனிவர்களே! இப்போதைக்குப் பத்தொன்பதாக நிகழ்ந்த சுவேதலோஹித கல்பத்தில் நான்முகப்பிரமன் சிருஷ்டி செய்ய விரும்பி, மகாகடினமான தவத்தைத் தன் தந்தையாகிய சிவபெருமானைக் குறித்து, அநேக காலஞ் செய்தார். பரமபதி அந்தத் தவத்திற்கு மகிழ்ந்து ரூபவான்களில் ரூபவானாகிய கவுமார பருவத்துடன் சுவேதன் என்னும் பெயர்கொண்ட தேவதேவனாகிய சர்வலோக நாயகனையே நமஸ்கரித்து காயத்திரியுடன் சிறந்த ஞானத்தை அடைந்து, பிரபஞ்ச படைப்பில் சிறந்த புத்திமானாய், சராசரப் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தான், சாக்ஷõத் சர்வேசனுடைய திருவருளால், ஞானமடைந்த பிரமதேவனால் என் தவமகிமை காரணமாக, நான் அதனை அடைந்தேன் என்று கூறினான். முனிவர்கள், சுவாமி தாங்கள் பிரமதேவனால் அடைந்த உண்மைகளுக்கெல்லாம் உண்மையாகிய ஞானம் யாது? எந்த ஞான அதிஷ்டானத்தால் புருஷன் திவ்விய சுகத்தை அடைவான்? அத்தகைய சிவஞான ஸ்வரூபத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டனர். வாயுதேவன் கூறலானார்.

முனிவர்களே! பசு, பாசம், பதி என்பவற்றின் வியாபகமாகிய ஞானத்தை, நான் முதலில் பிரமதேவனால் அறிந்தேன். சுகத்தை விரும்புவோன் அத்தகைய ஞானத்தில் அநுஷ்டானம் செய்யவேண்டும். அவித்தையால் உண்டாகிய துக்கம், ஞானத்தால் நீங்கும், வஸ்து பரிச்சேதமான ஞானம் மூவகைப்படும். அவை அஜடம், ஜடம், அஜட ஜடங்களுக்கு அதிபதி என்பனவாகும். அவற்றிலே அஜடம், பசுவென்றும் ஜடம் பாசம் என்றும் அஜட ஜடங்களுக்கு அதிபதி, பசுபாசங்களுக்கு பதி என்றும் சொல்லப்படும். தத்துவம் அறிந்தவர்கள், அக்ஷரம், க்ஷரம், க்ஷராக்ஷர விலக்ஷணன் என்று அவற்றையே சொல்லுவார்கள். அவற்றிலே அக்ஷரம் - பசு, க்ஷரம் - பாசம், க்ஷராம்க்ஷரம் அக்ஷரா க்ஷரங்களுக்குப் பிரிவு எனப்படும் என்று கூறினார். அக்ஷரம் என்பது எது? க்ஷரம் என்பது எது? இந்த அக்ஷரா க்ஷரங்களுக்குப் பிரபுவான வஸ்து எது? இவற்றை விளக்கிச் சொல்லவேண்டும் என்று முனிவர்கள் கேட்டார்கள். அதற்கு வாயுதேவன் கூறலானான்.

க்ஷரம் என்பது பிரகிருதி, அக்ஷரம் என்பது புருஷன். இவ்விரண்டையும் பிரேரணை செய்யும் மூன்றாவது பொருள் பரமேஸ்வரன் மாயை என்பதே பிரகிருதி: மாயையால் வியாபரிக்கப்பட்டவனே... புருஷன். ஞானத்தை ஆசரிக்கும் தமசும் கர்மமுமாகிய இரண்டினால் முன்னே சொன்ன பிரகிருதி புருஷர்களுக்குச் சம்பந்தம் உண்டாகிறது? பிரேகனாகவுள்ளவன். சாக்ஷõத் சர்வேஸ்வரனாகிய சிவபிரான். மாயை என்பது மஹேஸ்வர சம்பந்தமான ஒரு சக்தி. ஞானாத்மகனேமாயாவரணமுடையவன். ஞான ஸ்வரூபனுக்கு மாயாவரணம் உண்டாவதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், ஞானத்தை மறைக்கத்தக்க தமோ குணமேயாகும். சிவபெருமான் எப்போதுமே தமோ குணம் இல்லாத விசுக்தன். அந்த மாயா வரணமும் சலாதிகளும் சர்வ வியாபியாகவுள்ளவனுக்கு உண்டாகின்றன. போகார்த்தமான கர்மமானது. மலக்ஷயத்தால் நசிக்கிறது. கலை, அவித்தை, ராகம், காலம், நியதி என்னும் ஐந்தும் காலாதிகள் என்பன. புண்ணிய பாவ ஸ்வரூபமாகவுள்ளது. கர்மம், அது சுகதுக்கங்களைப் பயனாகக் கொண்டது. அதற்கு ஆதி இல்லை புண்ணிய பாவநலிவே அதன் அந்தகம். கர்மமானது, அஞ்ஞாத்மாக்களிடமே ஆசரயித்துள்ளது. போகம் என்பது கர்ம நாசத்திற்குரியது. போக்கியம் என்பது அவியக்தம். கண் முதலிய இந்திரியங்களும் மனம் முதலிய அந்தக் கரணங்களும் பொருந்திய சரீரமே போக சாதனம், சிவதத்துவச் சிந்தனையால் சிறப்பான சர்வேசானுக்கிரகம் உண்டாகும். அந்த அநுக்கிரகத்தால் மலநலிவு உண்டாகும். அத்தகைய மல நாசத்தால் சிவ சம்பந்தமடைகிறான் என்று வாயுதேவன் கூறினான்.

முனிவர்கள் காலாதி ஐந்திற்கும் தனித்தனியாக தொழில்கள் யாவை? ஆன்மா புருஷன் என்றும் போக்தா என்றும் ஏன் சொல்லப்படுகிறது? அவ்வியக்தம் என்பதில் ஸ்வரூபம் என்ன? அவ்வியக்தத்தை எந்த உருவத்துடன் அநுபவிக்கிறான்? அதை அநுபவிக்கும் போது எது காரணம்? சரீரம் என்பது எது? என்று கேட்டனர். அதற்கு வாயுதேவன், புருஷனுடைய ஞானத்தையும் கிரியையும் காணச் செய்கிற சக்திகள் வித்தை என்றும் கலை என்றும் பெயரைப் பெறும் இராகராகம் என்பது இரஜோகுணத்தால் உண்டான விஷய விருப்பம் காலம் விவச்சேதகமானது. நியதி நியமத்தைச் செய்வது. சத்துவாதி குணங்களின் உற்பத்திக்குக் காரணமானதால், படைப்புக்கு முன் காணப்படாததாய் படைப்புக்குப் பிறகே காணப்படுவதாக உள்ளது. அவ்வியக்தம் இந்த அவ்வியக்தத்தைச் சுகதுக்கங்களால் பிரமிக்கப்பட்ட மனதையுடைய குணவிசிஷ்டனான புருஷன் மூவகையாக அநுபவிக்கிறான். இந்தப் பிரகிருதியில், சத்துவ, ரஜோ, தமோ குணங்கள் மூன்றும் பிறந்தன. அவை அப்பிரகிருதியில் எள்ளில் எண்ணெய் போல் அதிசூஷ்மமாக உள்ளன. சுகஸ்வரூபமும் சுகத்துக்கு ஹேதுவாக உள்ளதும் சத்துவகுணம். துக்கஸ்வரூபமும் துக்கத்துக்கு ஹேதுவுமாக உள்ளது ரஜோகுணம். மோஹஸ்வரூபமும் ஸ்தம்ப மோஹாத்மகமாக உள்ளது. தமோகுணம் சத்வகுணத்தால் ஊர்த்துவகதியும் ராஜச குணத்தால் மத்தியாகதியும் தமோ குணத்தால் அதோகதியும் உண்டாகும் என்று சொல்லப்படும். சப்தாதி சூஷ்ம தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகாசாதி பூதங்கள் ஐந்தும், சக்ஷúராதி ஞனேந்திரியங்கள் ஐந்தும் வாக்கு முதலிய கன்மேந்திரியங்கள் ஐந்தும், பிரதானம், மஹத்துவம், அஹங்காரம், மனம் என்ற நான்கும் உண்டாகும் போது அவற்றிற்குக் காரணபூதமாகவுள்ளது. போக்கியரூபமான அவ்வியக்தம், அது சரீராதி சாரிய தசையில் பரிணமித்த காலத்தில் மண்ணானது குடம் ஆனாற்போல நாமரூபாதிகளுடன் பரிணமித்துப் பேதமுற்று வியக்தமாகிறது. இந்த உதாரணத்தால் குடமானது மண்ணைவிட வேறானதல்ல. அதுபோல உடலானது அவ்வியக்தத்தைவிட வேறானதல்ல. இது போக்கியம் இதரமான புருஷாதிகம் அல்ல என்றான்.

அதைக் கேட்ட முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, தாங்கள் இதுவரையில் கூறிய புத்தி இந்திரிய சரீரங்களைக் காட்டிலும் வேறாகவுள்ள ஆத்மா என்னும் பெயரையுடைய பொருள் எங்கே உள்ளது? என்று கேட்டார்கள். புத்தி என்பது இந்திரிய சரீரங்களுக்கு வேறாகவும் சர்வவியாபகமாகவும் நித்தியமாகவும் விளங்கும் ஆத்மா என்னும் பொருள் ஒன்றுள்ளது. ஆயினும் அதை நிரூபிப்பது மிகவும் கஷ்டத்தால் அடையத்தக்கது. சொப்பன அவஸ்தையில் எழுந்திருந்தவன் நான் நன்றாகத் தூங்கினேன் என்று கூறுவதால், புத்திக்கும் ஸ்மிருதிக்கும் அபேதமுண்மையால் புத்தியை ஆத்மா என்று சொல்லக்கூடாது. சட்சுராதி இந்திரியங்கள் தத்தமது நியமமான ரூபாதிகளை மாத்திரமே கிரகிக்குமே யல்லாமல் அந்நியமான எல்லா விஷயங்களையும் கிரகிக்க மாட்டாது. ஆகையால் இந்திரியங்களையும் ஆன்மா என்று சொல்வதற்கில்லை நசிக்கும் இயல்புடைய தேகமானது உள்ளதுவரை தேக வேதனை ஒழிகின்றது. தேகத்தின் அதிஷ்டானமாகவுள்ள பரம்பொருள் இல்லாவிட்டால், அத்தேக முடிவில் அந்தப் புண்ணிய பாவங்கள் முடியவேண்டுமல்லவா? அவ்வாறின்றித் தோத்திரப் பிராப்தியிலும் ஜன்மாந்தர புண்ணிய பாவபயன்களை அனுபவிக்கிறோம். ஆகையால் தேகத்தையும் ஆன்மா என்று சொல்வதற்கு இல்லை. ஆகையால் அந்தரியாமியாகவுள்ள ஆத்மஸ்வரூபம் வேறு ஒன்று உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தப் பரமாத்மஸ்வரூபம் எல்லாப் பொருட்களிலும் வியாபித்துள்ளது. எல்லாப் பொருட்களும் அந்தப் பரமாத்மாவில் இருப்பன. அவ்வாறு இருப்பினும் அதைப் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. சக்ஷúராதி இந்திரியங்களாலும் யோகாப்பியத்தால் பழகிய மனோந்திரியத்தாலும் கிரகிக்கத்தக்கதல்ல. அந்த ஆன்மா ஆணல்ல: பெண்ணல்ல: அலியுமல்ல: சரீரமுடையவர்களில் சரீர மில்லாதவன்: சலிப்பவற்றுட் சலியாத தாணு. இத்தகைய ஆத்ம சொரூபத்தைத் திரனாயுள்ள புருஷன் கிரவணாதி அப்பியாசத்தால் எப்போதும் தரிசித்துக் கொண்டிருக்கிறான். அதிகம் சொல்வானேன்! தேகத்தைவிட பரமாத்ம ஸ்வரூபம் வேறானது. அதை வேறு அல்ல என்றும் தேகமே பரமாத்மா என்றும் நினைப்பவர்கள் சரியான ஞானிகளல்ல புருஷனுக்கு உண்டாயிருக்கும் சரீரமானது, புனிதமில்லாததும் சுவாதீனமில்லாததும் துக்கமுடையதும் அநித்தியமானதும் விபத்துக்களுக்குக் காரணமானதுமாகும்.

இத்தகைய சரீரத்தை அடைந்த புருஷன், தன் காமானுகுணமாகச் சுகதுக்கங்களையும் மூடத்தன்மையையும் உடையவனாகிறான். ஜலத்தில் நனைக்கப்பட்ட பூமியானது முளைகளை உண்டு செய்வது போல, அஞ்ஞானத்தாலுண்டான கர்மமானது நாசமுடையதும் துக்கங்களுக்கு இடமானதும் ரோக விசிஷ்டமானதுமான தேகத்தை உண்டாக்குகிறது. அத்தகைய தேகங்கள் எத்தனையோ கழிந்தன. எத்தனையோ இப்பொழுது இருக்கின்றன. எத்தனையோ இனி வரவிருக்கின்றன. அத்தேகங்களிலெல்லாம் ஜீவபுருஷர்கள் இருந்து கொண்டு, அழிவற்ற பரமாத்ம ஸ்வரூபத்தைக் காணாமலேயே இருக்கிறார்கள். இப்புருஷன் மாயையால் மறைக்கப்பட்டு, மாயைக்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் ஆகாயத்தில் அசையும் மேகக்கூட்டத்தில் மறைந்த சந்திரனைப் போலத் தேகங்களில் காணப்படுகிறான். ஆத்மாவிற்கு மனைவி மக்களுடைய சம்பந்தம் என்பதே கிடையாது. அப்படியிருக்கக் கடலில் பல நதிகளின் மூலமாக வந்து சேர்ந்த விறகுகளுக்குள்ள சம்பந்தத்தைப் போலவும் அவை அலைகள் முதலிய உபாதிகளால் பிரிந்து விடுவதைப் போலவும் ஆன்மாவிற்கு மனைவி மக்கள் முதலானவர்களின் சையோக வியோகங்கள் உண்டாகின்றன. புருஷன் மட்டும் சரீரத்தைக் காண்கிறானோ தவிர சரீரம் அந்தப் புருஷனைக் காணமாட்டாது. சரீரத்தையும் ஜீவனையும் பரமாத்மாவாகிய பரமனே காண்பானேயன்றி, அவ்விரண்டும் அவனைக் காணமாட்டாது. ஹிரண்ய கர்ப்பாதி பிபீலிகாந்தமான யாவும் பசுக்கள் ஞானமானது பசுக்களுக்கே உண்டாகத்தகும். பாசத்தால் பிணைக்கப்பட்டுச் சுகதுக்கங்களை அநுபவிக்கும் பசுவை ஈசுவரனுடைய லீலா பூத சாதனமானவன் என்று பெரியோர்கள், கூறுவார்கள். அஞ்ஞானமுடைய ஜீவனே, பசுபதியைக் கண்டறியாது. மோட்சம் அடையாமல், தனக்குச் சுகதுக்கங்கட்கு அநுகுணமான சுவர்க்க நரகங்களைச் சர்வேசுரப் பிரேரணையால் அநுபவிக்கிறான்.

