Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-1 நளதமயந்தி பகுதி-3 நளதமயந்தி பகுதி-3
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2010
03:12

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் தெரியாதவர் என்றாலும், அந்த முனிவரின் முகத்தில் இருந்த தேஜஸ் அவனைக் கவர்ந்தது. தவவலிமையில் சிறந்தவரே! வர வேண்டும், வரவேண்டும். தாங்கள் இந்த அடர்ந்த காட்டுக்குள் எப்படி வந்தீர்கள்? இங்கே கொடிய மிருகங்கள் மட்டுமல்ல, நாகங்களும் திரிகின்றன. இப்போது மாலை நேரம் வேறு. சற்றுநேரத்தில் இருட்டிவிடும். மிருகங்கள் இரவில் தான் உணவு தேடி அதிகமாக வெளியே உலவும். தாங்கள் அவற்றிடம் சிக்கிக்கொண்டால்...நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உங்களுக்கு நல்ல நேரம் என்பதால் தான் என் கண்ணில் பட்டீர்கள். வாருங்கள். எனது குகையில் தங்கி காலையில் செல்லலாம். காட்டின் எல்லை வரை நானே பாதுகாப்பாக வந்து வழியனுப்பி வைக்கிறேன், என்றான். முனிவரும் அவன் சொன்னதிலுள்ள நியாயம் அறிந்து, அவனுடன் குகைக்குச் சென்றார். புலித்தோல் விரித்து அதில் அவரை அமரவைத்தான் ஆகுகன். அவனது மனைவி ஆகுகி, தேனில் ஊற வைத்த பலாச்சுளைகளை அவருக்கு அளித்தாள். மிருகங்களைக் கொன்று தின்னும் வேடர்களாயினும், அவர்களது உள்ளத்திலுள்ள இரக்க குணத்தைக் கண்டு மகிழ்ந்தார். அவனைப் பற்றி விசாரித்தறிந்தார். சுவாமி! நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தக் காட்டில் தான். என் பெற்றோரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. எப்படியோ வளர்ந்தேன், இங்குள்ள மிருகங்களெல்லாம் எனக்கு நண்பர்கள் போல. ஏதாவது, ஒரு மிருகம் எனக்கு துன்பம் செய்ய வருகிறதென்றால் அதை மட்டுமே அடித்து உண்போம். இல்லாவிட்டால், பட்டினியாக இருந்து கொள்வோம், என்றான். முனிவர் அவனது நல்ல குணத்திற்காக சந்தோஷப் பட்டார். குழந்தைகளே! நீங்கள் இருவரும் மனமொத்து குடும்பம் நடத்துவது பற்றியும், முன்பின் தெரியாதவர்களையும் உபசரிக்கும் விதத்தையும் பார்த்து மகிழ்கிறேன். நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும். என்னை <உபசரித்ததற்கு பதில் உபகாரம் ஒன்று செய்ய வேண்டும். துறவியான என்னிடம் பொருளா இருக்கும், உங்களுக்குத் தருவதற்கு! ஆனால், அருள் என்னும் பொருள் நிறைய இருக்கிறது. அதை உங்களுக்கு தருகிறேன். உங்களுக்கு ஒரு விஷயத்தை <<உபதேசிக்கிறேன், என்றார்.

