கவுண்டம்பாளையத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2025 10:08
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் வாராஹி அம்மன் மந்திராலயம் உள்ளது. இங்குள்ள வாராஹி அம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி திதி நிகழ்வையொட்டி நவசக்தி வாராஹி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.