அநந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய் பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தாவாய், பசு பாச விமோசனனாக விளங்கும் பிரபு ஒருவன் உண்டு. அந்தப் பிரபு இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்ச சிருஷ்டி எப்படி நடக்கும்? பசு பாசங்களால் பிரபஞ்ச சிருஷ்டி விரிவடைந்திராதா என்று கேட்பீர்களாயின் அது ஒருக்காலும் சரிவராது. ஏனென்றால், அவை இரண்டும் அசேதன ஸ்வரூபமும் அஞ்ஞான மயமுமாக விளங்கிடுவதால் ஜகத் என்பது புத்திமானாலன்றி அஞ்ஞானமுடையவனால் ஆகத் தகுந்ததல்ல. ஆகையால் பதிக்கே ஜகத் சிருஷ்டிக் காரணத்துவம் உண்டேயன்றி பசுபாசங்களுக்குக் கிடையாது. குருடனாகவுள்ளவனை ஒருவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு செல்லும்போது அவனும் நடப்பது போல், பசுவானது ஈஸ்வரப் பிரேரணையால் சிறிது ஜகத் கர்த்திருத்துவமுடையதாகவும் விளங்கும். இத்தகைய நியாயங்களால் ஜீவன் வேறு என்றும் ஜீவர்களுக்குத் தலைவனான பரமாத்மா வேறு என்றும் தேகம் வேறு என்றும் உணர்ந்து, ஈஸ்வரனால் ஜீவன் அநுக்கிரகிக்கப்படவேண்டும் என்னும் ஞானமுடையவனே மோட்சத்தையடையலாம். பதி, பசு, பாசங்களுக்குத் தாரதம்மியம் உணர்ந்தவனே பிரமவித்தாகின்றான். பிறப்பை ஒழிக்கிறான். க்ஷராக்ஷரங்களுடன் கூடிய பரமாத்ம ஸ்வரூபமே, வியக்தாவியக்த ரூபமான பிரபஞ்சத்தைப் படைத்தும் காத்தும் அழித்தும் விளங்கும். பதி பசு பாசங்களின் லக்ஷணங்களே அறியத்தக்கவை. இந்த மூன்றையுந்தவிர அறியத்தக்கவை பிறிதொன்றுமில்லை. எள்ளில் எண்ணெயும், தயிரில் நெய்யும், நதியில் ஜலமும் விறகில் தீயும் விளங்குவது போல, ஜீவாத்மாவில் பரமாத்மா விளங்குவான். இந்திர ஜாலவித்தை செய்பவன் தன் சக்திகளால் பல வடிவங்களாகக் காணப்படுவது போல பதியாகிய சங்கரபகவான் தான் ஒருவனாகவே நின்று தன் சக்திகளால் பலவித அண்டபிண்ட பிரம்மாண்ட ஜீவகோடிகளாகக் காணப்படுகிறான்.

ஏக ஏவ ருத்ரோ நத்விதீ யோஸ்திகஸ்சந
ஸம்ஸ்ருஜ்ய விஸ்வம் புவநம் கோப்தாம்தே ஸம்சு கோஸ!

இரண்டாவது பொருளற்றவனும் ஒன்றியானவனும் ருத்திர பகவானேயன்றி பிறன் ஒருவன் அல்லன். அத்தகைய சாம்பவ மூர்த்தி சகல லோகங்களையும் சிருஷ்டி, ஸ்திதி, ஸங்காரம் செய்து வருகிறான். அவ்விறைவன் எங்கும் விழியுடையவன். எங்கும் முகமுடையவன். எங்கும் கரங்களுடையவன். எங்கும் பாதமுடையவன். அந்தப் பகவானே ஆகாயத்தையும் பிற பூதங்களையும் படைத்தவன்.

யோதேவா நாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ
ருத்ரோம ஹர்ஷிரிதி ஸ்ருதி:

எல்லாத் தேவர்களுக்குங்காரண பூதன். பிரமனைத் தேவர்களில் முதலில் படைத்தவன். ஆகையால் யாரைக் காட்டிலும் அதிகன் என்றும் மஹருஷி என்றும் சுருதிகள் கூறும் பரம புருஷனும் அழிவற்றவனும் ஸ்திரனும் சூரிய வர்ணமுடையவனும் மாயைவிடப் பரமானவனும் அணுஅண்டமாகவும் அண்டம் அணுவாகவும் சிறிது பெரியதுமானவனும் தனக்குமேல் பரமற்றவனுமாகிய பரம்பரனால் இந்தப் பிரபஞ்சம் நிறைந்துள்ளது. தான் ஒருவனே அசையாத மரத்தைப் போன்றவன் ஊர்த்துவலோகத்தில் இருப்பவன். அந்தப் பகவானுடைய சங்கற்ப மாத்திரத்தாலேயே சராசரப் பிரபஞ்சம் முழுவதும் தோன்றியது.

ஸர்வாநந சுரோ க்ரீவ ஸர்வபூத குஹாஸயா;
ஸர்வ வ்யாபீச பகவாம் ஸ்தஸ்மாத் ஸர்வகத: ஸிவ
ஸர்வத: பாணி பாதோயம் ஸர்வாக்ஷிஸி ரோமுக:
ஸர்வத: ஸ்ருதிமாந் லோகே ஸர்வமாவ்ருதயதிஷ்டதி
ஸர்வேந்த்ரிய குணபாஸ: ஸர்வேந்த்ரிய விவர்ஜித:
ஸர்வஸ்யப் புரீஸாந; ஸர்வஸ்ய ஸரணம்ஸுஹருத்:

அந்தப் பகவான் உலகிலுள்ள எல்லா முகங்களும் எல்லாச் சிரங்களும் எல்லாக்கிரீவங்களும் தனதாகவுடையவன். எல்லா பூதங்களின் இதயமே உறைவிடமாகக் கொண்டு ஸர்வவியாபியாக நிற்பதால் ஸர்வக்ஞன். எவ்விடத்தும் உள்ள கரசரணங்களும் நேத்திரங்களும், சிரங்களும், முகங்களும் தனதாகவுடையவன், எவ்விடத்திலுமுள்ள புத்திகளும் தன் அகண்டாகாரமான புத்தியாகக் கொண்டவன். ஆகையால் அண்டபிண்டம் முழுவதும் அவதரித்து உள்ளவன். ஆனால் மேலே சொன்ன இவையாவும் பரமார்த்திகமல்ல. எல்லா இந்திரியங்களின் குணங்களுக்கும் ஆபாசன், இந்திரியங்கள் இல்லாதவன். இவ்வாறு இருப்பினும் எல்லாவற்றிற்கும் பிரபுவும் அரக்ஷகனும் மித்திரனும் அந்தப் பரமசிவனேயாகும். அவன் கண்களில்லாமலேயே காண்பவன்; செவிகளின்றிக் கேட்பவன், எல்லாம் உணர்ந்தவன், உணர்பவன். தன்னை ஒருவரும் அறியமாட்டாதவன். அத்தகையவனைப் பரமபுருஷன் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அணுவுக்கு அணுவானவனும் ஆன்மாக்களுடைய புத்தியில் எப்போதும் வாசஞ்செய்பவனும் ஆயிரம் யக்ஞரஹிதனும் யாவரும் தனக்காக யக்ஞங்களைச் செய்யும்படியாகவுள்ள தலைவனும், விசேஷமான மகிமாதிசம்முடையவனுமாவன். பழமையாக உள்ளவனாயினும் கிழப்பருவம் அடையாதவனும் எல்லாப் பிராணிகளிடத்தும் வியாபித்திருந்தாலும் பிறப்பற்றவனும், பிரபுவானவனுமான பரமாத்மா ஒருவனாக இருந்தும் தன் சக்தியால் எல்லா உலகங்களையும் படைத்து, முடிவில் நசிக்கச் செய்பவனும் அந்தச் சிவ பகவானேயாகும்.

அந்தப் பகவானை அவனுடைய கருணையினாலேயே சம்சார துக்கங்களை ஒழித்த புண்ணிய புருஷர்கள் தரிசிப்பார்கள். உலகத்திற்குத்தாயும் அஜா என்னும் பெயருடையதும் சத்வ ரஜஸ் தமோ குணமுடையதும், சிவசம்பந்தமானதுமான சக்தியே... பிரகிருதி, அந்தப் பிரகிருதியை அஜனான புருஷன் சேவிக்கிறான். அதே பிரகிருதியை அனுபவித்து மற்றொருவன் விட்டு விடுகிறான். ஜீவேசுவரர் இருவரும் சமானரூபமுடையவராய் தேகத்திலிருப்பவர்கள். அவர்களில் ஜீவன் கர்மபயனைப் பரமசாதுவாக அநுபவிக்கிறான். ஈஸ்வரன் அதைக்காண்கிறான். பிரகிருதியில் உண்டான சம்சாரத்தில் ஜீவனானவன் மூழ்கித் துக்கமடைந்து, தன் நிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும். பரம காருண்யனான சர்வேஸ்வரனை எப்போது காண்பானோ, அப்போது துக்கங்களையெல்லாம் ஒழித்து ஈஸ்வரனாகிறான். வேதங்களும் யாகங்களும் கிரியைகளும் பூதபவிஷ்யாதி காலங்களும் கூடிய பிரபஞ்சத்தை மாயாவிசிஷ்டனான அந்தச் சர்வேஸ்வரன் படைத்து, அதில் மாயையுடன் கூடியிருக்கிறான். மாயையைப் பிரகிருதி என்று உணரவேண்டும். அந்த மாயையினாலே எல்லாப் பிரபஞ்சமும் சிருஷ்டி செய்யப்பட்டது. இந்தப் பிரபஞ்சமும் சிருஷ்டி செய்யப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்துக்கு சூஷ்மத்திற்கும் சூஷ்மமாக விளங்கும் ஈசானனே பிரபு என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சத்திற்குச் சிருஷ்டி கர்த்தாவும் கிரியைகளைச் செய்விப்பவனும் அந்தப் பரமசிவனேயென்று தெரிந்து கொண்டால், அவனுக்கு அகண்டமான மோக்ஷ சாம்ராஜ்யம் உண்டாகத் தடையில்லை. அத்தகைய பரமசிவனே காலஸ்வரூபனும் பிரபஞ்சத்திற்குப் பாலகனும் பிரபுவுமாக விளங்குகிறான் என்று தெரிந்து கொண்டவனே, மிருத்யு பாசத்திலிருந்து விடுபடுகிறான். பாலில் நெய்யானது அதிசூஷ்மமாக இருப்பது போல எல்லா பூதத்திலும் பரமாத்மாவாகிய சிவபெருமான் அதிசூஷ்மமாக விளங்குகிறான் என்று தெரிந்தால் எல்லாப் பாவங்களும் விலகும். இந்தச் சிவபெருமானே பரமானதேவன். பிரபஞ்சத்திற்கெல்லாம் பிரேரணகர்த்தா சிவபெருமானேயாவான். எல்லோருடைய இதயத்திலும் வசிப்பவன் சிவபெருமான் என்பதையுணர்ந்தவன் முக்தியை அடைகிறான்.

