திருநெல்வேலி: பக்தி உபன்யாசகர் திருச்சி கல்யாணராமனின் ராமாயண ஓராண்டு சொற்பொழிவு இடை?வளி இல்லாமல் நடந்தது. வரும் 14ம் தேதி ராம பட்டாபிஷேகத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.
திருநெல்வேலி சன்னியாசி கிராமம் விவேக சம்வர்த்தினி சபாவில் சொற்பொழிவு 2013 ஏப்.,14 தமிழ் புத்தாண்டு அன்று துவங்கியது. தினமும் மாலை 6.00 முதல் 8.00 மணி வரை நடந்தது. தினமும் 150 பேர் உபன்யாசத்தைக் கேட்டனர். பாலகாண்டம் முடிவில் சீதா கல்யாணம் நடத்தப்பட்டது. பாதுகை ஊர்வலம், மதுரை அழகர்கோவில் பரிசாரகர் மூலம் அக்கார அடிசில் நைவேத்யம், சபரி மோட்ச தினத்தன்று, கனி வகைகள் படைத்தல், 9 சுமங்கலிகளுக்கு பட்டுப்புடவை தானம் செய்யப்பட்டது. நாலாயிர திவ்விய பிரபந்தம் மற்றும் புரந்தரதாசர் பாடல்களை மேற்கோள் காட்டி கல்யாணராமன் பேசினார். வரும் 14ம் தேதி ராமபட்டாபிஷேகத்துடன் சொற்பொழிவு நிறைவடைகிறது. ஏப்.,15ல் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.