பதிவு செய்த நாள்
18
செப்
2012
11:09
திருப்பதி: திருப்பதியில் பிரமோற்சவ விழா துவங்கியது. பிரம்மோற்சவ விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்துள்ளது. இப்பிரம்மோற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதி வருவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்: வெங்கடேசப் பெருமாள் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவத்தையொட்டி, 26ம் தேதி வரை, திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் அறிக்கை: பக்தர்கள் வசதிக்காக, விழுப்புரம், சென்னை, கோயம்பேடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திண்டிவனம், புதுச்சேரி, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர், ஆற்காடு, வந்தவாசி, அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.