அறிவியலும் ஆன்மீகமும்; தசரா விழாவில் பறந்து வந்த அனுமன்.. விடியோ வைரல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2023 12:10
சட்டீஸ்கர்; ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தகைய சிறப்பு மிக்க அனுமன் பறந்து செல்வது போலான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. விழாவில், அனுமனுக்கு செயற்கை இறக்கைகள் பொருத்தி ட்ரோன் மூலம் பறந்து வரும் படி அமைத்திருந்தனர். அறிவியலும் ஆன்மீகமும் இனைந்த இந்த நிகழ்வை கண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.