Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனிதன் நல்ல லட்சியத்தோடு வாழ ... பூண்டியில் தெப்பத்தேர் உற்சவம் கோலாகலம்;சிவனடியார்கள் பரவசம் பூண்டியில் தெப்பத்தேர் உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தெப்பல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தெப்பல் உற்சவம்

பதிவு செய்த நாள்

05 மார்
2026
07:03

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல் உற்சவத்தில், சண்முக சுப்ரமணியர் சுவாமி தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது.

காலை பல்லக்கிலும், இரவு அலங்கரித்த வாகனங்களிலும் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அம்மன் குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது.

இதற்காக குளத்தின் கரைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், புஷ்ப பல்லக்கில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி வீதியுலா புறப்பட்டார். அதிகாலை 3:00 மணிக்கு, தெப்பத்தில் சுவாமிகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

தொடர்ந்து, தெப்பத்தில் உலா வந்து சுவாமி அருள்பாலித்தார். நகராட்சி தலைவர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவர் ராணி தண்டபாணி, பொறியாளர் செந்தில், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் பழனியம்மாள், மேலாளர் பார்த்தசாரதி, கவுன்சிலர்கள் சிங்காரவேல், அருண், ஜெயலட்சுமி நம்பிராஜன், முத்துக்குமரன், தீபா மாரிமுத்து, உஷா பாலு, அன்சர்அலி, ஞானசேகரன், வசந்தி புருேஷாத்தமன், ராஜாத்தி சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar