ஜெகநாதபெருமாள் கோவிலில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2021 05:12
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதன் பெருமாள் கோவிலில், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மலை பகுதியில், கடந்த 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 21 வது திவ்ய தேசமாகவும், சைவ,வைணவ ஒற்றுமையை எடுத்துகாட்டும் வகையில் மூலஸ்தான கோபுரத்தில் நந்தியும்,பிரமனும் பெருமாளை வழங்குவதாக சிறப்பு பெற்ற செண்பகவல்லி தாயார் ஜெகநாத பெருமாள் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் கோவில் ஜெகனநாத பெருமாள் கைங்கர்ய சபாவினர் மற்றும் பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.