விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிலை :புனரமைப்பு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2014 01:04
விழுப்புரம்: லட்ச தீபத்தை யொட்டி விழுப்புரத்தில் அமைந்துள்ள 90 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு புனரமைப்பு பணிகள் நடந்தது.விழுப்புரம் தெற்கு அய்யனார் குளக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை யொட்டி லட்ச தீபங்கள் ஏற்றப்படுகிறது. இதையொட்டி 90 அடியில் அமைந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு அன்று 5 ஆயிரம் லிட்டரில் பாலாபிஷேகம் நடக்கிறது.விழாவையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கான புனரமைப்பு பணிகள் நேற்று துவங்கியது. இந்த பணிகளை சிலை நிறுவனர் தனுசு மற்றும் ஆலய நிர்வாகிகள் ராஜாமணி, பாலசுப்ரமணியன், பத்மநாபன், பாலு, கந்தவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.