Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நளதமயந்தி பகுதி-2 நளதமயந்தி பகுதி-2
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2010
03:12

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், மனைவியையும் பணயம் வைத்து அவமானப்பட்டோம். என் ஒருவனது தவறான முடிவால், இன்று எல்லாரும் சிரமப்படுகின்றனரே! இதைத்தான் விதி என்பதோ! ஏன் மனிதனை இப்படி கஷ்டங்கள் வாட்டுகின்றன! கிருஷ்ணா! என்னைப் போல் கஷ்டப்பட்டவர் உலகில் யாரும் இருக்கமாட் டார்கள். இனியும் இருக்கக் கூடாது, என்று பெருமூச் செறிந்த வேளையில், சிரிப்பொலி கேட்டது.சிரித்தவர் வியாச மகரிஷி. தர்மராஜா அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். சாதாரணமான மகரிஷியா அவர்! பராசர முனிவருக்கும், யோஜனகந்தி என்னும் செம்படவர் குலத்தில் வளர்ந்த பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையான அவர், மகாபாரதம் என்னும் காவியம் எழுதும் பாக்கியம் பெற்றார். உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொக்கிஷம் அது. இந்த கலியுகத்திலும், நமது பாரதத்தின் மூலை முடுக் கெல்லாம் ஒலிக்கும் தர்மம் என்னும் கோஷத்திற்கு காரணம் இந்த இதிகாசம் தான்.இந்தக் காவியத்தை எழுத அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அக்காலத்தில், சில மகரிஷிகளுக்கு கதை சொல்லத் தெரியும். ஆனால், எழுதத்தெரியாது. எனவே, நல்ல எழுத்தர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். மகாபாரதம் தர்மத்தை நிலைநிறுத்த எழுதப்பட்ட இதிகாசமல்லவா! இதை எழுதும் பொறுப்பை விநாயகப்பெருமான் முன்வந்து ஏற்றுக்கொண்டார். யானைக்கு அழகே தந்தம் தான்! ஆனால், அந்த ஆனை முகத்தான் தன் தந்தத்தையே ஒடித்து, வியாசர் சொல்லச் சொல்ல எழுத ஆரம்பித்து விட்டார். எழுதுகோலாக தந்தத்தை ஒடித்துக் கொண்டவர், எழுதுவதற்காக அவர் தேர்ந்தெடுத்த பொருள் தெரியுமா? புராணங்களில் வர்ணிக்கப்படும் மேருமலை.
அப்போது, வியாசர் விநாயகருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.

