கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஸ்ரீவி. ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2024 10:04
ஸ்ரீவில்லிபுத்தூர்; மதுரை கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு சிறப்புடன் நடந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சாற்றி கொடுத்த பட்டு, மாலை, கிளி ஆகியவற்றை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது வழக்கம். இதற்கு எதிர் சீராக கள்ளழகர் சாற்றி கொடுந்த பரிவட்டம், தகடி, உறுமால், பட்டு கயிறு ஆகியவை ஆண்டாளுக்கு சாற்ற கொடுக்கப்படும். அதன்படி கள்ளழகர் சாற்றி கொடுத்த மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, நேற்று காலை ஸ்தானிகம் ரமேஷ் வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் இரவு 7:00 மணிக்கு அங்கிருந்து கோயில் மரியாதையுடன் கொண்டுவரப்பட்ட மங்களப் பொருட்கள் வெள்ளிக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.