Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கும்பாபிஷேகம்! கும்பகோணம் ராஜகோபாலசுவாமி ... திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்! திருப்பரங்குன்றத்தில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கும்பாபிஷேக விழா துவக்கம்: இறைவனின் அபிஷேகப்பொருளும் பலன்களும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மார்
2013
12:33

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. இவ்விழா, காலை 7:30 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, புண்யாஹம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், அனுக்ஞை, தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை மற்றும் அஸ்வ பூஜைகளுடன் துவங்கியது.

மருதமலை சுப்பிர மணிய சுவாமி திருக்கோவிலில் நித்திய பூசைகள் தார்மீக ஆகமப்படியும், திருவிழாக்கள் காரண ஆகமப்படியும் நிகழ்கின்றன. தினசரி காலை 6.00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் ( உஷக்காலம் ), காலை 9.00 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12.00 மணி உச்சிகாலம் பூஜை, பிற்பகல் 1.00 முதல் 2.00 மணி வரை திருக்கோவில் பகலில் காப்பிடுதல், மாலை 5.00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாமம் பூஜை ( இராக்காலம் ) நடக்கும். ( பகலில் திருக்காப்பிடுதல் விசேஷ நாட்களில் மாறுபடும்) திருவிழா மற்றும் கார்த்திகை நாட்களில் உஷக்கால பூஜை ( விஸ்வரூப தரிசனம் ) அதிகாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.  இவ்வாறு இறைவனுக்கு  பூஜைகளின்போது, செய்யப்படும் அபிஷேகப் பொருளுக் கும், அதன் பலன்களும் உள்ளது.

*நன்னீர் - தூய்ப்பிக்கும்
*நல்லெண்ணெய் - நலம் தரும்
*பச்சரிசிமாவு - கடன் தீரும் பாபநாசம்
*மஞ்சள் தூள் - நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
*திருமஞ்னத்தூள் - நோய் தீர்க்கும்
*பஞ்சகவ்யம் - தீதழிக்கும் ஆன்மசுத்தி
*பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
*பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
*பஞ்சாமிருதம் - தீர்க்காயுள், வெற்றி தரும்
*தேன் - சுகம், சங்கீத விருத்தி
*நெய் - சுகவாழ்வு, மோட்சம்
*சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
*இளநீர் - நல்சந்ததியளிக்கும்
*கருப்பஞ்சாறு - ஆரோக்கிய மளிக்கும்
*நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
*சாத்துக்குடி - துயர் துடைக்கும்
*எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றும்
*திராட்சை - திட சரீரம் அளிக்கும்
*வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
*மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
*பலாப்பழம் - மங்களம் தரும் யோக சித்தி
*மாதுளை - பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
*தேங்காய் துருவல் - அரசுரிமை
*அன்னம் - விளை நிலங்கள் நன்மை தரும்
*சந்தனம் - சுகம், சுவர்க்க போகம் தரும்
*பன்னீர் - சருமம் காக்கும்
*கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
*சந்தாபிஷேகம் - நலம் எல்லாம் அளிக்கும்
*ஸ்வர்ணம் ( அ) ரத்னாபிஷேம் - சகல சௌபாக்கியமும் கிட்டும்

மருதமலை முருகன் கோவில் அருகிலுள்ள முக்கிய திருக் கோவில்கள்..

*மருதமலையிலிருந்து சுமார் 12 கி.மீ., தொலைவில் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
*சுமார் 30 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
*சுமார் 15 கி.மீ., தொலைவில் கோவை நகரில் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவிலும். கோணியம்மன் கோவிலும் உள்ளது.
*சுமார் 22 கி.மீ., தொலைவில் கோவை -பொள்ளாச்சி ரோட்டில் அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பழநி, ஆனி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple
செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple
புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் புரி ஜெகநாதர் கோயில் கருவூல அறையின் சாவிகள் கண்டெடுக்கப்பட்டன.ஒடிசா ... மேலும்
 
temple
போடி: போடியில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாலைக் காளியம்மன் கோயில். பல நூற்றாண்டுகளுக்கு முன் ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ராட்சத இயந்திரம் மூலம், கிரிவலப்பாதையில் தார்ச்சாலை சீரமைக்கும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.