Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஸ்ரீவி.,யில் பூக்குழி விழா மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம்: கோயிலில் கூடும் பக்தர்கள் கூட்டம்! மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிக்ககம் சாமுண்டி தேவி கோயில் விழா 24ம் தேதி பொங்காலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2013
11:03

திருவனந்தபுரம்:கரிக்ககம் ஸ்ரீ சாமுண்டி தேவி கோயில் பொங்காலை திருவிழா மார்ச் 18ம் தேதி துவங்குகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கரிக்ககம் சாமுண்டி தேவி கோயில் உள்ளது. இந்த கோயில் 600 ஆண்டுகள் பழமையானது என்ற ஐதீகம் உள்ளது. முன் காலங்களில் திக்குபலி என்ற சடங்கிற்கு தேவி நகர்வலம் எழுந்தருளியிருந்தார்.
காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் நாட்டில் பரவும் போது மக்களின் விருப்பப்படி அது போன்ற சடங்குகள் நடத்தப்பட்டிருந்தன. எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு பாரம்பரியமான முறையிலுள்ள வாத்திய மேளங்களும், ஆசார அனுஷ்டானங்களும் கட்டாயமாக கடைபிடித்திருந்தனர். சுமார் எட்டு கி.மீ., சுற்றளவில் நான்கு திசைகளிலும் இதன் பூஜைகளும் குருதியும் நடத்தியிருந்தனர். இன்று அவை திருவிழா தினங்களில் தேவியின் எழுந்தருளலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சத்தியத்தின் சாட்சியாகவும் கோயில் இன்று விளங்குகிறது.
கரிக்ககம் ஸ்ரீ சாமுண்டி கோயில் திருவிழா வரும் 18ம் தேதி துவங்கி, 24ம் தேதி முடிய ஏழு நாள்கள் நடக்கிறது. விழாவில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கணபதிஹோமம், உச்ச பூஜை, பஜனை நடக்கிறது. முதல் நாள் விழாவில் பள்ளி உணர்த்தல், நிர்மால்ய தரிசனம், சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், அஷ்ட திரவிய மகா கணபதிஹோமம், எதிர் பூஜை, பந்தீரடி, நவகம், கலாசபிஷேகம், குருபூஜை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, தீபாராதனை, பக்தி கானமேளா, நடிகை மஞ்சுவாரியார் பங்கேற்கும் டான்ஸ் மற்றும் கேரளா அமைச்சர்கள் ஜோசப், சிவகுமார், நடிகர் தேவன் பங்கேற்கும் சமயமாநாடு நடக்கிறது.
இரண்டாம் நாள் விழாவில் கலசாபிஷேகம், பகவதி சேவை, அன்னதானம், புஷ்பாபிஷேகம், சங்கீத ரஜனை, தேவி பாராயணம், பஞ்சாரி மேளம், நடிகர் கலாபவன் மணியின் மெகா ஷோ, மிமிக்கிரி நடக்கிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் சங்கீத ரஜனை, நான்காம் நாள் விழாவில் பகவதிசேவை, புஷ்பாபிஷேகம் நடக்கிறது. மேலும், மத்திய அமைச்சர் வயலார் ரவி, சசிதரூர் முன்னிலையில் நடிகர் மம்மூட்டிக்கு கரிக்கத்தம்மா விருது வழங்கப்படுகிறது.
ஐந்தாம் நாள் விழாவில் சன்னதியில் இருந்து புது ரோடு வழியாக இலங்கம் வயலில் ரோடு, கொல்லப் பெருவழி, கொல்லம்ரோடு, சாருமூடு ரோடு, ஸ்ரீராகம் ரோடு, அரசமூடு, புதுப்பாலம் வழியாக எழுந்தருளல், பின்னணி பாடகி ராஜலெஷ்மியின் இன்னிசை, இரவு எழுந்தருளலுக்கு பின் தீபாராதனை நடக்கிறது. ஆறாம் நாள் விழாவில் பந்தீரடி, கலசாபிஷேகம், தொடர்ந்து கோயில் சன்னதியில் இருந்து ஆற்றுப்பரம்பு, கொல்லப் பெருவழி ரோடை கடந்து புன்னைகாதோப்பு, அரப்புரவிளாகம், சிவதாஸ் ரோடு, ஐ.டி.ஐ., ஜங்ஷன் வழியாக எழுந்தருளல் நடக்கிறது. மேடையில் கதகளி, களறிபயிற்று நடக்கிறது. ஏழாம் நாள் விழாவில் காலை 10.40க்கு பொங்காலை நடக்கிறது. பிற்பகல் 2.30க்கு உச்ச பூஜை, பொங்காலை தர்ப்பணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட் சேர்மன் ராமசந்திரன்நாயர், தலைவர் முரளீதரன் நாயர், செயலாளர் அனில்குமார், உதவித்தலைவர் பிரதாபசந்திரன், பொருளாளர் பார்க்கவன் நாயர், இணைச்செயலாளர் கோபகுமார் தலைமையில் நிர்வாக அங்கத்தினர்கள் செய்துள்ளனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 68 வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரையில் பை பாஸ் நால் ரோடு சந்திப்பு பகுதியில் நீலிமலை அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஈச்சனாரி விநாயகர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு ... மேலும்
 
temple news
கடலுார்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், தருமபுரம் ஆதினம் தரிசனம் செய்தார்.கடலுார் ... மேலும்
 
temple news
திருப்போரூர்; செங்கல்பட்டு, திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar