திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப்கார் அமைக்க அரசுக்கு எம்எல்ஏ கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2022 09:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப் கார் அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய 10 பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டிருந்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்கிய 10 பணிகள் அனுப்பப்பட்டது. அதில் எட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறு பணிகள் குறித்து கேட்கப்பட்டது. தற்போது, பானாங்குளம் கண்மாய் கரையை நடைபாதை அமைத்து சுற்றுலா பூங்கா அமைக்க வேண்டும். தென்பரங்குன்றத்திலிருந்து பெருங்குடிக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். மிகவும் பழுதடைந்துள்ள நிலையிலுள்ள தினசரி மார்க்கெட்டை அகற்றிவிட்டு அடிப்படை வசதிகளுடன் புதிய மார்க்கெட் அமைக்கப்பட வேண்டும். சமுதாயக்கூடம், கிரிவலப் பாதையில் இரு பக்கங்களிலும் நடைபாதை. திருநகரில் மெயின் ரோட்டில் நடுவில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஹாக்கி மைதானம் அமைத்தல். திருமங்கலம் நீட்டிப்பு கால்வாயில் வழியாக வடபழஞ்சி, தென்பழஞ்சி உள்ளிட்ட மானாவாரி கண்மாய்களில் வைகை அணை தண்ணீர் நிரப்ப வழிவகை செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகள் தற்போது அனுப்பப்பட்டுள்ளது என்றார்.