உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. மார்கழி மாதம் முழுவதும், எம்பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்து வந்தன.
பகல்பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி திருவிழாக்களை தொடர்ந்து, நேற்று, மார்கழி மாதத்தின் கடைசி நாள் மற்றும் தை மாதத்தை வரவேற்கும் வகையில், போகிப்பண்டிகை, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிநடந்தது.
மாலை, 5:30 மணிக்கு, கோதை நாச்சியார் – பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர். இன்று காலை, தைப்பொங்கல் திருநாள் நடக்கிறது.