Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அமோக லாபம்! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அமோக ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம்4, பூசம், ஆயில்யம் ) கவனம் தேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
03:07

திட்டமிட்டு செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

 ராகு மட்டும் மாதம் முழுவதும் நன்மை தருவார். மற்ற பெரும்பான்மையான கிரகங்கள் சாதகமாக இல்லாததால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. ராகுவால் பொருளாதார வளம், குடும்ப மகிழ்ச்சி, தொழில் விருத்தி உண்டாகும். சுக்கிரன் ஆக. 8 ல் இருந்து நன்மையை வழங்குவார். இதனால் பெண்களால் சுகம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள்.குடும்பத்தில் ஜூலை23க்கு பிறகு பிரச்னை உருவாகலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆனால், ஆக.8 க்கு பிறகு புதனால் பிரச்னை மறைந்து குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு கூடும். உடல்நலம் சுமாராக இருக்கும். அலைச்சல், உடல் சோர்வை தவிர்க்க முடியாது. பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். நண்பர்கள் விஷயத்திலும் விழிப்புணர்வு அவசியம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மை தரும்.

பணியாளர்கள் சிலருக்கு மாதத்தின் பிற்பகுதியில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வேலையில் இருந்து வந்த அலைச்சல், பணிச்சுமை மாத பிற்பகுதியில் மறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் சீராகக் கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் கால தாமதம் உருவாகும். ஆக. 8 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்டு வந்த புகழ், பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.பெற்றோரின் அறிவுரையை ஏற்பது அவசியம்.

விவசாயிகள் கரும்பு, எள், கொள், போன்ற பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் மிதமான லாபம் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினரின் அன்பையும், ஆதரவையும் பெறுவர். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் காண்பர். அண்டை வீட்டார் மத்தியில் பாராட்டு காண்பர்.

நல்ல நாள்: ஜூலை 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 31 ஆக.  1, 2, 7, 8, 9, 10, 11, 16

கவன நாள்:  ஆக.12, 13

அதிர்ஷ்ட எண்: 7, 8                    நிறம்: நீலம், வெள்ளை

வழிபாடு: செவ்வாயன்று முருகனை வணங்குங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். தினமும் வீட்டில் விளக்கேற்றி பெருமாளைவழிபடுங்கள். பசுவுக்கு தழை இடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar