பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனூர் இலுப்பகுடியில், கோயில் மூலவர் சிலையில், சூரிய வெளிச்சம் விழும் காட்சியை பார்க்க, ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். இலுப்பக்குடியில் பழமைவாய்ந்த வாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயிலில், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த சிலர், குல தெய்வமாக வழிபடுகின்றனர். ஆண்டு தோறும், மார்ச் 8 முதல் 20 வரை; செப்.,17 முதல் 29 வரை, காலை 6.30- 7.00 மணி வரை, மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம், நேரடியாக விழும். இந்நேரத்தில் வழிபட்டால் நோய்கள் தீரும், குழந்தை வரம், வாய் பேசாதவர்கள் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர். நிர்வாகி இருளாண்டி கூறுகையில், ""சாதாரண நாட்களை விட, சூரிய வெளிச்சம், விக்ரகத்தில் விழும் நாட்களில் வழிபட்டால் பலன் கிட்டும். மூன்று சமூகத்தினருக்கு சொந்தமானது என்றாலும், தற்போது வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருகின்றனர், என்றார். திருமாஞ்சோலையில் இருந்து 6 கி. மீ., மற்றும் படமாத்தூர் விலக்கில் இருந்து 5 கி.மீ., ல் இக்கோயில் உள்ளது.