Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கிரிவல ... திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவில் சுந்தரருக்கு விருந்திட்ட விழா விமரிசை திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

01 மார்
2026
05:03

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.

காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா முன்னிட்டு, நேற்று முன்தினம் பெட்டத்தம்மன் மலையிலிருந்து அம்மன் அழைத்து வரப்பட்டார். பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, வெங்கடாசலபதி ஏஜென்சிஸ் உரிமையாளர் கோவிந்தன் குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து தாயார் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெள்ளி சப்பரத்தில், அரங்கநாத பெருமாள் திருமண கோலத்தில் எழுந்தருளினார். பின், திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. நெய்வேத்தியம், தீபாராதனை காண்பித்த பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.  பக்தர்கள் திரண்டதால், மண்டபத்தின் உள், கொடிமரம் முன், கோவில் ராஜகோபுரம் முன் என, மூன்று இடங்களில் பெரிய எல்.ஈ.டி., திரை வாயிலாக, திருக்கல்யாணம் வைபவம் காண, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பல்வேறு தன்னார்வ அமைப்பினர், பக்தர்களுக்கு தாலி சரடு, பிரசாதம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar