Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ... வடதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் நாளை சனி பெயர்ச்சி விழா வடதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூண்டியில் தெப்பத்தேர் உற்சவம் கோலாகலம்;சிவனடியார்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூண்டியில் தெப்பத்தேர் உற்சவம் கோலாகலம்;சிவனடியார்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 மார்
2026
08:03

திருப்பூர்: மாசி மகத் தேர்த்திருவிழாவில் நேற்று, முயங்கு பூண்முலை வல்லியம்மை சமேத திருமுருகநாத சுவாமி, தெப்பக்குள நீராழி மண்டபத்தை, 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 28ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 2ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. வழக்கமாக இருநாட்கள் நடக்கும் தேரோட்டம், சந்திரகிரஹணம் என்பதால், இந்தாண்டு ஒரே நாளில் தேர்கள் நிலைசேர்க்கப்பட்டன. திருவிழாவில் நேற்று, தேப்பத்தேர் உற்சவம் விமரிசையாக நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில், முயங்கு பூண்முலை வல்லியம்மை சமேத திருமுருகநாத சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளினர். முன்னதாக, நீராழி மண்டபத்தில் உள்ள, விநாயகருக்கு மகா அபிேஷகம், அலங்காரபூஜைகள் நடந்தன. அம்மையப்பர், நீராழி மண்டபத்தை, 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்பக்குளக்கரைகளில் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன, வாசனை திரவியம் தெளித்து, தெப்பக்குளத்து தண்ணீரில் மலர்கள் துாவப்பட்டிருந்தன. உற்சவமூர்த்திகள், ஆறு முறை வலம் வரும்வரை, வேதபாராயணம் நடந்தது. அடுத்து ஐந்து முறை வலம் வரும் போது, நாகஸ்வர இன்னிசையுடன் திருமுறை பதிகங்கள் விண்ணப்பம் செய்யப்பட்டன. மகா தீபாராதனையை தொடர்ந்து, திருமுருகநாத சுவாமி, வெள்ளை குதிரை வாகனத்திலும், அம்மன் சிம்மவாகனத்திலும் கோவிலுக்கு திரும்பினர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar