Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-9 நளதமயந்தி பகுதி-11 நளதமயந்தி பகுதி-11
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-10
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜன
2011
03:01

நிஜமான நளனும் இங்கிருக்கிறான். மற்றவர்களும் எனது கண்களுக்கு மட்டுமே தெரியும்படி நளனைப் போலவே இருக்கின்றனர். தேவர்களை அடையாளம் காண்பது எளிது. தேவர்களின் கண்கள் இமைக்காது. அவர்களது பாதங்கள் நிலத்தில் படாமல் அந்தரத்தில் நிற்கும். அவர்கள் அணிந்து வரும் மாலைகள் வாடாது. இங்கே இந்திரன், அக்னி, வருணன் எமதர்மன் ஆகிய தேவர்கள் அமர்ந்துள்ளனர். அவர்களது அடையாளத்தை இவற்றைக் கொண்டே கணித்து விடலாம். நிஜமான நளனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியுடன் கண்களால் துழாவினாள் தமயந்தி. எல்லாருமே காதல் பார்வையை அவள் மீது வீசிக்கொண்டிருந்தனர். தமயந்தி மிகத்தெளிவாக கணித்து, நிஜமான நளனுக்கு மாலை அணிவித்து விட்டாள். தேவர்கள் மட்டுமல்ல! மற்ற நாட்டு மன்னர்களும் அதிர்ச்சியடைந்து விட்டனர். ஏமாற்றமும், மான உணர்வும் அவர்களின் மனதைப் புண்ணாக்கி விட்டது. அந்த ஆத்திரத்துடன் அவர்கள் ஒவ்வொருவராய் வெளியேறினர். அவர்களது செந்தாமரை முகங்கள் வெண்தாமரை ஆகி விட்டன ஏமாற்றத்தால்.தமயந்தியின் முகமும் அப்படித்தான் ஆகியிருந்தது. எதனால் தெரியுமா? நிஜ நளனுக்கு மாலை சூட்டிய வெட்கம் தாளாமல்! நளனும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். தன் தமயந்தி தனக்கு கிடைத்து விட்டதில், அவனது உள்ளம் ஆனந்தக் களியாட்டம் போட்டது. தமயந்தியோ எப்போது அவனைத் தனிமையில் சந்தித்து அவனுடன் பேசி மகிழ்ந்திருக்கலாம் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள். காளையுடன் நடந்து செல்லும் பசுவைப் போல நளனுடன் அவள் கிளம்பினாள்.தேவர்கள் கடும் கோபத்துடன் சுயம்வர மண்டபத்தை விட்டு வெளியேறினர். எல்லாரும் இங்கு வந்து சுயம்வரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் தான், தேவலோகத்தில் இருந்து ஒரு வி.ஐ.பி., தள்ளுநடை போட்டு வந்து கொண்டிருந்தார். அவரது பெயர் சனீஸ்வரன். கலிபுருஷன் என்றும் அவரைச் சொல்வார்கள்.

 அவருக்கு என்ன ஆசை தெரியுமா? தமயந்தியைத் திருமணம் செய்ய வேண்டுமென்பது. ஆனால், என்ன செய்வது? அவர் கால் ஊனமானவர். மெதுவாக சுயம்வரம் முடிந்ததைக் கூட அறியாமல் விதர்ப்பநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.ஜோதிட சாஸ்திரத்திலும் இது தெளிவாக இருக்கிறது. மற்ற கிரகங்கள் வேகமாக ஒரு ராசியைக் கடந்து விடும். குரு ஒரு வருஷம், ராகு, கேது ஒன்றரை வருஷம் என சற்று அதிக காலம் சஞ்சரிப்பர். ஆனால், சனீஸ்வரர் மட்டும் இரண்டரை வருஷம் ஒரு ராசியில் இருப்பார். காரணம் இவரது மெதுவான நடையால் தான்.இவருக்கு ஒரு குணம் உண்டு. நல்ல மனங்களை கெட்ட வழியில் திருப்பி விடுவார். ஆனால், எல்லாரையும் அப்படி செய்யமாட்டார். எவனொருவன் கடமையைச் சரிவர செய்யத் தவறுகிறானோ அவனுக்கே அம்மாதிரியான குணநலனை தண்டனையாகக் கொடுத்து விடுவார்.அவர் தன் எதிரே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்த இந்திரன், அக்னி, வருணன், எமதர்மனைப் பார்த்தார்.தேவேந்திரனுக்கு வணக்கம் தெரிவித்த அவரிடம் தேவேந்திரன்,சனீஸ்வரரே! எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்? என்று கேட்டான்.சனீஸ்வரர் அவனிடம்,விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்திக்கு சுயம்வரமென அறிந்து அங்கு சென்று கொண்டிருக்கிறேன். அவள் பேரழகியாம்< என்றதும், சரியாப் போச்சு, தமயந்தியின் சுயம்வரம் முடிந்து விட்டது. நாங்களும் அவளை மணம் முடிக்கவே சுயம்வரத்தில் பங்கேற்க இங்கு வந்தோம். ஆனால், அவளோ நிடதநாட்டின் அரசன் நளனுக்கு மாலை சூட்டி அவனது மனைவியாகி விட்டாள். அங்கே உமக்கு இனி வேலை இல்லை. வந்த வழியே திரும்பிச்செல்லும், என்றான் இந்திரன்.

 சனீஸ்வரரின் முகம் சிவந்து விட்டது.என்ன! வானுலகத் தேவர்களை விட அறிவிலும், அழகிலும் சிறந்த ஒருவன் பூமியில் இருக்கிறானா? அவனுக்கு தமயந்தி மாலை சூடி விட்டாளா? அந்த அகம்பாவம்பிடித்த பெண்ணை நான் பிடிக்கிறேன்.அவளது கணவன் மன்னன்என்னும் பதவியைத் துறந்து, பிச்சை எடுக்கும் நிலைமைக்கு ஆளாக்குகிறேன், என்று கூக்குரலிட்டார்.இந்திரன் சிரித்தான்.சனீஸ்வரரே! மணமகள் கிடைக்காத ஆத்திரத்தில் துள்ளிக்குதிக்காதீர். உம்மால் யாரைப் பிடிக்க முடியும் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர். தமயந்தி கற்புடைச் செல்வி. தன் அறிவால், நளனைப் போலவே மாறியிருந்த எங்களைக் கூட அடையாளம் கண்டு ஒதுக்கிவிட்டு, அவளது காதலனை மணாளனாகப் பெற்ற புத்திசாலி. புத்திசாலிகளை நீர் அணுகமுடியாது என்பதை மறந்து விடாதீர். நளனோ வீரம் மிக்கவன். யாருக்கும் எந்த துன்பமும் இழைக்காதவன். தன் மக்களை கண்போல் பாதுகாப்பவன். அவனருகிலும் <<உம்மால் நெருங்க முடியாது. நான் சொல்வதைக் கேளும். எங்களுடன் திரும்பி வாரும், என்றான்.  சனீஸ்வரரும் வேறு வழியின்றி, வந்த வழியே திரும்பினார்.இதற்கிடையே விதர்ப்ப நாட்டு அரண்மனையில், வீமராஜன் தன் மகளின் திருமணத்தை நடத்த தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான். ஜோதிடர்கள் திருமண நன்னாளைக் குறித்துக் கொடுத்தனர். குறிப்பிட்ட அந்த நாள் காலையிலேயே திருமணம். தோழிகள் தமயந்தியின் உடலையே மூடுமளவுக்கு மலர்களால் அவளை அலங்கரித்தனர். ஏராளமான நகைகள் அணிவிக்கப்பட்டன. இந்த நகைககளையெல்லாம் மிஞ்சும் புன்னகை முகத்தில் அரும்ப நின்ற தமயந்தியின் தங்கக்கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நளன். அவர்களின் மனம் இன்ப வெள்ளத்தில் மிதந்தது.ஒரு நன்னாளில் தன் அன்பு மனைவியை அழைத்துக் கொண்டு, தனது நாட்டுக்குப் புறப்பட்டான் நளன். தேர் புறப்பட்டுச் சென்றது. செல் லும் வழியிலுள்ள இயற்கைக் காட்சிகளை தனக்கே உரித் தான கவிநயத்துடன் மனைவியிடம் விளக்கிச் சொல்லியபடியே இருவரும் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தனர். பாவம்! இந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்காது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar