அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் கருவறை கதவு தானாக திறந்த அதிசயம்! வீடியோ வைரல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2025 10:04
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பங்குனி பொங்கல் விழாவின் போது கருவறை கதவு தானாக திறந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். கோவில் பூசாரி கருவறையை மூன்று முறை சுற்றி வந்து தேங்காய் உடைத்ததும் இந்த அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோயிலில் பங்குனி பொங்கல் விழா ஏப்.9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. அம்மன் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று 8ம் நாள் விழாவாகபக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள்வாழ வந்தம்மன் கோயிலிருந்து அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக ஆயிரங்கண் மாரியம் மன் கோயிலை வந்தடைந்தனர். தினமும் ஒவ்வொரு மண்டகப்படியாரின் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.