கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் போகி பண்டிகையை முன்னிட்டு, காலை ஆற்றங்கரையிலிருந்து அம்மனுக்கு கலசத்தில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சாகைவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியுடன், அம்மன் வீதியுலா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று பொங்கல் திருவிழாவையொட்டி காலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும் மாலை தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.