திருநெல்வேலி: செப்பறை அழகிய கூத்தர் கோயில் மார்கழி திருவாதிரை திருவிழா நாளை (28ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜனவரி 5ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகத்தியர், வாமதேவரிஷி, மணப்படை அரசருக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த தலமாகும். இந்த கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நாளை (28ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி காலை6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. 7ம் நாளான ஜனவரி 3ம் தேதி காலை10.30 மணிக்கு அழகிய கூத்தர், சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 4ம் தேதி காலை10 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், மாலை5 மணிக்கு பச்சைசாத்தி தரிசனம் நடக்கிறது. 5ம் தேதி காலை11 மணிக்கு மேல் அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. 10ம் திருநாளான 6ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மதியம் 3 மணிக்கு அழகிய கூத்தர் வீதியுலா நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு பிற்காலஅபிஷேகம், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அழகிய கூத்தர் சபைக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் கவிதாபிரியதர்ஷினி, தக்கார் முருகன், செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் கட்டளை தாரர்கள் செய்து வருகின்றனர்.