ஐயா, கணபதி! நீர் எழுதுவதெல்லாம் சரி! நான் சொல்வதை சற்றும் தாமதிக்காமல் எழுதி விட வேண்டும். ஏனென்றால், நான் ரொம்ப வேகமான ஆள். சற்று தாமதித்தாலும், திரும்பச் சொல்லமாட்டேன், சரியா? என்றார்.இவரே இப்படி என்றால், பார்வதி பாலகனான கணேசன் விடுவாரா என்ன!அதெல்லாம் இருக்கட்டும் ஓய்! நான் எழுதும்போது, நீர் நிறுத்திவிட்டால்,அப்படியே எழுந்து போய்விடுவேன். ஆனால், தான் எழுத்தராக இருக்க வேண்டுமானால், இந்த நிபந்தனைக்கு வியாசர் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லி விட்டார்.ஆரோக்கியமான போட்டிதானே! வியாசர் விடாக்கண்டனாக ஸ்லோகங்களை அள்ளி விட, விநாயகர் வேகமாக எழுதித் தள்ளினார்.ஒரு கட்டத்தில் வியாசருக்கு மூச்சு முட்டிவிட்டது. எவ்வளவு ஸ்லோகங்களைச் சொன்னாலும், கணநேரத்தில் எழுதி விடுகிறாரே இந்தக் கணபதி! உஸ்... என்று மூச்சு வாங்கியவர், ஒரு தந்திரம் செய்தார்.கணேசா! நீர் எழுதுவதெல்லாம் சரி... சில சமயங்களில் நான் சில ஸ்லோகங்களைச் சொல்லி, அதற்கு விளக்கம் கேட்பேன், நீர், விளக்கத்தைச் சொல்லிக்கொண்டே, அடுத்து நான் சொல்லும் ஸ்லோகங் களையும் எழுத வேண்டும். என கண்டிஷன் போட்டார். இப்படி மடக்கப் பார்க்கிறீரா? என்று ஆனைமுகன் தலையை ஆட்டினார். வேதங்களைத் தொகுத்தவருக்கே இவ்வளவு தைரியம் என்றால், வேதநாயகனின் பிள்ளைக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்! இவர்களது போட்டி தொடர்ந்தது. சில கடுமையான பொருளுள்ள இப்போது, ஒரு சுவையான...ஆனால், கடினமான ஸ்லோகம் ஒன்றைச் சொல்லி விளக்கம் கேட்பார் வியாசர். கணபதி இதற்குரிய பொருளை அரை நொடிக்குள்சொல்லி விட, அதற்குள் அடுத்த ஸ்லோகத்தை சுதாரித்து  சொல்லத் தொடங்குவார் வியாசர். இப்படியாக பெரும் சிரமமெடுத்து வியாசர் தயார் செய்தது மகாபாரதம். அதில் தன்னையும் ஒரு பாத்திரமாக்கிக் கொண்ட வியாசர், தர்மராஜா முன் தோன்றினார். தர்மரின் மனக்குறிப்பை அறிந்த அவர், தர்மராஜா! நீ ஒருவனே உலகில் கஷ்டப்படுபவன் போலவும், உனக்கு மட்டுமே தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தது போலவும் நினைக்கிறாய். இது சரியல்ல! நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது, நம்மிலும் கஷ்டப்படுபவர் கøளைப் பார்த்து ஆறுதலடைய வேண்டும். உனக்கு நிடத மகராஜன் நளனைப் பற்றித் தெரியுமா? அவனும் உன்னைப் போலவே சூதாட்டத்தில் நாடிழந்தவன்.

சிறிய கடமை ஒன்றை செய்யாமல் விட்டதற்காக பெரும் இழப்பைச் சந்தித்தவன். அவனும் உன்னைப் போலவே நல்லவன். உனக்காவது, தெரிந்தே துன்பம் வந்தது. அவனுக்கோ, மக்களைக் காக்க வேண்டிய தேவர்களே சோதனைகளைக் கொடுத்தனர். அவனுடைய வரலாற்றைக் கேள். அதன்பிறகு, உனக்கு வந்துள்ள துன்பம் மிகச்சிறியது என்பதை உணர்வாய், என்றார். தர்மராஜா அந்தக் கதையைக் கேட்கத் தயாரானார். நளமகாராஜனின் கதையைக் கேட்பவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் நடக்காது என்பது நீண்டகால நம்பிக்கை. அது மட்டுமல்ல! இந்த சரிதத்தைப் படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நாமும் சனிபகவானை வணங்கி, இந்தக் கதையைத் துவக்குவோம். அன்று அதிகாலையில், குகைக்கு வெளியே கொட்டும் மழையில் பாதுகாப்புக்கு நின்ற தன் கணவன் ஆகுகனைக் காண வேக வேகமாக வெளியே வந்த அவனது மனைவி ஆவென அலறி விட்டாள். ரத்தச்சகதியாகி வெளியே கிடந்தான் ஆகுகன். என் அன்பே! தியாகத்தின் திருவிளக்கே! தர்மத்தின் தலைவனே! தங்களுக்கா இந்தக்கதி! பிறருக்கு உபகாரம் செய்த உங்களது உயிரையா இறைவன் பறித்துக் கொண்டான்! இறைவா! இதுதான் உனது அரசாங்கத்தின் தர்மமா! என்று கொதித்தாள். அவளது அலறல் கேட்டு, குகைக்குள் இருந்த துறவி ஓடி வந்தார். பாசபந்தங்களைத் துறந்த அவரது மனதில் கூட வேடனின் மரணம் சோக அலைகளை எழுப்பியது. கணவனின் உடல் மீது கதறியபடியே விழுந்த அவள் அதன் பின் எழவில்லை. என்னுடைய உயிர் காக்க இந்த வேடனும், அவனது மனைவியும் உயிர் துறந்தனரே, என்று கவலைப்பட்ட துறவி முதல்நாள் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தார்.

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 
temple news
மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar