சந்திர கிரகணம்; யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2025 05:09
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் நாளை இரவு 9:51 மணிக்கு துவங்கி அதிகாலை 2:25 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் சந்திரனை பார்க்க கூடாது. மாலை 5:00 மணிக்கு முன்பாக உண்பது நல்லது. ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும். அதிகாலை 4:30 மணிக்கு மேல் சந்திரனை பார்க்கலாம். பரிகார ராசியினர் கட்டாயம் செப்.8, 2025 திங்கட்கிழமை காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும்.