கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.14 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2024 10:04
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அறநிலையத்துறை மாவட்ட துணை ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர் காளிமுத்து, தக்கார் சீனிவாசன், ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 14 லட்சத்து, 93 ஆயிரத்து, 757 ரூபாய், 38.100 மில்லி கிராம் தங்கம், 239 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கம் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.