பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறுவத்துார் கிராமத்தில், சீனுவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாத நிறைவு பஜனை வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு அனுமன், சிவன், பார்வதி, கருப்பசாமி உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்த பக்தர்களின் ஊர்வலம் , சிறப்பு பஜனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
ஏற்பாடுகளை வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் செய்தனர்.