அவர்கள் பணிவுடன் நின்றனர்.குழந்தைகளே! மாட்டு வண்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்றார். ஆம் என அவர்கள் தலையசைத்தனர். அந்த வண்டியில் மாடு தானாகவே போய் தன்னைக் கட்டிக்கொள்ளுமா? என்றார். இல்லை, வண்டிக்காரன் தான் கட்டுவான், என்றனர் அவர்கள். அதுபோல், வண்டி மாட்டின் மீது தானாக வந்து ஒட்டிக் கொள்ளுமா? என்றார். அதற்கும் அவர்கள், இல்லை, என்றனர். ஆக, ஒரு மாட்டை வண்டியில் பூட்டுபவன் வண்டிக்காரன். ஒன்றை ஒன்று தானாக பற்றிக் கொள்வதில்லை. அதுபோல், <உயிர் என்ற மாட்டை அதனதன் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, உடம்பு என்ற வண்டிக்குள் இறைவன் என்னும் வண்டிக்காரன் பூட்டி விடுகிறான். வண்டியைப் பயன்படுத்த தேவையில்லை என்றால், வண்டியையும், மாட்டையும் வண்டிக்காரன் எப்படி கழற்றி விடுகிறானோ, அதுபோல், உயிர்கள் அதனதன் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்த பிறகு., இறைவன் உயிரை உடலில் இருந்து எடுத்து விடுகிறான். எனவே உயிர் பிரிவதற்குள் ஒவ்வொருவரும் இறைவனைச் சரணடைய வேண்டும். நீங்கள் சிவாய நம என்றும், ஓம் நமோ நாராயணாய என்றும் இறைவனின் திருநாமத்தைச் சொல்லி மறுபிறவிக்குரிய பலாபலனை சேர்த்து வையுங்கள்,  என்றார் முனிவர். அரிய கருத்தொன்றை, படிக்காத தங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்த முனிவருக்கு அவர்கள் நன்றி கூறினர். உறங்கும் நேரம் வந்துவிட்டது. ஆகுகன் அவரிடம்,முனிவரே! தாங்கள் அயர்ந்து உறங்குங்கள். இந்தக் குகையில் இருவர் தான் படுக்க முடியும். நானும், ஆகுகியும் உள்ளே படுத்தால் தாங்கள் வெளியே படுக்க நேரிடும். இரவில் மிருகங்கள் உங்களைத் தாக்கிவிடும்.

 நீங்களும், நானும் உள்ளே படுத்து ஆகுகி வெளியில் இருந்தால் அவளுக்கும் ஆபத்து. எனவே, மிருகங்கள் வந்தாலும் அவற்றை வேட்டையாடும் திறனுள்ள ஆயுதபாணியான நான் வெளியில் படுப்பதே சரி! நீங்களும் ஆகுகியும் உள்ளே படுங்கள். இவள் பதிவிரதை. தாங்கள் அவளுக்கு தந்தை போன்றவர். இருவரும் உள்ளே உறங்குவதில் தவறில்லை. நான் ஆயுதத்துடன் பாதுகாவல் செய்கிறேன், என்றான். இத்தகைய பெருந்தன்மையை முனிவர் எதிர்பார்க்கவே இல்லை. எவ்வளவு உயர்ந்த பண்பு கொண்டவன் இந்த வேடன் என அசந்து போனார். அவனுடைய வேண்டுகோளை அவரால் மறுக்க முடியவில்லை. குகைக்குள் முனிவரும் ஆகுகியும் படுத்துவிட்டனர். ஆகுகன் வெளியே காவல் இருந்தான். நள்ளிரவில் சற்று கண் அயர்ந்து விட, ஆயுதம் கீழே கிடந்தது. இந்த சமயத்தில் சிங்கம் ஒன்று அவன் மீது பாய்ந்து அவனை ரத்தச்சகதியாக்கி விட்டு போய்விட்டது. இதைக் கண்ட ஆகுகி அலறினாள். கணவன் மீது பாசம் கொண்ட அவளது உயிரும் பிரிந்தது. தனக்காக தம்பதியர் இருவரும் உயிர் விட்ட பரிதாப நிலையைக் கண்டு  முனிவர் வருந்தினார்.  ஆனாலும், என்ன செய்ய முடியும்?அவர்களது உடல் மீது மந்திர நீரை தெளித்தார். கட்டைகளைப் பொறுக்கி வந்து அடுக்கி, அவர்களது உடல்களுக்கு தீ மூட்டினார். அவர்கள் எரிவதைப் பார்த்து மனம் பொறுக்கவில்லை. அருகில் இருந்த ஏரியில் மூழ்கி அவரும் உயிரை விட்டுவிட்டார்.அந்த தியாகச்செம்மலான வேடனே நிடதநாட்டு அரசன் நளனாகப் பிறந்தான். அவனது மனைவி ஆகுகி, விதர்ப நாட்டின் அரசன் பீமனின் மகளாகப் பிறந்து தமயந்தி என்னும் பெயர் பெற்றாள். இவர்களால் பலன் பெற்ற முனிவர், முற்பிறவியில் தன்னால் உயிரிழந்து பிரிந்த அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க பிறவியெடுத்தார், ஒரு அன்னப் பறவையாக! இவர் மானிடராகப் பிறந்திருக்கலாமே! ஏன் ஒரு அஃறிணைப் பொருளாக வடிவம் கிடைத்தது?

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 
temple news
மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar