வடதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் நாளை சனி பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2026 08:03
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேலவளம்பேட்டையில் உள்ள வடதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில், நாளை சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து, மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால், மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. கும்ப ராசிக்கு ஏழரை ஆண்டுகளில், சனியின் கடைசி இரண்டரை ஆண்டுகால குடும்ப சனியாக உள்ளார். மீன ராசிக்கு ஜென்ம சனியாக வருகிறார். ஆகவே, இந்த ராசிக்காரர்கள் சனி பகவானுடைய தாக்கத்திலிருந்து விடுபட பரிகாரம் செய்து கொள்வது அவசியம். மேலவளம்பேட்டையில் உள்ள வட திருநள்ளார் சனி பகவான் கோவிலில், சனி பெயர்ச்சியையொட்டி, சனி பரிகார பூஜைகள் நடைபெற உள்ளன. ஆகவே, பக்தர்கள் பங்கேற்று, பயன்பெறுமாறு கோவில் நிறுவனர் முருகையன் தெரிவித்துள்ளார். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சனீஸ்வர பகவானை வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.