முனிவர்களே! அந்தச் சிவபெருமானுடைய பிரளய காலஸ்வரூபத்தைச் சொல்கிறேன். இராப்பகல் சதசத்ரூபமான பிரபஞ்சம் ஊர்த்துவ அதோமத்ய பாகங்கள் முதலியயாவும் இல்லாதிருக்கும்போது, ஒருவனாகிய பரமசிவனே ஞான ஸ்வரூபனாக விளங்குவான். அவ்விறைவனுக்கு ஒப்பானவன் ஒருவனுமில்லை. சிவா என்னும் பெயர் மாத்திரையாக விளங்குகிறானேயன்றி ரூபாதிகுணங்களற்றவன். பிரளய காலத்தில் ஆன்மாக்கள். அந்தப் பகவானுடைய தக்ஷிணமுகத்தை அடைவார்கள். அதில் பிரமபரமாகவுள்ள அநந்தமான வித்தையை அவித்தை என்ற பெயருடைய க்ஷரம் அக்ஷரம் என்பவை சூஷ்மமாக இருக்கின்றன. அதில் அக்ஷரம் வித்தையும் க்ஷரம் அவித்தையும் ஆகும். இவ்விரண்டுக்கும் பிரபுவாயிருக்கும் அன்னியன் அந்தப் பரமசிவனேயாகும் சிவபெருமான். இந்திர ஜாலக்காரன் போல அந்த க்ஷராக்ஷரங்களை நானாவகையாகக் காண்பித்து திசாதிசைகளாகப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருப்பதால் அப்பரமசிவனையே எல்லாவற்றிற்கும், காரணன் என்று சொல்லப்படும். சுபாவமும் சகலவகையான சப்தமும் எல்லா அர்த்தமும் எல்லாக்குணமும் பரிணமிக்கச் செய்து போக்கிய போகத்திருத்துவமான பிரபஞ்சத்தை தானே அதிஷ்டித்துள்ளான். மாமுனிவர்களும், தேவர்களும் பரமாத்மாவான அப்பரமசிவனையே குஹ்யோப நிஷத்தில் பராத்பரனென்றும் காரண காரணன் என்று இதுவரையில் எண்ணிறந்த சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்தவன் என்றும் உணர்ந்திருக்கிறார்கள். மனதால் கிரகிக்கத்தக்கவனும் பிரபஞ்சத்திற்கு ஸ்தானபூதனும் பிரபஞ்சத்தில் உற்பத்தி லயங்களை உண்டாக்குபவனும் கலாசர்க்கம் செய்பவனுமாம் என்று அந்தப் பரமசிவனை உணர்ந்து, தேகத்தை விடுத்தவர்களுக்கு முக்தி உள்ளங்கை நெல்லிக் கனியாகும். சிலர் இந்தப் பிரபஞ்சத்தில் உற்பத்தி நாசங்களை இயற்கை என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மோஹிதர்களாய், காலத்தாலேயே பிறப்பு இறப்புகள் நிகழ்வன என்று கூறுகிறார்கள். அவை சரியல்ல. ஆனால் சர்வேஸ்வரனுடைய மகிமையினாலே தான் நிகழ்கின்றன. காலத்திற்கு காலஸ்வரூபன் பரமசிவன். அந்தப் பரமசிவனால் சொல்லப்பட்ட கர்மங்களால், உலகில் பிறப்பும் இறப்பும் உண்டாகின்றன. அந்த பகவான் கர்மத்தை பலவகையாகச் செய்து அதைப்பலவாறு பரிணமிக்கச் செய்து காலாதி தத்துவங்களில் சத்துவகுணத்துள் சம்பந்தம் அடைந்து ஆகாசாதி அஷ்டமூர்த்திகளாலும் ஸத்வாதி முக்குணங்களாலும் வித்யா வித்தைகளாலும் ஒன்றாகிய காலத்தாலும், ஆத்ம குணங்களாலும் எல்லாவிதமான இந்த பிரபஞ்சத்தைச் சுயமாக நடத்துகிறான்.

பிரபஞ்சத்தின் குணங்களை அனுசரித்து கர்மங்களையும் சுபாவங்களையும் அவற்றுக்கேற்பவே கொடுக்கிறான். அத்தகைய கர்மங்களும் விருப்பு வெறுப்புகளின்றி செய்தால் அவற்றின் பயன்கள் செய்தோரைச் சேரமாட்டாது. இவ்வாறு கர்மநாசமான பிறகு யாதொன்றுமில்லாமல் தத்துவச் சொரூபம் உண்டாகும். இதுவே போத்ரு போகங்களுக்கு ஆதியாக இருக்கும் யோக நிமித்தம். ஆகையால், இறப்பு, நிகழ், எதிர் என்ற முக்காலங்களுக்கும் வேறானவனும் நிர்க்குணமும் பிரபஞ்சோற்பத்திக்குக் காரணனும், ஜகத்பதியும், பூஜிதனும் எல்லோருடைய இதய கமலத்திலும் இருப்பவனுமாகிய சாம்பசிவமூர்த்தியை உபாசிக்க வேண்டும். காலாதிகளைவிட பிரபஞ்சம் வேறாகப் பரிணமித்துள்ளது. எப்பொழுதும் தர்மங்களை வகித்துள்ளதும் பாவங்களை ஒழிக்கத்தக்கவனும் போகேசனும் பிரபஞ்சமே இடபாகவுடையவனும் தேவர்களுக்கெல்லாம் தேவனும் ஈசுரர்களுக்கெல்லாம் பரமேசனும் பதிகளுக்கெல்லாம் பரமபதியும் எல்லா உலகங்களுக்கும் பிரபுவும் பிறரால் தனக்கு ஒரு காரண காரியம் இல்லாதவனும் சமானாதி சராகிதனுமாக இருப்பவன் பரமசிவன். அவனுடைய பலதிறப்பட்ட சந்தியே சுவாப்வகி என்று ஸ்ருதிகளால் சொல்லப்பட்டுள்ளது. ஞானபல கிரியைகளால் இந்தப் பிரபஞ்சம் நியமிக்கப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்திற்கு பர்த்தா பிறன் ஒருவனுமிலன். சங்கரிப்பான் ஒருவனுமிலன். காரணங்களுக்கெல்லாம் காரணமே இந்த உலகத்திற்குப் பிரபு. அந்தப் பரமேசனுடைய பிறவி எங்குமில்லை. பிறவிக்கு காரணமான மலமாதிகள் அந்தப் பகவானுக்கு இல்லை. அந்த இறைவனே எல்லாப் பூதங்களிலும் வியாபித்து, சர்வாந்தராத்மாவாகவும் தர்மஸ்வரூபமாகவும் எல்லாவற்றிற்கும் சாட்சியாகவும் நிர்க்குணமாகவும் சஞ்சல மனமுடையவர்களுடைய கர்மங்களுக்கெல்லாம் சரோசனாயும் சமயோசிதமாகப் பிரஜோற்பத்தி செய்பவனாகவும் விளங்குவான். அந்த மூர்த்தியை மனதில் தரிசிப்பவர்களே, நித்திய சுகத்தை அடைவார்கள். அந்தப் பகவானை நித்தியர்களுக்கு நித்தியனும் சேதனர்களுக்குச் சேதனும் அநேகமாயுள்ளவர்களுக்கெல்லாம் ஒருவனாகவே உள்ளவனும், சாங்கியயோகத்தால் அடையத்தக்கவனும் ஜகத்காரணனும் ஜகத்பதியாகவுமுள்ளவனுமாவான் என்று உணர்ந்தவர்கள்.

சகல பாசபந்தங்களிலிருந்தும் விடுபடுவார்கள். பிரபஞ்ச நிர்மாணகர்த்தாவும் சர்வமும் உணர்ந்தவனும் ஜீவர்களின் கர்மஸ்வரூபத்தின் நிர்மாணகர்த்தாவும் அவற்றின் காரணம் அறிந்தவனும் காலத்தை நடத்துபவனும் அநந்த கல்யாண குண விசிஷ்டனும், மாயஜீவர்களுக்குப் பிரபுவாக இருப்பவனும் ஸத்வாதி குணங்களுக்கு ஈசனும் பாசத்தைக்கடக்கச் செய்யவல்லவனுமாகி முதலில் நான்முகனைப் படைத்து வேதங்களைப் பயிற்றியவனும் நிஷ்களங்கனும் நிஷ்கிரியனும் சாந்தனும் தோஷமற்றவனும் நிரஞ்சனனும் அமிர்தமயமான ஏரிக்கு அஜனயாகவுள்ளவனும் ஆகிய பரமசிவனே நமக்கு நாயகன் என்று தன் ஞானத்தால் உணர்ந்தவனே முக்தியை அடையவல்லவன். பிறவியையும் மரணத்தையும் இடைவிடாது பெற்றுத் துன்புற்றுத் திரியும் ஆன்மாக்கள் சிவதத்துவத்தை உணர்ந்தாலன்றி அவற்றை ஒழித்து மோட்சத்தை அடையமாட்டார்கள். மாமுனிவர்கள் யாவரும் தம் தவ மகிமையாலும் வேதாத்தியயனம் முதலியவற்றாலும் பூர்வ கல்பத்தின் வேதாகமங்களில் இரகசியமானதும் பாவங்களை ஒழிப்பதும். புனிதமானதும் சந்நியாசிரமத்துக்கு உசிதமானதும் ஆகிய இந்த ஞானத்தைப் பிரமதேவனால் உபதேசிக்கப் பெற்றார்கள். அதை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த ஞானத்தைப் பொறுமை யில்லாதவனுக்கும் தன்னைப் பணியாதவனுக்கும் அசூயை உடையவனுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் சிஷியன் இல்லாதவனுக்கும் உபதேசிக்க கூடாது. சர்வேசனாகிய பரமசிவனிடத்தும் குருவினிடத்தும் பக்தியையுடைய உத்தமனுக்கே இந்த ஞானம் உபதேசிக்கத்தக்கது. ஆகையால் சுருக்கமாக இன்னுஞ் சொல்லுகிறேன். பிரமாத்ம ஸ்வரூபனான அந்தப் பரமசிவன் படைப்புக் காலத்தில் தானே எல்லாப் பொருட்களையும் படைத்து சங்கார காலத்தில் யாவற்றையும் சங்கரிப்பவன் என்று உணர்வீர்களாக என்று வாயுதேவன் முனிவர்களுக்கு உணர்த்தியருளினான்.

5. காலஸ்வரூபம்

முனிவர்கள், வாயுபகவானை நோக்கி, சுவாமி! உலகத்தில் யாவுங் காலரூபமான ஈஸ்வர தேஜசினாலே உண்டாவன. காலத்தை கருதாமல் எவ்விடத்திலும் எதுவும் இல்லை. காலரூபமான ஈஸ்வரனுடைய அந்தர்க்கதமாக இருக்கும். சம்சார ரூபமான இந்தப் பிரபஞ்சமானது அடிக்கடி உற்பத்திகள் ஏற்படுவதால் சக்கரம் போலச் சுழல்கின்றது. பிரமனும் விஷ்ணுவும் உருத்திரனும் தேவர்களும் அசுரர்களும் யாவரும் அந்தக் காலரூபனான சர்வேசனுடைய நியதியை அனுசரித்து நடக்கிறார்களேயன்றி அதை அதிக்கிரமித்து நடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் இறப்பு, நிகழ்வு எதிர்வு என்ற பேதங்களை அடைந்து பிரஜைகளுக்கெல்லாம் வயோதிகத்தை உண்டாக்கி, எல்லாவற்றிற்கும் பிரபுவாக இருந்து கொண்டிருக்கும் காலம் யாது? அந்தக் காலம் யாருடைய சுவாதீனத்தில் இருக்கிறது! அந்தக் காலத்தின் ஸ்வாதீனத்தில் எவன் அடங்கியிருக்கமாட்டான்? இந்த விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டார்கள். வாயுதேவன் கூறலானான்.

காலம் என்பது கலை, காஷ்டை, நிமிஷம் முதலிய பேதங்களையுடைய கலைகளால், வியாபகமான தேகமுடையதும் காலஸ்வரூபம் என்னும் பெயரால் பிரசித்தி பெற்றதுமான மஹேஸ்வர சம்பந்தமான சிறந்த தேஜஸ் தாவரசங்கமாத் மகமான பிரபஞ்சத்திற்கு அது நீக்கமுடியாதது, சர்வேசனுடைய ஆக்ஞா ரூபமாகவுள்ளது. காலஸ்வரூபமான பரமாத்மா விடத்தில் அக்கினிலிருந்தும் மஹா கதாசக்தி உண்டானாற்போல, அநேக அம்சங்களில் ஓர் அம்சமாக ஒரு சக்தி உண்டாயிற்று. காலத்தின் சுவாதீனத்திலேயே இந்தப் பிரபஞ்ச முழுவதும் கடவாமல் இயங்குகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் சுவாதீனத்தில் அந்தக் காலம் இல்லை! அத்தகைய காலம், சர்வேசனாகிய சாம்பவமூர்த்தியின் சுவாதீனத்தில் இருக்கிறது. சிவபெருமான் அந்தக் காலத்தின் சுவாதீனத்தில் இருப்பவன் அல்லன். ஆகையால், அந்தக் காலத்தினிடம் சிவ சம்பந்தமான தேஜஸ் விளங்குகிறது. காலத்துடன் சிவதேஜஸ் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தக் காலத்துக்கு ஓர் எல்லை இல்லை. காலத்தை அதிக்கிரமிப்பதற்கு ஒருவருக்கும் சாத்தியமில்லை. காலத்தால் வந்த கர்மத்திலிருந்து ஒருவனும் தப்பித்துக் கொள்ள முடியாது. இறைவனின் அருளால் உண்டான காலத்தை ஒரு குடைக்கீழாளும் அரசனும், சமுத்திரமானது அதன் கரையைக் கடவாது இருப்பதுபோல, அதிக்கிரமிக்க வல்லவனாகமாட்டான். இந்திரிய நிக்கிரகம் செய்து ஜகம் முழுவதையும் வென்ற மகானுபாவர்களுக்கும் காலத்தை மீற முடியாது. அவர்களைக் காலமானது மீறுகிறது. ஆயுர்வேதத்தை நன்றாக உணர்ந்து சிறந்த அவிழ்தங்களை முடித்துப் புசித்தவர்களேயானாலும் காலத்தால் உண்டாகும் மரணத்தை யாருமே தவிர்க்க வல்லவர்களல்லர். சம்பத்தாலும் திவ்விய ரூபத்தாலும் ஆசாரத்தாலும் வல்லமையாலும் ஒன்றைச் செய்ய ஆலோசித்த பொழுது, அது காலபலத்தால் கைகூடி வர வேண்டுமேயன்றி, அவனாலேயே செய்துமுடிக்க முடியாது. விருப்பற்றதும் விருப்புற்றதும் யோசியாததும் யோசித்ததும் சம்பவிப்பதும் சம்பவியாதொழிவதும் காலமேயன்றி, வேறன்று. ஒரே காலத்தில் ஒருவன் துக்கிக்கிறான். ஒருவன் சந்தோஷிக்கிறான்.

இவ்விருவரும் காலத்தின் ஸ்வரூபம் இப்படியெனத் தனித்தனி கூறுவாரன்றி அந்தக் காலத்தையறிய மாட்டார்கள். இளவயதுள்ளவன் விருத்தனாகிறான். பலவான் துர்ப்பலமுள்ளவனாகிறான். ஐஸ்வரியவான் வறியவனாகிறான். இவை போன்ற மாறுதல்கள் காலத்தால் வந்த விசித்திரங்களாக ஒரு தொழிலை முடித்ததற்கு உயர்குடிப் பிறப்பு, சீலம், பலம், சமஸ்காரம் முதலியன எல்லாம் காரணமாகாதவை. ஆனால் காலத்தாலேயே அதனை முடிக்கவோ, தடுக்கவோ செய்யமுடியும். புருஷத் தன்மையின்றி ஆடல் பாடல் வாத்தியாதிகளால் ஜீவனஞ் செய்வோர் சம்பன்னர்களாகவும், சம்பன்னர்கள் ஏழ்மையால் யாசிப்பவர்களாகவும் மாறுகிறார்கள். இவற்றிற்கு நிபுணத் தன்மையும் நிபுணத் தன்மையின்மையும் அனுகூலமில்லாவிட்டால், சாஸ்திரோக்தமான அவுஷதமுங்குணத்தைக் கொடுக்கமாட்டாது. காலாநுகூலத்தால் அந்த அவுஷதமே அதிவிரைவில் பயனைக் கொடுக்கும். அக்காலத்தில் ஒருவன் இறக்கமாட்டான். பிறக்கவும் மாட்டான். சிறந்த புஷ்டியை அடையமாட்டான். சுகதுக்கங்களை அனுபவிக்க மாட்டான். ஒன்றுமே அடையான். காலத்தாலேயே காற்றுவீசுவதும் மேகம் மழை பொழிவதும் பயிர்கள் விளைவதும் ஜீவலோகம் ஜீவிப்பதுமாகும். இத்தகைய காலத்தின் ஸ்வரூபத்தை உண்மையாக உணர்ந்தவன் காலாத்மஸ்வரூபத்தை அதிக்கிரமித்து காலாதீதமான பரமசிவனை அடைவான், அத்தகைய ஞானிக்கு காலமாவது, பந்தமாவது, பிரகிருதியாவது பிரபஞ்சமாவது கிடையாது. இத்தகைய காலமாகிய, விசித்திர ரூபத்தையுடைய பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம் என்று வாயுதேவன் கூறலானான்.

6. கால அளவும் தேவர் ஆயுளும்

முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, சுவாமி! காலத்தின் பரிமாணம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டது? காலத்திற்கு ஆதியும் அந்தமும் யாவை? என்று கேட்டார்கள். வாயுதேவன் அவர்களை நோக்கிக் கூறலானான்.

காலத்திற்கு ஆதியாய்க் கணக்கிடத் தக்கதுநிமிஷம். சாந்தியாதீத பதவியே அதற்கு அந்தமாகவுள்ளது. நிமிஷம் பதினைந்து கொண்டது காஷ்டை. காஷ்டை பதினைந்து கொண்டது கலை. கலை முப்பது கொண்டது முகூர்த்தம். முகூர்த்தம் முப்பது கொண்டது இராப்பகலாகிய ஒரு திதி (நாள்), திதி முப்பது கொண்டது ஒரு மாதம். அது கிருஷ்ணபக்ஷம், சுக்கிலபக்ஷம் என்று தனித்தனியாகப் பதினைந்து திதிகளையுடையது. மாதம் இரண்டு கொண்டது ஒரு ருது. ருதுக்கள் மூன்று கொண்டது ஓர் அயநம். அயநம் இரண்டு கொண்டது ஒரு வருஷம். இது மானுடருடைய கால அளவை இதில் மானுட மாதம் ஒன்று கொண்டது. பிதுரர்களுக்கு இரவு பகல் கூடிய ஒருநாள். இதில் கிருஷ்ணபக்ஷம் பிதுரர்க்குப் பகலும் சுக்கிலபக்ஷம் இரவுமாகும். இந்த மானுட வருஷம் ஒன்று கொண்டது தேவர்களுக்கு ஒருநாள். அதில் உத்தராயணம் பகலும் தக்ஷணாயனம் இரவும் ஆகும். இத்தகைய தினங்கள் முப்பது கொண்டது தேவர்களுக்கு ஒருமாதம் (அத்தகைய மாதங்கள் பன்னிரண்டு கொண்டது மாநுஷ வருஷங்கள் முந்நூற்று அறுபது) தேவர்களுக்கு ஒரு வருஷம். அத்தகைய தேவ வருஷம் நாலாயிரம் கொண்டது. முற்பட்டதாகிய கிருதயுகம் அதற்குச் சந்தி, சந்தியம்சங்கள் தனித்தனி நானூறு தேவவருஷங்கள். தேவவருஷங்கள் மூவாயிரம் கொண்டது. இரண்டாவதாகிய திரேதாயுகம், இதற்குச் சந்தி சந்தியாம்சங்கள் தனித்தனி முந்நூறு தேவ வருஷங்கள். தேவ வருஷங்கள் இரண்டாயிரம் கொண்டது. மூன்றாவதாகிய துவாபரயுகம். அதற்குச் சந்தி சந்தியம்சங்கள் தனித்தனி நூறுதேவ வருஷங்கள். இந்தவகையாகச் சந்தி சந்தியம்சங்கள் கூடிய நான்கு யுகங்களுக்கும் தேவ வருஷங்கள் பன்னீராயிரம், அத்தகைய சதுர்யுகங்கள் எழுபத்தொன்பது கழிந்தால் ஒரு மந்வந்தரம், சதுர்யுகங்கள் ஆயிரங்கொண்டது ஒரு கற்பம். ஒரு கற்பத்தில் பதினான்கு மந்வந்தரங்கள் கடக்கின்றன. இத்தகைய கற்பங்கள் ஆயிரம் பதினாயிரங்களாக, இதுவரை அநேகம் கழிந்தன. அவற்றை விரித்துரைக்க முடியாமலும் கணக்கின்மையாலும் ஒருவரும் அறிய மாட்டார்கள்.

முனிவர்களே! ஒரு கற்பமானது நான்முகப் பிரமனுக்கு ஒரு நாளின் பகல் அத்தகைய பகல் ஆயிரம் கொண்டது. பிரமனுக்கு ஒரு வருஷம். அத்தகைய வருஷம் எண்ணாயிரம் கழிந்தால் பிரமனுக்கு ஒரு யுகம் பிரமயுகங்கள் ஆயிரம் கழிந்தால் பிரமனுக்கு ஒரு சவனம். அத்தகைய சவனம் ஒன்பதினாயிரம் கழிந்தால் பிரமதேவனுடைய ஆயுள் முடிவாகும். அத்தகைய பிரமனுடைய ஒரு பகலில் பதினான்கு இந்திரப்பட்டங்கள் கழியும். பிரமனுடைய ஒரு மாதத்தில் நானூற்று இருபது இந்திரபட்டங்களும், ஓர் ஆண்டில் ஐயாயிரத்து நாற்பது இந்திர பட்டங்களும், ஆயுள் முழுமைக்கும் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்த பட்டங்களும் மாறுபடும். அத்தகைய பிரமன் ஒருவன் இறந்தால் விஷ்ணுவுக்கு ஒரு தினமாகும். அத்தகைய தினங்கொண்ட கால அளவையாக நூறு ஆண்டுகள் கழிந்தால் விஷ்ணுவும் மறைவார். அவ்வாறு விஷ்று மறைந்தால் உருத்திரனுக்கு ஒருநாள். அத்தகைய உருத்திரன் மறைந்தால் மஹேஸ்வரனுக்கு ஒருநாள் மகேஸ்வரன் இவ்வாறு காலங்கழித்த பிறகு சதாசிவனுக்கு ஒருநாள். அத்தகைய சதாசிவனும் சிவத்தின் ஒரு பகலில் மறைவார். இத்தகைய வகையில் யாவருக்கும் கால அளவை பரமேஸ்வரனால் நிச்சயிக்கப்பட்டு, அவரது விருப்பத்தின்படி நடைபெற்று வருகிறது. பரமசிவத்துக்கு ஆயுள் வரையறை கிடையாது. அவரது ஆயுளுக்கு அளவேயில்லை. அவர் ஒரு காலத்திலும் மடிபவரல்லர். சிவபெருமானின் பகற்காலத்தில் படைப்பும் இரவுக்காலத்தில் மகாப்பிரளயமும் நிகழும். உலகத்திற்கு இதத்தைக் கருதிய சர்வேஸ்வரன் இந்த வகையாகக் காலத்தை நிர்மாணஞ் செய்திருக்கிறார். பிரஜைகளும் பிரஜாபதிகளும் மூர்த்திகளும் சுராசுரர்களும் இந்திரியங்களும் இந்திரிய விஷயங்களும் மஹாபூதங்களும் தன்மாத்திரைகளும் புத்தியும் தத்தமது அதிஷ்டான தேவர்களுடன் பிரளயகாலத்தில் சர்வேஸ்வரனிடம் லயமடைவான். சிவத்தின் பகற்காலத்தில் அவரது கட்டளையால் தமது வடிவுடன் விளங்குவார். விஸ்வாத்மாவும் காலஸ்வரூபமாகிய பரமசிவத்தின் சக்தியாதீனமாகச் சகலமும் விளங்கும். அத்தகைய பகவான் சங்கரருக்கு நமஸ்காரம் என்று வாயுதேவன் கூறலானான்.

7. சக்தியாதி பிரளயாந்தம்

முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, சுவாமி! சர்வேஸ்வரன், எல்லாவுலகங்களையும் எப்படிப் படைத்தான்? எப்படிப் பிரதிஷ்டித்தான்? முதலில் பிறந்தது யாது? எதனால் இந்தப் பிரபஞ்சம் விரிந்தது? எதனிடம் இவையாவும் லயம் அடையும்? என்று கேட்டனர். வாயுதேவன் கூறலானான்.

சக்தி விசிஷ்டமான சர்வேஸ்வரனிடத்தில் மாயை பிறந்தது. அந்த மாயையால் அவ்வியக்தம் பிறந்தது. மாயாசக்தி விசேஷமே அவ்வியக்தம். அந்த மாயா சக்தியால் சாந்தியதீச பதமும் விக்தியாபதத்தால், பிரதிஷ்டபதமும் பிரதிஷ்டபதத்தால் நீவ்ருத்தி பதமும் பிறந்தன. இந்த வகையாகச் சிருஷ்டி கலை ஐந்துமாம், இவைமுறை தவறிய இடத்தில், முன்புகூறிய படைப்புக்கள் யாவும் அடியோடு அழிந்து விடும். அவ்வியக்தத்தை ஜகத்காரணம் என்றும் அதுவே படைப்பைச் செய்கிறது என்றும் சொல்வார்களாயினும் பரமாத்ம ஸ்வரூபத்தால் அதிஷ்டிக்கப்பட்ட அவ்வியக்தத்துக்கு ஜகத் காரணத்துவம் உண்டு. அன்றி, தனியே அவ்வியக்தமானது அசேதனமாதலின் கர்த்தாவாக மாட்டாது. இந்தச் சராசரப் பிரபஞ்சம் முழுவதும் சர்வக்ஞத்துவமுடைய கர்த்தாவால் செய்யப்படவேண்டுமாதலால் அறிவு சிறிதும் இல்லாத அவ்வியக்தமும் சாமானிய அறிவையுடைய புருஷதத்துவமும் கர்த்தாக்கள் என்று சொல்லக்கூடாது. சமர்த்தனும் சுதந்தரனும் அநந்தசக்தி விசிஷ்டனும் சர்வக்ஞனும் அநாதிநிதனும் மகேசுவரியம் உடையவனும் ஆகிய மகாதேவனே ஜகத்கர்த்தாவாவான். புருஷனுடைய பிரவிருத்தியும் அவ்வியக்தத்தின் மஹத்தாதி தத்துவ விகாரங்களும் சத்தியவிரதனாகிய சாம்பவமூர்த்தியின் ஆக்ஞையினாலேயே நடக்கின்றன. இந்த அநாதியான விஷயங்கள் சத்புருஷர் களுடைய மனதில் எப்போதும் விளங்கும். அற்பர்கள் இதை அங்கீகரிக்கமாட்டார்கள். தாங்களே, கர்த்தாக்கள் என்று கூறுவார்கள். பிரமதேவனுக்கு நூறு ஆண்டுகள் கழிந்தால் பரார்த்தமாகும். பரார்த்தம் இரண்டு ஒழிந்தால் மகாப்பிரளயம் வரும் அப்பொழுது அவ்வியக்தமானது எல்லாக் காரியங்களையும் ஒடுக்கிக் கொள்ளும். புருஷன் பிரகிருதி சம்பந்த முடையவனாகத் திரிபு இல்லாமல் இருப்பான். பிரகிருதி புருஷர் குணசாயமுற்று, பரசிவத்தில் ஐக்கியமாவார்கள். புருஷனுக்கு மேல் சிவனே ஏகனாக இருப்பான். இவ்வாறு இரவாகிய மகாப்பிரளயம் ஒழிந்தபிறகு சிவபெருமான் தம் மாயையால் புருஷனைப் பிரகிருதியால் பொருந்தச் செய்து, ஆகவேண்டிய பரிணாமங்களையுங் கொடுப்பான். இந்த முறையிலேயே அவ்வியக்தத்தில் எல்லாச் சுகங்களும் உண்டாகும். மந்திர அத்துவா பதார்த்துவா, வன்னாத்துவா, புலனாத்துவா, தத்துவாத்துவா, காலத்துவா, என்ற ஆறு அத்துவாக்களுக்குத் தலைவனும் அநந்த சக்தியோடு கூடியவனும் தன் சக்திகளில் ஒரு சக்தியின் எண்ணிறந்த அம்சங்களில் ஓர் அம்சத்தால் எல்லாப் பிரபஞ்சத்தையும் படைத்தளித்து அழிப்பவனாகிய சதாசிவமூர்த்திக்கு நமஸ்காரம்.

