புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2025 03:09
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 65ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 28 ம் தேதி துவங்கியது. அதையொட்டி, அன்று அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, உற்சவ சாந்தி 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தினமும் காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, 2ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சித்தி, புத்தி விநாயகர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், கவர்னர் கைலாஷ்நாதன், சிவசங்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று( 6ம் தேதி) காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். 8ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம், 14ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் பிரம்மோற்சவம் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.