8. அண்ட உற்பத்தி

வாயுதேவன், சிவபெருமானைத் துதித்து, முனிவர்களை நோக்கி, மேலும் கூறலானான்.
முனிவர்களே! அவ்வியக்தத்திலிருந்து, புத்தி, அகங்காரம், மனம், இந்திரியங்கள், தன் மாத்திரைகள், பூதாதிகள் யாவுந் தோன்றும் அந்தக் காலத்தில் ஜகத்காரண பூதர்களாகிய பிரமன், விஷ்ணு, உருத்திரர் பிறந்தார்கள். அம்மூவருக்கும் சிருஷ்டி ஸ்திதி சங்காரம் என்ற மூன்று தொழில்களும் கைகூடும்படி சிவபெருமான் தம் சக்தியால் திருவருள் புரிந்து, அவர்களால் அந்தந்தச் செயலை நிறைவேற்றுவான். அவனே யாவருக்கும் கடவுள். அந்தக் கடவுள் மூவரும் சமானர்கள். அவர்கள் ஒருவரிடத்தொருவர் பிறந்தும் ஒருவரையொருவர் பாலித்தும் ஒருவரால் ஒருவர் விருத்தியடைந்தும் இந்த வகையாக மும்மூர்த்திகளாக விளங்குவார்கள். அவர்கள் எல்லோருக்கும் கடவுளாகிய மஹேஸ்வரன் சர்வாத்மாவும் யாவற்றுக்கும் ஆதாரமானவனும் சக்திக்கு உற்பத்திகாரணனும் மும்மூர்த்தி களுக்கும் பிரகிருதி புருஷர்களுக்குக் காரணனும் விளையாட்டாகச் சிருஷ்டி செய்த பிரபஞ்சத்திற்குப் பிரபுவும் யாவருக்கும் பரனும் நித்தியனுமாவான். அவனே பரதத்துவப் பொருள் பிரகிருதியிலிருந்து புத்தி, கியாதி, மதி, என்ற பெயர்களுடைய மகத்தத்துவம் பிறந்தது. மகத்தத்துவத்தால் மூவகைப்பட்ட அகங்காரங்கள் பிறந்தன. இந்த மூவகை அகங்காரங்களின் பூத தன்மாத்திரைகளும் இந்திரியங்களும் பிறந்தன. சத்துவ குணத்துடன் கூடிய அகங்காரம் வைகாரிகம் எனப்படும். வைகாரிகத்தால் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரங்கள் ஐந்தும் மனமும் பிறந்தன. சாத்துவீக சம்பந்தமான அகங்காரத்தில் ஞானேந்திரியங்கள் ஐந்துக்கும் கர்மேந்திரியங்கள் ஐந்துக்கும் மனதுக்கும் திக்கு முதலிய அதிஷ்டான தேவதைகள் பிறந்தன. தமோகுண சம்பந்தமான அகங்காரத்திலிருந்து சப்தம் பிறந்தது. அந்தக் காரணத்தாலேயே தமோகுண அகங்காரத்துக்குப் பூதாதி என்று பெயர். சப்தத்திலிருந்து ஆகாயமும் ஆகாயத்திலிருந்து ஸ்பரிசமும், ஸ்பரிசத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து உருவமும், உருவத்திலிருந்து தேஜஸும் தேஜஸிலிருந்து ரசமும், ரசத்திலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து வாசனையும் வாசனையிலிருந்து பிருதிவியும், பிருதிவியிலிருந்து ஓஷதிகளும், பூதங்களிலிருந்து சராசரப் பிரபஞ்சங்களும் பிறந்தன என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

புருஷ தத்துவத்துடன் பிரகிருதி பொருந்தவும், அதிலிருந்து உண்டாகிய மகான் முதலாகப் பிருதிவி ஈறாகவுள்ள தத்துவங்கள் இந்தப் பிரமாண்டத்தை உண்டாக்கின. இந்தப் பிரமாண்டத்தில் செயல்களும் சாதனங்களும் செய்யும்படி, இவ்வண்டத்திலேயே ஜனித்து ÷க்ஷத்திரக்ஞன் என்ற பெயர்பெற்ற பிரமன் தோன்றுவான். அந்தப் பிரமனே முற்பட்ட ஜீவன் என்றும் பூதங்களுக்கெல்லாம் ஆதிகர்த்தர் என்றும் வழங்கப்படுவான். அந்தப் பிரமனுக்கு ஞான வைராக்கியங்களை லட்சணமாகவுடையதும் தர்மஸ்வரூபமாகவுள்ள புத்தியால், தான் நினைத்த கர்மங்கள், அவ்வியக்தத்தில் உண்டாவன. முக்குணங்களையும் அங்கீகரித்து உலகத்தைப் படைத்து அழித்து அழிக்கும் இயற்கையனாகிறான். படைக்குங் காலத்தில் நான்கு முகங்களையுடையவன். பாவனத்தில் விஷ்ணு, சங்கரித்ததால் உருத்திரன் என விளங்குகிறான். இத்தகையதாக முக்குணங்களைக் கொண்டிருப்பதால் பிரமனைத் திரிகுணன் என்றும் நால்வகை விபாகமுடையவனாகையால் சதுர்வியூகன் என்றும் முற்பட்டவனாகையால் அஜன் என்றும் பிரஜைகளைப் பாவிப்பதால் பிரஜாபதி என்றும் பெரியோர்கள் வழங்குவார்கள். மலைகள் கடல்கள் யாவும் அந்தப் பிரமனுடைய கர்ப்பத்திலேயே விளங்கும். சூரிய, சந்திரர், நட்சத்திரங்கள், கிரகங்கள், வாயு, உதகம், தேஜஸ் முதலானவற்றுடன் கூடியது அண்டம். அத்தகைய அண்டமானது பதினான்கு உலகங்களைத் தன்னகத்தே பொருந்தியுள்ளது. அந்த அண்டத்திற்குப் பத்துபங்கு அதிகமாகத் தேயவும், தேயுவுக்குப் பத்துப் பங்கு அதிகமாய் வாயுவும், வாயுவுக்கு அதிகமாக ஆகாயமும் சூழ்ந்திருக்கும். ஆகாயத்தை அகங்காரமும் அகங்காரத்தை மஹத்தத்துவமும் மகத் தத்துவத்தை அவ்வியக்தமும் சூழ்ந்திருக்கும். இத்தகைய அண்டமானது ஏழு ஆவரணங்களால் மறைக்கப்பட்டிருக்கும். இத்தகையதாக ஒன்றில் ஒன்று உதித்து, அவ்வாறு உதித்தவாறே ஒன்றில் ஒன்று லயமடையும், குணங்கள் கால விசேஷத்தாலேயே சமமும் அசமும் ஆகின்றன. சாம்மியம் உண்டானபொழுது லயமும், குணவைஷம்யம் உண்டானபோது சிருஷ்டியும் உண்டாகும். இந்த அண்டத்திற்கு ÷க்ஷத்திரம் என்று பெயர். இந்த ÷க்ஷத்திரத்திற்குப் பிரபுவாக இருக்கும் பிரமன், ÷க்ஷத்திரக்ஞன் எனப்படுவான். இத்தகைய அண்டங்கள், அநேக ஆயிரங்கோடி நானாதிசைகளிலும் நேராகவும் குறுக்காகவும் நீரில் கிடப்பன. இந்த அண்டங்களில் நான்கு முகங்களையுடைய பிரமன், விஷ்ணு, ருத்திரன், தத்தமது காரியங்களைச் சிவாக்ஞைப்படிச் செய்து வருவார்கள். அவ்வியக்தத்திலிருந்து தோன்றிய இந்த அண்டத்திற்குப் பரமாக உள்ளவன் சிவபெருமான். அவனே லீலாமாத்திரையாகப் பிரபஞ்ச காரியத்தை நடத்துகிறான். அத்தகைய பரமேஸ்வரனை நான் வணங்குகிறேன்.

9. ஸ்வேத வராஹ கற்பம்

முனிவர்களே! கால நியமமுடைய நான்முகப் பிரமனுடைய ஆயுட்காலத்தின் பூர்வபாகம் முதல் பரார்த்தம் என்றும் அதனைக் காலமுடைய உத்தரபாதம் இரண்டாம் பரார்த்தம் எனவும் சொல்லப்படும். அந்த இரண்டு பரார்த்தங்களின் இறுதியில் அவாந்திரப்பிரளயம் சம்பவிக்கும். அப்போது சகலப் பிராணிகளும் நாசமாகும். பிரமதேவனுடைய ஒவ்வொரு தினத்திலும் பதினான்கு மனுக்கள் மாறுகிறார்கள். அநாதியாகவும் அநந்தமாகவும் எண்ணற்ற கர்மங்களும் மன்வந்தரங்களும் கழிந்துள்ளதால் அவை இவ்வளவு சென்றன என்று கூற இயலாது. அதிக சிரமத்துடன் இத்தனை சென்றன என்று கூறினும் உங்களுக்குப் பயன்படாதாகையால் அந்த விஷயத்தைச் சொல்வதில் எனக்கும் உற்சாகமில்லை. கீழ்ப்போன கற்பங்களிலெல்லாம் முதலில் படைப்பும் இறுதியில் சங்காரமும் இவ்வாறே நடக்கும். இப்போது நடக்கும் கற்பம் சுவேத வராஹ கற்பம். இந்தக் கற்பத்திலும் மனுக்கள் பதினால்வர் உண்டு. சுவாயம்பு மனு முதலிய எழுவரும் சாவர்ணிகள் முதலிய எழுவருமாவர். இவர்களில் வைவஸ்வேதன் ஏழாவான் ஒரு கற்பங்கழித்து மற்றொரு கற்பம் வரும்போது அளவில்லாத மழையுடன் பெருங்காற்று வீசி மரங்களும் செடிகளும் அழியும். அக்கினி பகவான், மூவுலகையும் எரிப்பான். சிலகாலம் பெருமழை பொழிந்து, சமுத்திரங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொந்தளிக்கும். திசைகள் தெரியாது முன்பு ஒருகாலத்தில் பிரளய வெள்ளம் பெருக்கெடுத்து, உலகம் முழுவதையும் அழித்த போது, அந்தச் சமயத்தில் பிரமதேவன் நாராயணனாகிச் சிவயோக நித்திரை செய்து கொண்டு, அகண்டமான ஜலமத்தியில் துயின்றான். ஜனலோகத்தில் வசிக்கும் சித்தர்கள் யாவரும் பலவிதமாகத் தோத்திரஞ்செய்ய நாராயணன் யோகத்துயில் நீங்கி, திசைகளை நோக்கி அவை ஒன்றும் காணாமையால் மிகவும் ஆச்சரியமடைந்து, மலைகள், மரங்கள், ஆறுகள் முதலியவற்றுடன் கூடியதும் விசாலமானதுமாகிய பூமி எங்கே சென்றது என்று ஆலோசித்து, ஒன்றும் அறியாதவனாய், தன் தந்தையாகிய முக்கண் சாம்பவமூர்த்தியை ஸ்மரணை செய்து அவ்வுலகம் நீரில் மூழ்கியது என்பதை உணர்ந்து அந்தப் பிரளய நீரில் மூழ்கி, அந்தப் பூமியை அதன் நிலையில் நிறுத்தவேண்டும் என்ற கருத்தால் அதற்கேற்ற வராக உருவம் எடுக்க நினைத்து எனக்குத் திவ்வியமான வெண்பன்றி உருவம் உண்டாகவேண்டும், என்று கோரினார். உடனே மலை போன்ற பேருருவம் மேக கர்ஜனை போன்ற தொனியும், பயங்கரமான பார்வையும் பருத்து உருண்ட துடைகளும் உயர்ந்த பிருஷ்டமும் உருண்டு திரண்ட முழங்கால்களும், கூர்மையான குளம்புகளும், பதுமராக மணி போன்ற செம்மை வாய்ந்து, உருண்டு கொண்டிருக்கும் விழிகளும், பூரிப்பான தேகமும் நீண்ட செவிகளும் பிரளயகால ருத்திரகோஷம் போல் ஒலிக்கும் உஸ்வாச நிசுவாசங்களும் பிடரிமயிரால் மறைக்கப்பட்ட கன்னங்களும் மின்னல்கள் பிரகாசிக்கும் மேகம் போன்ற பலநிறம் பிரகாசிக்கும் வராக ரூபத்தை அடைந்து பூமியைக் கொண்டு வரவேண்டும் என்று ரஸாதலத்தை அடைந்தார். அப்போது, ஜோதிலிங்கரூபம் எடுத்த சிவபெருமானுடைய திருவடியின் எல்லையைக் காணும்படி வராக வடிவம் எடுத்துச்சென்றது போலிருந்தது. அவ்வாறு எடுத்து வரும்போது ஜனலோகத்திலுள்ளவர்கள், அந்த விஷ்ணுவைக் கண்டு, மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடல் பாடல்கள் புரிந்து மலர்மாரி பொழிந்தார்கள். அதனால் வராகமூர்த்தி மின்மினுப் பூச்சிகளுடன் விளங்கும் மலையைப்போல விளங்கினார். இந்த வகையாகப் பூமியைக் கொண்டுவந்து, சமானமாக நிலைநிறுத்தித் தமது பழைய உருவாகிய பிரம ரூபத்தையடைந்து பழையபடியே மலைகளை இருத்தி, அசைய வொட்டாமற்செய்து, அதன்மீது நான்கு உலகங்களையும் அமர்த்தினார். அதற்குப் பிறகு பிரமதேவன் சிவாக்ஞையால் உலகப்படைப்பைச் செய்யக் கருதினான்.

10. பலவகைப் படைப்புகள்

முனிவர்களே! இவ்வாறு பிரமதேவன் சிருஷ்டி செய்யக் கருதியிருக்கும் போது, தமம், மோசம், மஹாமோசம், தாமிசிரம், அந்ததாமிசரம் என்னும் ஐந்துவகையாக அவித்தையானது பிரமனிடம் தோன்றியது. அவ்வைந்திலிருந்தும் ஐவகைப்படைப்புகள் பிரகாசமற்றவையாகவும் குடத்தில் இட்டவிதைகள் அந்தக் குடத்தால் மறைக்கப்படுவதுபோல, தமத்தினால் மறைக்கப்பட்டிருந்தன. அப்படைப்புகள் இந்திரியங்களால் நிகரகிக்கத்தக்கவை இவை என்பவை உணராமலிருந்தன. முதலில் படைக்கப்பட்ட மலைகளும் விருட்சங்களும் சஞ்சரிக்கமாட்டாமல் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியிழந்து இவற்றால் உலகம் விருத்தியாகாது என்று கருதி விலங்குகளைப் படைத்தார். அவை உள்ளத்தில் மட்டும் யாவற்றையும் உணரும் சக்தியுடையவனாக இருந்தும் பகிர்ப் பிரகாசமில்லாமலிருந்ததால் இரண்டாவது படைப்பாகிய விலங்குகளாலும் மகிழ்ச்சியடையாமல், ஊர்த்துவ லோகத்தில் தேவர்களை படைத்தான். அவர்கள் எப்போதும் சுகத்தை அனுபவித்து உள்ளும் புறமும் ஞானவிசிஷ்டர்களாக இருந்ததால் அவர்கள் தேவர்கள் என்று வழங்கப்பட்டனர். அதற்கு பிறகு அதோ லோகத்தில் மானுடரைச் சிருஷ்டித்தான், அவர்கள் துக்கமும், பிரகாசமும் தமோகுண ரஜோகுணமும் உடையவர்களானார்கள். அதற்குப் பிறகு பேய் பூதம் முதலியன ஜனித்தன. இவ்வகையில் பிரபஞ்சம் தோன்றியது. வேறொரு படைப்பையுஞ் சொல்லுகிறேன், கேளுங்கள்.

முனிவர்களே! முதலில் பிரமதேவரிடமிருந்து மகத்தத்துவமும் பிறந்தது. அதற்குப் பிறகு தன் மாத்திரைகளும் பூதங்களும் தோன்றின. அதற்குப் பின் விகாரங்களை உண்டு செய்யும் இந்திரியங்கள் பிறந்தன. அவை பிரகிருதி சம்பந்தமாகப் பிறந்தன. அதற்குப் பிறகு மலைகளும் மரங்களுமாகிய தாவர சிருஷ்டியும் தோன்றின. அதன்பின், ஊர்த்துவ லோகத்திலுள்ள மானுடசிருஷ்டியும் அதன் பிறகு குமார சிருஷ்டியும் செய்யப்பட்டன. முதலில் சொன்ன மூன்று பிரகிருதியில் பிறந்தது ஜடஸ்வரூபமாதலின் பிராகிருத சிருஷ்டி எனப் பெயர் பெற்றன. இனி குமார சிருஷ்டியைச் சொல்லுகிறேன்.

பிரமதேவன் தன் மனத்தால், ஸநந்தனன், ஸநகன், ஸநாதனன், ஸனத்குமாரன், ரிபு இவர்களையும் சிருஷ்டித்து, நீங்கள் உலக சிருஷ்டியைச் செய்யுங்கள் என்று கூறியனுப்பினார். அவர்கள் சிருஷ்டி செய்ய விரும்பாமல், சிவபெருமானுடைய திருவடிகளைத் தங்கள் இதயதாமரைகளில் இருத்தி ஐம்புலன்களை அடக்கி அகண்டமான பெரிய தவஞ் செய்து கொண்டிருந்தார்கள். அதைக்கண்ட பிரமதேவன், மனஞ்சகியாமல், பெருந்தவஞ்செய்து அந்தத் தவத்தால் ஒரு பயனையுமடையாமல் மனம் வருந்தித் தன் தாமரை மலர் போன்ற கண்களினின்று புகைதோன்றி நீர்த்துளிகளைச் சொரிய, அந்த நீர்த்துளிகளிலிருந்து பூதங்கள் பைசாசங்கள் முதலியவை தோன்றின. அவற்றைக் கண்டு பெரிதும் வருந்திய பிரமதேவன், துக்கத்தால் மூர்ச்சித்து உயிர் மாய்ந்தனன். அப்போது சிவபெருமான், அந்தப் பிரமனுடைய முகத்தில் பதினொரு ருத்திரர்களைப் படைத்து, நீங்கள் படைப்புத் தொழிலைச் செய்யுங்கள் என்றருள, அவர்கள் மழுப்படை முதலியவற்றை ஏந்தியவர்களாய் படைப்புத் தொழில் மிகக்கடினமானது என்று இயையாமல், துக்கித்து ஓடினார்கள். அக்காரணத்தால் அவர்கள் உருத்திரர்கள் என்று வழங்கப்பட்டார்கள். அதற்குப் பிறகு சிவபெருமான் அங்கு இறந்து கிடந்த பிரமனைக் காத்து உயிர்த்தெழுக என்று கூற பிரமதேவன் தூக்கத்திலிருந்து விழித்தது போல எழுந்து, சிவபெருமானைக்கண்டு மகிழ்ந்தான். சிவபெருமான் தம் திருக்கரத்தால் அவனைத் தடவி நீ முன்பு போலச் சிருஷ்டி காரியத்தைச் செய்வாயாக! என்று கூறி, மலரோனே! இவர்கள் என் படைப்பு கைகூடுமாறு உன்னிடத்திலிருந்து என்னால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறினார். அத்தகைய வரத்தை ஏற்ற பிரமதேவன், மனம் மகிழ்ந்து.

ஏவம் பகவதாப்ரோக்தோ ப்ரஹ்மாப்ரீத மநாஹ்யபூத்
நாமாஷ்டகேந விஸ்வாத்மா துஷ்டாவ பரமேஸ்வரம்;
ப்ரஹமோவாச! நமஸ்தே பகவந்ருத்ர பாஸ்கராமித தேஜஸே

நமோ பவாய தேவாய ரஸாயாம்பு மயாத்மநே!
ஸர்வாயக்ஷிதி ரூபாய ஸதாசுரபிணே நம:
ஈஸாய வாயவே துப்யம் நம: ஸ்பர் ஸமயாத்மநே!
பஸூநாம்பதயே சைவ பாவகாயாமித தேஜஸே
பீமாயவ்யோமரூபாய ஸப்த மாத்ராயதே நம:
உக்ராயோக்ர ஸ்வரூபாய யஜமாநாத்மநே நம:
மஹாதேவாய ஸோமாய நமோஸ்த் வம்ருதமூர்தயே!
ஏவம் ஸ்துத்வா மஹாதேவம் ப்ரஹ்மாலோக பிதரமஹ;
ப்ரார்த்யாமாஸ விஸ்வேஸம் கிராப்ணிதி பூர்வயா

என்று இவ்வாறு மகாதேவனை; உலகப் பிதாமகனான பிரமதேவன் துதி செய்து கம்பீரமான வார்த்தைகளால் பிரார்த்தனை செய்து, வரம் பெற்றுத்தன் படைப்புத் தொழிலைப் பண்டு போலச் செய்யத் துவங்கினான். தர்மம், சங்கற்பம், மரீசி, பிருகு, அங்கீரஸன் புலஸ்தியன், புலகன், கிருது, தக்ஷன், அத்திரி வசிஷ்டன் இவர்களை மானசீகமாகப் படைத்தான். இவர்கள் வேத மார்க்கத்தை பின்பற்றி யாக காரியங்களைச் செய்து கொண்டு புராணாதிகளால் துதி செய்யப்பட்டார்கள். பிரமதேவன் உருத்திரர்களுடைய உதவியால், தன் முகத்திலிருந்து தேவர்களையும் கக்ஷத்திலிருந்து பிதுரர்களையும் பின் பக்கத்திலிருந்து அசுரர்களையும் குறியிலிருந்து மானுடரையும் குதத்திலிருந்து இராக்ஷசர்களையும் தமோரஜப் பிரியர்களான நிசரசரர்களையும் சர்ப்பங்களையும்  யக்ஷர்களையும் பூதங்களையும் கந்தர்வர்களையும் படைத்தான். பார்ச்சுவத்திலிருந்து பறவைகளையும் மார்பிலிருந்து செம்மறியாட்டையும் முகத்திலிருந்து வெள்ளாட்டையும் பார்சுவங்களிலிருந்து உரங்களையும் பாதங்களிலிருந்து குதிரை, யானை சரபம் கவயமா, ஒட்டகம், மான் முதலிய மிருகங்களையும், விலாப்புறத்திலிருந்து பசுக்களையும் ரோமங்களிலிருந்து ஓஷதிகளையும் மரங்களையும் செடிகளையும் படைத்தான்.

இவ்வாறு பிரமதேவனுடைய அவயவங்களிலிருந்து அநேகவிதமான பூதகணங்கள், யக்ஷர்கள், பைசாசங்கள், அப்சரசுகள், நரர்கள், கின்னரர்கள், ராக்ஷசர்கள், பசு, பட்சி முதலிய யாவும் கூடிய சராசரப் பிரபஞ்சம் ஒன்றன்பின் ஒன்றாக நித்தியமாக இருக்கத் தோன்றின. இவற்றின் கர்மங்கள் முதலிய சிருஷ்டி செய்த காலத்திலேயே நியமிக்கப்பட்டன. அவை கற்பங்கள் தோறும் தோன்றி நிற்கும். அவை ஹிம்ஸைகள், மிருதுக்குரூரங்கள் தர்மா தர்மங்கள், சத்தியா சத்தியங்கள் ஆகும். ஜீவர்கள் தம் கர்மாநுபவங்களால் அவற்றை அநுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மஹா பூதங்களிலும் இந்திரியங்களிலும் இந்திரியார்த்தங்களிலும் சாரூப்பியாதி பேதமுடைய முக்திகளிலும் பூதங்களுக்கு போகார்த்தமான பிரவர்த்தனையும் அநேக வகையாகப் பிரமதேவனை ஏற்படுத்தியுள்ளான். பூதங்களுக்கு எல்லாம் நாம ரூபங்களும் பிராகிருதமான பூதங்களுக்கு வியாப்தமும், முதலில் வேதசப்தங்களால் கிரகிக்கச் செய்தான். வேதத்தில் கூறிய ஞானச்சிறப்புகளை பிரளயாந்தத்தில் பிறந்த ஜீவர்களுக்குப் பிரமதேவன் கொடுத்தனனேயன்றி தன் இச்சைப்படிச் செய்தவனல்லன். சிருஷ்டி யந்தரத்திலிருந்த அநேகமான ருது லிங்கங்களை அவ்வப்பூதங்களுக்கு யுகங்களில் பிரவிர்த்திக்கச் செய்கிறான். இதுவே பிரமதேவனுடைய அங்கத்தால் உண்டான உலகப்படைப்பு மஹதாதி விசேஷரந்தமாக விளங்குவன, பிருகிருதியாலுண்டான சிருஷ்டி அவ்வியக்தம் என்னும் பீஜத்தால் பிறந்ததும். சர்வேசனாகிய சாம்பமூர்த்தியின் அநுக்கிரகத்தையே விருத்திக்கு காரணமாகப் பெற்றதும், புத்தி என்னும் கிளைகளையுடையதும் இந்திரியாந்தப்ரங்களாகிய போரைகளையுடையதும் மகாபூதப் பிரமாணமுடையதும் அமலமான குணங்களைத் தளிர்களாகவுடையதும், தர்மா தர்மங்களென்னும் மலர்களையுடையதும் சுகதுக்கங்கள் என்ற பழங்களையுடையதும் எல்லாப் பூதங்களுக்கும் ரக்ஷகமுடையதுமாகிய அநாதியாகவுள்ள விருக்ஷம் போன்ற பிரமதேவன், முன்பு கூறிய பிரமவனத்தில் பொருந்திச் சிருஷ்டிக்கு காரண பூதமாக விளங்குவான். அந்தப் பிரமதேவனுக்கு ஆகாயமே சிரம்; சந்திர சூரியர்களே விழிகள், திசைகளே செவிகள், பூமியே பாதம், வாயுவே முகம், இவ்வாறு விராட் ஸ்வரூபமாக விளங்கும். அத்தகைய பிரமதேவனுடைய முகத்திலிருந்து பிராமணரும் தோளிலிருந்து க்ஷத்திரியரும், தொடையிலிருந்து வைசியரும் பாதத்திலிருந்து சூத்திரரும் பிறந்தார்கள். இந்த வகையாகச் சராசரப் பிரபஞ்சம் முழுவதும் பிரமதேவனாலேயே படைக்கப்பட்டன என்று வாயுதேவன் கூறினான்.

11. பிரம்ம, விஷ்ணு உற்பத்தி

முனிவர்கள், வாயுதேவனை வணங்கி, தேவா! தாங்கள் கூறிய படைப்புக்கிரமம், ஈஸ்வர அநுக்கிரகத்தால் உண்டானதாக இருக்க, அந்தப் படைப்பைச் செய்பவன் நான்முகப் பிரமன் செய்வதாகச் சொல்லப்படுகிறதே! இது எங்களுக்குச் சந்தேகமாக இருப்பதால் இதை விளக்க வேண்டும்! மேலும் தாங்கள் இது வரையில் சொல்லி வந்ததில் பிரமனைச் சிவனுடைய புத்திரனாகச் சொன்னீர்கள். பிரமனும் விஷ்ணுவும் ஒருவரிடம் ஒருவர் பிறந்ததாகக் கேட்டிருக்கிறோம். எல்லாப் பூதங்களுக்கும் ஏதுபுதர்களான பிரம்ம விஷ்ணுக்களுக்குப் பிறப்பு என்பது எப்படி உண்டாயிற்று? வாயுபகவானோ! தாங்கள் பிரமதேவரின் மாணவர். உமக்குத் தெரியாத விஷயங்கள் இல்லை. ஆகையால் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்கள். அதற்கு வாயுதேவன், முனிவர்களே! நீங்கள் கேட்ட விஷயம் அருமையானது. இந்த விஷயத்தைப் பற்றி ஒரு சமயம் நான் பிரமதேவரிடம் கேட்ட போது, அவர் எனக்குக் கூறியதைச் சொல்லுகிறேன். கேளுங்கள்! என்று கூறலானான்.

மகேஸ்வரனிடத்தில் ருத்திரன் விஷ்ணு பிரமர்கள் முறையே பிறந்தார்கள். இந்த மூவரும் சர்வேஸ்வரனாகிய பரமேஸ்வரனை நோக்கிப் பெருந்தவஞ்செய்து, மகிமாதிசயங்களை அடைந்தார்கள். அவர்களில் உருத்திரன், பூர்வத்தில் பிரம்ம விஷ்ணு இருவரையும் படைத்தான். மற்றொரு கற்பத்தில் பிரமதேவன் விஷ்ணுவையும் ருத்திரனையும் படைத்தான். இப்படியாக ஒருவர் மற்றொருவரைப் படைத்தும், ஒருவரையொருவர் வெல்லக் கருதியும் வென்றும், கற்பங்களில் நடத்திய விசேஷங்களைக் கண்ட முனிவர்கள் அவர்களுடைய பிரபாவங்களைச் சொல்லிக் கொள்ளுவதுமுண்டு. முன்பு நடந்த தற்புருஷ கற்பத்தில் ஆயிரம் தேவ வருஷங்கள் வரையில் நாராயணன் மேக வடிவங்கொண்டு, சகல லோக நாயகனாகிய சாம்பவமூர்த்தியைச் சுமந்தான். அந்தக் காரணத்தால், அது மேகவாகன கற்பம் என்று வழங்கலாயிற்று. சிவபெருமான். விஷ்ணுவைப் பாராட்டி சிறந்த வரங்களைக் கொடுத்து, அந்த விஷ்ணுவால் உலகங்களைப் படைக்கச் செய்யும்போது, பிரமதேவன் கண்டு அசூயை கொண்டு விஷ்ணுவே! உனக்கு இத்தகைய பிரபுத்துவம் வந்த காரணம் என்ன? நானும் அந்தச் சர்வேசனைக் குறித்துத் தவஞ்செய்து உன்னையே படைப்பேன் என்று கூறி அருந்தவஞ் செய்து சிவபெருமானைத் தரிசித்து, பகவானே, விஸ்வேஸ்வரா! மஹேஸ்வரா! தங்களது வலது புறத்தில் நானும் இடது புறத்தில் விஷ்ணுவுமாகப் பிறந்தோம். எனக்குச் சமானமாக அந்த விஷ்ணுவும் சிருஷ்டியைச் செய்கிறான். தங்களுடைய வரத்தின் சிறப்பால் என்னை அவமதிக்கிறான். என் பக்தியைவிட விசேஷபக்தி தங்களிடம் உண்டோ? நாங்கள் சமானமானவர்களாக இருக்க அவனுக்கு மட்டும் ஏன் மேம்பட்ட அதிகாரங்களைக் கொடுத்தீர்கள்? எனக்கும் அத்தகைய சிறப்பை அளிக்க வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்தான். பகல் என்னும் சூரியனின் கண்களைப் பறித்த சங்கரன். தயாமூர்த்தியாய்ப் புன்னகையுடன் அந்தப் பிரமனுக்கும் சிறந்த சக்தியைக் கொடுத்தார். உடனே, பிரமன் கம்பீரமாக நடந்து, திருப்பாற் கடலை அடைந்து சூரியகாந்திப் பிரகாசத்துடன், பொன்னாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பெற்ற திவ்விய விமானத்தில் ஆதிசேஷ சயனத்தில் யோக நித்திரை செய்து கொண்டிருக்கிற செந்தாமரைக் கண்ணும் நான்கு தோள்களும் கம்பீரமான சரீரமும், நவரத்தின சகிதமான ஆபரணமும் சங்கு சக்கர தாரணமும் சந்திர, பிம்பம் போன்ற முகமும் ஸ்ரீ வற்சம் பொருந்திய மார்பும் புன்னகையும், பூதேவியின் மெல்லிய கரங்களின் ஸ்பரிசத்தால் சேவிக்கும் பாதங்களுமுடையவனாய் விளங்கும். ஸ்ரீ விஷ்ணு மூர்த்தியைக் கண்டு, விஷ்ணுவே! நீ பூர்வம் என்னை விழுங்கிப் படைத்தது போலவே, இப்போது நானும் உன்னை விழுங்கிப் படைப்பேன் என்று கூறினான். உடனே விஷ்ணு எழுந்து புன்னகை செய்ய, பிரமன் அவ் விஷ்ணுவை விழுங்கி, மீண்டும் தன் புருவங்களிடையே தோற்றுவித்தார். அந்தச் சமயத்தில் அவ்விருவருடைய வன்மையையும் காணக்கருதிய கடவுள் நாயகன், அருந்தவத்தால் அறியக் கூடிய திருமேனி வெளிப்பட்டு நிற்க; பிரம விஷ்ணுக்கள் இருவரும் பெரு மகிழ்ச்சியுடன் சாஷ்டாங்கமாக அவரைப் பணிந்து துதி செய்தனர். அவர்களுக்கு அருள் புரிந்து கடவுள் நாயகர் மறைந்தார்.

12. உருத்திரர் உற்பத்தி

முனிவர்களே! பிரதிகற்பங்களிலும் பிரமனின் படைப்பு நிறைவேறும்படி சிவபெருமான் அநுக்கிரகிக்க உருத்திரன் தோன்றுவான். அந்த வரலாற்றைச் சொல்லுகிறேன். அண்டங்களில் விளங்கும் பிரமன், கற்பங்கள் தோறும் பிரஜைகளைப் படைத்து அவர்கள் விருத்தியடையாமையால், தன் படைப்பு பரவாமைக்காக மனம் வருந்த, அந்தத் துக்கத்தை விலக்கவும் பிரஜைகள் விருத்தியடையவும் அவ்வக்கற்பங்களில், காலஸ்வரூபனும் பரமசிவனால் கட்டளை செய்யப்பட்டவனும் நீலலோஹிதனும் உருத்திர கணாதிபதியுனுமாகிய உருத்திர பகவான் பிரமனிடம் தோன்ற அந்தப்பிரமனை அநுக்கிரக்கிறான். அந்த ருத்திரனே, ஷட்குண ஐசுவரியவானும் எல்லாப் பூதங்களையும் கற்பாந்தரத்தில் சங்கரிப்பவனும் தேஜோமயஸ்வரூபனும், பரமேஸ்வரனால் பிரேரிக்கப்பட்டவனும், பரமேஸ்வர சம்பந்தமான சக்தியுடன் கூடியிருப்பவனும், சிவ சின்னங்களுடையவனும் சிவநாமம் தரித்தவனும் சிவரூபமே உடையவனும், எல்லாத் தொழில்களிலும் சமர்த்தனும் சிவ சமானமானவனும் சிவாக்ஞையைப் பரிபாலிப்பவனும் ஆயிரஞ் சூரியர்கள் ஒரேகாலத்தில் பிரகாசித்தாற் போன்ற திருமேனியுடையவனும், சர்ப்பங்களையே ஹாரகேயூர குண்டல கங்கண் கடிசூத்திரங்களாகவுடையவனும் முன்னே காலம் செய்த பிரம விஷ்ணுக்களுடைய கோடானுகோடி சிரங்களை மாலையாக அணிந்த தோள்களையும் மார்பையும் உடையவனும் கங்கையின் அலைகளால் நனைக்கப்பட்ட ஜடையையுடையவனும், கைலையைப் போன்ற பெரிய வெள்ளி இடபவாகனமுடையவனும் மேக கோஷம் போன்ற கண்டத்வனியையுடையவனும் பிரளய காலாக்கினியைப் போன்ற காந்தியையுடையவனும் கோரரூபதாரியுமாக பிரத்தியட்சமாகத் தரிசனம் தந்து, பிரமனுக்கு ஞானத்தை யளித்து, படைப்பதற்குச் சகாயஞ் செய்கிறான். இத்தகைய உருத்திர அனுக்கிரகத்தால், பிரதி கற்பங்களிலும் பிரமதேவன் பிரவாக ரூபமும் நித்தியமுமாகிய படைப்பைச் செய்கிறான். ஒரு கற்பத்தில், நீலலோஹிதனாகிய இந்த ருத்திரன் படைக்க வேண்டும் என்ற விருப்பமுடைய பிரமனால் பிரார்த்திக்கப்பட்டவனாய், ஜடையையுடையவர்களும் பயமற்றவர்களும் நீலகண்டர்களும் முக்கண்ணர்களும், ஜராமரணம் அற்றவர்களும், சூலபாணிகளும் தனக்கு ஒப்பானவர்களுமாக எண்ணற்ற உருத்திரர்களை பிரமன் கண்டு சர்வேஸனாகிய உருத்திர பகவானே! நான் இத்தகைய பிரஜைகளைக் கண்டதேயில்லை. இறக்கத் தக்கவர்களாகவும் சிலரைப் படைக்க வேண்டும்! என்று பிரமன் பிரார்த்திக்க பரமேஸ்வரன் சிரித்து, பிறப்பு இறப்புள்ள பிரஜைகளைப் படைக்க மாட்டேன். அத்தகையவர்களை நீயே படைக்கக் கடவாய். என்னாற் படைக்கப்பட்டவர்கள், உன் படைப்புக்கு துணை நிற்பவர்களாய் எப்போதும் என்னுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்! என்று கூறினார். உருத்திரகணங்களுடன் கூடிப் பிரமன் சிருஷ்டித் தொழிலை நிறைவேற்றிக் கொண்டிருந்தான். அது முதற்கொண்டு சர்வேசன் மரணயுக்தமான படைப்பைச் செய்யாது இருக்கிறான்.

13. பிரமன் உருத்திரனைத் துதித்தது

பிரமதேவன் செய்த படைப்புக்கள் எல்லாம் விருத்தியடையாமல் மனத்திருப்தியுமில்லாமல், துக்கம் மிகுந்து, இனி பெண் கூடலால் உண்டாகும் படைப்பைச் செய்யவேண்டும் என்று கருதியவனாய் சர்வேசனால் பெண்கள் படைக்கப்படாததால், தானே சுதந்திரமாக பெண்களை சிருஷ்டிச் செய்யும் வலிமையற்றவனாய் இவ்வகையில் தான் சிருஷ்டி செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, சர்வேசனுடைய திருவருளையடைய வேண்டும் என்று விரும்பி, முதற்பட்டதும் பரமானதும் அநந்தமானதும் உலகங்களிற் காக்கத்தக்கதும் மனோகரமானதும் சூஷ்மத்துக்கும் சூஷ்மமானதும் தூய்மையானதும் மனதாலடையத் தக்கதும் நிர்குண நிஷ்பிரபஞ்ச நிஷ்கள நிரந்தர நித்தியமானதும், ஈஸ்வரனை எப்போதும் விட்டுப் பிரியாததுமாகிய சக்தி என்னும் உமாதேவியைப் பாகமாகவுடைய சிவபெருமானை இதய தாமரையில் இருத்தி, உக்கிரமான தவத்தைச் செய்தான். அப்போது சர்வேசன் அந்தத் தவத்திற்கு மிகவும் மகிழ்ந்து தன்னுடைய ஓர் அம்சத்தால் அர்த்தநாரீஸ்வர மூர்த்தியாகப் பிரத்யட்சமானார். அவ்வாறு காட்சியளித்த பராத்பரனும் ஜகத்துக்குக் காரணனும் அவ்வியக்த ஸ்வரூபனும் அத்விதீயனும் பாவிகளாற் காணப்படாதவனும் உலகங்களை யெல்லாம் உண்டு பண்ணுபவனும் சர்வலோக மாதாவைத் தன் பங்கில் உடையவனும் சர்வ வியாபியுமாகிய பகவானைப் பிரமதேவன் சாஷ்டாங்கமாக வணங்கி வழிபட்டு பக்தி சிரத்தைகளுடன், மதுரமான வியாகரணலக்ஷண சப்தத்துடன் கூடிய ஸ்தோத்திரங்களால், மஹாதேவனையும் மஹாதேவியையும் ஸ்தோத்திரஞ் செய்யலானான்.

ஜயதேவ மஹாதேவ, ஜயேஸ்வர மஹேஸ்வர,
ஜயஸர்வ குணஸ்ரேஷ்ட ஜய ஸர்வஸூகாதிப
ஜயப்ரக்ருதி கல்யாணி, ஜயப்பிரக்ருதி நாயிகே
ஜயப்ரக்ருதி துராங்கி, ஜயப்ரக்ருதி ஸுந்தரி
ஜயாமோக மஹாமாயா ஜயாமோக மநோரத
ஜயாமோக மஹாலீல ஜயாமோக மஹாபல
ஜயவிஸ் வஜகந் மாதர்ஜய விஸ்வ ஜகந்மயி
ஜயவிஸ்வ ஜகத்தாத்ரி, ஜயவிஸ்வ ஜகத்ஸகி
ஜயஸாஸ்வதிகை ஸ்வர்ய ஜய ஸாஸ்வதிகாலய
ஜயஸாஸ் வதிகாகார ஜயஸாஸ்காநீக
ஜயாத்மத்ரய நிர்மாத்ரி ஜயாத் மத்ரய பாலினி
ஜயாத் மத்ரய ஸம்ஹர்த்ரி ஜயாத் மத்ரய நாயிகே!
ஜயாவலோகநாயத்த ஜகத்காரண பிரும்ஹண
ஜயாபேரக்ஷ கடா÷க்ஷõத்த ஹுதபுக் புக்தமௌக்திக
ஜயதேவாத்ய விஜ்னேய ஸ்வாத்ம ஸுக்ஷ்மத்ரூ ஸோஜ்வலே
ஜயஸ்தூலாத்ம ஸக்த்யம்ஸீ வ்யாய்தவிஸ்வ சராசரே!
ஜனநானரக விந்யஸ்த விஸ்வதத்வ ஸமுச்சய
ஜயஸுரஸிரோநிஷ்ட ஸ்ரேஷ்டாநுக கதம்பக
ஜயோபார்ஜித ஸம்ரக்ஷõ ஸர் விதரந படீயஸி
ஜ்யோந் மூலிதஸம்ஸார விஷவ்ரு÷க்ஷõம் குரோத்கலே
ஜயப்ராதேஸ்கைஸ்வர்ய வீர்ய ஸெளர்ய.

இந்த ஸ்தோத்திரங்கள் பிரமதேவனால் பரமசிவனையும் பார்வதிதேவியையும் நோக்கித் துதிக்கப்பட்டன. இதனைப் பக்தி சிரத்தைகளுடன் துதிப்பவர்கள் இஷ்டகாமியங்களையும் மோக்ஷத்தையும் அடைவார்கள். சர்வலோக நாயகனுடைய திருவருளால், சர்வா பீஷ்டங்களையும் பெற்றுப் புண்ணிய உலகில் வாழ்வார்கள்.

14. பெண்கள் படைப்பு

முனிவர்களே! இவ்வாறு துதிசெய்த பிரமதேவனைக் கண்டு மகிழ்ந்த அர்த்த நாரீசனாகிய பகவான் மேகம் போன்ற தொனியும் மதுரகரமும் கம்பீரமுமாகிய சிறந்த பொருளமைந்த வாக்கியத்தால் புன்னகையுடன், மகனே! உன் துதிக்கு மகிழ்ந்தேன். பிரஜா விருத்தியைக் குறித்து நீ தவஞ் செய்தாய். உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று தம் வாமபாகமாகிய திவ்வியகுணமுடைய பராத்பரையாகிய, சக்தியும் ஜன்ம மிருத்யுஜராதிகளற்ற உலகமாதாவும் மனோவாக்கு, காயங்களுக்கு எட்டாதவனுமான பார்ப்பதியைத் தம் சரீரத்திலிருந்து பிரித்தார். பரமேஸ்வரியும் எல்லா உலகங்களுக்கும் மஹேஸ்வரியும் சர்வக்ஞையும் சர்வ வியாபியுமாகிய மஹாதேவியைப் பிரமதேவன் வணங்கி தேவி தேவனாகிய சாம்பவமூர்த்தியால் யான் தோன்றினேன். பிரஜைகளைப் படைக்கும்படி அவரால் நியமிக்கப்பட்டு, மனத்தால் தேவாதியரையும் எல்லா ஜகத்தையும் படைத்தேன். அவ்வாறு படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் விருத்தியடைந்தில. ஆகையால் இனி ஆண் பெண் சங்கமத்தால் உகல விருத்தியை உண்டு பண்ணவேண்டும் என்று இச்சித்தேன். முன்பு சர்வேஸ்வரனால் பெண் இனத்தினர் படைக்கப்படாததால் அதைப் படைக்க, எனக்குச் சாத்தியப்படவில்லை. எல்லாச் சக்திகளும் உன்னாலேயே உண்டாதலின் உன்னை யான் அது விசயமாக வேண்டுகிறேன். சராசரப் பிரபஞ்சம் ஈடேறும்படி உனது ஓர் அம்சத்தால் என் புதல்வனான தக்ஷனுக்கு மகளாய் அவதரிக்க வேண்டும் என்று வேண்டினான். அதற்குப் பார்வதிதேவி, தன் புருவ மத்தியில் ஒரு சக்தியை உண்டாக்கினாள். அப்போது சிவபெருமான் அப்படித் தோன்றிய சக்தியை நோக்கி, நீ பிரமனது விருப்பத்தின்படியே செய்வாயாக! என்று கட்டளையிட்டு, உமாதேவியுடன் திருக்கயிலாய கிரியை அடைந்தார். சிவபெருமானுடைய வலது புறத்தில் உதித்த பிரமதேவன், பார்வதியின் புருவமத்தியில் தோன்றிய சக்தியைப் பணிந்து, நீ என் மகனாகிய தக்ஷப் பிரஜாபதியின் மகளாகி, உலக விருத்தியை உண்டாக்க வேண்டும்! என்று வேண்ட, அந்தச் சக்தி அப்படியே தக்ஷப் பிரஜாபதியின் மகளானாள். அன்று முதல் பெண்களும் ஆண்களும் கலவிசெய்து மக்களைப் பெறுவார்களானார்கள். இந்த சரிதத்தைப் படித்தவர்களும் கேட்டவர்களும் சொன்னவர்களும் நல்ல புத்திரர்களைப் பெற்று, நெடுங்காலம் வாழ்வார்கள்.

15. பிரம வம்ச உற்பத்தி

சிவபெருமானின் அருளைப்பெற்ற பிரமதேவன் தனக்குக் கிடைத்த அழிவிலாச் சக்தியால், மிதுன சம்பந்தமாகப் படைக்க நினைத்தது தான் இருகூறாக விராஜன் என்ற ஆடவனும் சதரூபை என்ற பெண்ணுமானாள். விராஜனைச் சுவாயம்புமனு வென்றும் கூறுவார்கள். சதரூபை என்பவள் தவஞ்செய்து சுவாயம்பு மனுவைக் கணவனாகக் கொண்டு பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரு புதல்வர்களையும் ஆகுதி, பிரசூதி என்ற இரண்டு புத்திரிகளையும் பெற்றாள். அந்த நால்வரே உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் காரண பூதர்கள். சுவாயம்புமநுவானவன். ஆகுதியை உருசி என்ற பிரஜாபதிக்கும் பிரசூதியைத் தக்ஷப்பிரஜாபதிக்கும் மணஞ்செய்து கொடுத்தான். ஆகுதிக்கு யக்ஞன் என்ற புதல்வனும் தட்சிணை என்ற கன்னியும் மக்களாகப் பிறந்தார்கள். தக்ஷப்பிரஜாபதிக்கு பிரசூதிக்கும் உலக மாதாக்களாகிய இருபத்து நான்கு புத்திரிகள் பிறந்தார்கள். அவர்களில் சிரத்தை, லக்ஷ்மி, துருதி, புஷ்டி, துஷ்டி மேதை, கிரியை, யுத்தி, லஜ்ஜை, வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்ற பதின்மூன்று பெண்களையும் தர்மன் என்பவனுக்குக் கொடுத்தான். மற்றைய பதினொன்று பெண்களில் கியாதி என்பவளைப் பிருகுவுக்கும் சதியை ருத்திரனுக்கும் சம்பூதியை மரீசிக்கும் ஸ்மிருதியை ஆங்கீரசுக்கும் பிரீதியை புலகனுக்கும், க்ஷமையைக் கிருதுவுக்கும், சன்னதியைப் புலஸ்தியனுக்கும் அநுசூயையை அத்திரிக்கும் ஊர்ஜையை வசிஷ்டனுக்கும் சுவாஹாதேவியை அக்கினிக்கும் சுவதாதேவியை தென்புலத்தாருக்கும் கொடுத்தான். மூத்த புத்திரிகள் பதின்மூவரை மணந்த தர்மன் அவர்களிடமாக காமம் முதல் யசஸ் ஈறாகிய பதினைந்தையும் பெற்றான். அவர்களில் சிரத்தை என்பவள் காமமும், லக்ஷ்மிகர்ப்பமும் துருதி நியமமும் புஷ்டி சந்தோசமும் துஷ்டி லாபமும், மேதை சுருதமும், கிரியை தண்டமும் சமயமும் புத்திபோதமும் அப்பிரமாதமும், லஜ்ஜை வியமும் வபு விவசாயமும் சாந்தி சேமமும் சித்தி சுகமும், கீர்த்தி யசசும் முறையே பெற்றார்கள். அதர்மனுக்கும் இம்சைக்கும் அதர்ம லட்சணமுடைய நிகிர்தி முதலிய புதல்வர்கள் பிறந்தார்கள். உருத்திர பாரியையான சதிதேவி தன் கணவனை தக்ஷன் இகழ்ந்த காரணத்தால் தாக்ஷõயணி என்ற பெயருடன், பஞ்ச பவுதிக சரீரத்தை விடுத்து தக்ஷனையும் அவன் மனைவி முதலானவர்களையும் இகழ்ந்து, இமயமலை மன்னனுக்கும் மேனைக்கும் புதல்வியானாள். அதுகண்ட சிவபெருமான் கோபத்தால் அநேக ருத்திரர்களைப் படைத்தார்.

பிருகுவின் மனைவியாகிய கியாதி என்பவள் லக்ஷ்மி என்ற பெண்ணையும் தாதா விதாதா என்ற பிள்ளைகளையும் பெற்றாள். மரீசியின் மனைவியாகிய சம்பூதி என்பவள், பவுரணன் என்ற புதல்வனையும் துஷ்ட திரிஷ்டி சிருஷ்டி அபசிதி என்ற நான்கு புதல்வியரையும் பெற்றாள். அங்கிரஸின் மனைவி ஸ்மிருதி என்பவளது வயிற்றில் ஆக்கினித்திறன், பரதன், சுரபன் என்ற புதல்வரும் குரு சீனிவாலி இராகை, அநுமதி என்ற நான்கு பெண்களும் பிறந்தார்கள். புலஸ்தியனின் மனைவியாகிய ப்ரீதி என்பவள் தந்தோக்கினி என்ற புதல்வனைப் பெற்றாள். இந்தப் புதல்வனே, சுவாயம்பு மநு வந்தரத்தில் அகஸ்தியனானான். புலகன் மனைவி க்ஷமை என்பவள் கருத்தமன் ஆசூரியன், சயிஷ்ணு என்பவர்களைப் பெற்றாள். கிருதுவன் மனைவி சந்நதி என்பவள் வாலகில்லியர்கள் என்ற அறுபதினாயிரவரைப் பெற்றாள். இந்த வாலகில்லியர்கள் சூரியனைப் புடைசூழ்ந்து ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களானார்கள். அத்திரியின் மனைவி அநுசூயை என்பவள் சத்திய நேத்திரன் ஹவ்யன், ஆபோமூர்த்தி, சனீஷ், சோமன் என்ற ஐந்து புதல்வரையும் சுருதி என்ற புதல்வியையும் பெற்றாள். சுருதி, சங்கபதனைப் பெற்றாள். வசிஷ்டனின் மனைவி ஊர்ஜை என்பவள் இரஜன், காத்திரன், ஊர்த்தவாகு, சவனன், அநயன், சுதபா. சுக்கிரன் என்ற ஏழு புதல்வரையும் புண்டரீகை என்ற புதல்வியையும் பெற்றாள். அக்கினியின் மனைவி சுவாஹா தேவியானவள். பாவகன், பவமானன் சுசி என்பவர்களைப் பெற்றாள். இவர்களில் மின்னலின் பாவகனும் அரணியில் பவமானனும் சூரியனிடத்தில் சுசியும் விளங்குவார்கள் என்று பெரியோர் கூறுவர். இந்த மூவருக்கும் முறையே ஹவ்விய வாசனன், கவ்வியவாகனன் ஸஹரக்ஷன் என்ற மூவர் தோன்றினர். இவர்கள் தேவர், தென்புலத்தோர், அசுரர் ஆகியோருக்கு அக்கினியாக முறையே பொருந்தியிருப்பார்கள். இந்த மூவரின் வமிசத்தில் தோன்றிய நாற்பத்தொன்பது வகை அக்கினி காரியஞ்செய்தால் காளகண்டமும் முக்கண்ணும் சதுர்புஜமும் ருஷபவாஹனமும் பார்வதி பாகமும் சந்திரசூடமும் சர்ப்பாபரணமும் கங்கை பிரவகிக்கும் சடைமுடியுமுடைய உமாபாகராகிய சாம்பமூர்த்திக்கும் பிரீதியுண்டாகி, அவரது கருணையால் ஜன்மாந்தரவினை தொடக்கு ஒழிந்து இஷ்டசித்திகளை எய்தப் பெறுவார்கள். தென்புலத்தோர் அக்கினிஷ்வரத்தன் முதலியோரும் பர்ஹிஷதன் முதலியோருமாவார்கள்.

இவர்களில் முதலில் கூறப்பட்டவர் அயஜ்வரும் பின்னால் கூறப்பட்டவர் யஜ்வருமாவர். இவர் மனைவியராகிய ஸ்வதாதேவி முறையே தரணி மேனை என்ற இரு பெண்களைப் பெற்றாள். அவர்களில் மேனை என்பவள் இமவானைக் கூடி, மைந்தர்களையும் கிரவுஞ்சனையும் கங்கையையும் உமாதேவியையும் பெற்றாள். தரணிமேரு மன்னனைக் கூடி மந்தரகிரியையும் ஆயதி, நியதி வேலை என்ற பெண்களையும் பெற்றாள். அவர்களில் ஆயதியும் நியதியும் பிருகு புத்திரர்களாகிய தாதா விதாதா என்பவர்களை முறையே மணந்தார்கள். வேலை என்பவள், கடலைக் கலந்து கரவன்னி என்ற பெண்ணைப் பெற்று பிராசீன பர்ஹிசுக்குக் கொடுத்தான். பிராசீன பர்ஹிசுக்கும் சாவன்னிக்கும் பிராசேதசர் என்ற பெயர் பெற்ற பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். சிவபெருமானுடைய கோபத்தால் தக்ஷன் சாக்ஷúஷ மந்வந்தரத்தில் சாபமேற்று, சுவாயம்பு மந்வந்தரத்தில், அந்த மரபில் புதல்வனாகத் தோன்றினான். இப்படியாக அந்த மரபு விருத்தியாயிற்று. முனிவர்களே, கேட்டீர்களா? பிரம வமிசம் முழுவதையும் உங்களுக்கு விரித்துச் சொன்னேன். இனி மன்னர் மரபைச் சொல்லுகிறேன். வெற்றி பொருந்திய இக்ஷ்வாகு அம்பரீஷன், யயாதி, நகுஷன் முதலிய வேந்தர்கள் சூரியசந்திர வம்சங்களில் பிறந்து பெயர் பெற்றவர்களானார்கள். இந்த மன்னர் சரிதங்களைக் கூறுவதால் சொல்லுகின்ற எனக்கும் கேட்கும் உங்களுக்கும் உண்டாகும் பயன் சிறிதும் இல்லையாகையால் அவற்றை விலக்கி, நாம் புண்ணியம் அடையும்படியான சிவசரிதங்களையே இன்னமும் சொல்ல விரும்புகிறேன் என்று வாயுதேவன் கூறினான்.

 
மேலும் சிவமகா புராணம் »
temple news
காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  ... மேலும்
 
temple news
41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும் நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான ... மேலும்
 
temple news
2. தர்ம ஸம்ஹிதை காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் ... மேலும்
 
temple news
16. சிவலிங்க பூஜையின் பயன் சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய ... மேலும்
 
temple news
31. நரகலோக வர்ணனை வியாசரே! பாதாள லோகத்திற்கு மேலே இருக்கும் நரக லோகத்தையும் அதில் பாவிகள்கிடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar