எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே!
இது வரை சனிபகவான் எட்டாமிடத்தில் இருந்து பல்வேறு இடர்பாடுகளை தந்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் தம்பதியினரிடையே கருத்து ÷ வறுபாடு வந்திருக்கலாம். இதனால் அவர்களிடையே விரிசல் ஏற்பட்டு பிரியும் நிலையும் வந்திருக்கும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு உருவாகி இருக்கும். உங்கள் முயற்சிகளில் தடைகள் வந்து, நீங்கள் நினைத்ததை செய்ய முடியாமல் போய் இருக்கலாம். மருத்துவச்செலவு வந்திருக்கலாம். இந்த பிரச்னை மட்டுமோடு நின்று இருக்காது. கடந்த சில காலமாக மற்ற முக்கிய கிரகங்களுமே சாதகமாக இல்லாத நிலையில்தான் இருந்தது. இதனால் நெஞ்சம் நிறைய நினைவுகளைச் சுமந்து கொண்டு இருப்பீர்கள். அதனை மறக்கமுடியாமலும் தவித்துக் கொண்டு இருப்பீர்கள். இந்த நிலையில் சனி பகவான் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால், இதற்கு முன்பு போல் கெடுபலனைத் தர மாட்டார். பழைய சிரமமான நினைவுகளில் இருந்து விடுபட ஆரம்பிப்பீர்கள். பொதுவாக சனி 9-ம் இடத்தில் இருக்கும் போது, முயற்சிகளில் தடைகள் வரலாம். எதிரிகளின் இடையூறு தலைதுõக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த கெடுபலன்கள் அப்படியே நிகழும் என்று எண்ண வேண்டாம். கோட்சார பலனைக் கணிக்கும்போது மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் மற்ற கிரகங்கள் மூலம் அவ்வப்போது நன்மை கிடைக்கும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
2015ம் ஆண்டு நிலைகுடும்பத்தில் உறவினர்கள் வகையில் நல்ல அனுகூலமான போக்கு இருக்கும். அவர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர். வி ருந்து, விழா என்று சென்று வருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வந்து சேரு ம்.பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வியாபாரிகள் மன நிம்மதி ஏற்படும். சனியால் பளு அதிகரித்தாலும் அதற்கான வருமானம் கிடைக்காமல் போகாது. பெண்களை பங்குதாரர்களாக கொண்ட தொழில், வியாபாரம் தழைத்து ஓங்கும். கலைஞர்கள் சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்க பெறுவர். மாணவர்கள் அயல்நாடு சென்று படிப்பீர்கள். விவசாயிகள் கால்நடை செல்வங்கள் பெருகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். குழந்தை பாக்கியம் பெற்று அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். திருமணம் ஆகாதவர்களுக்கு மணப்பொருத்தம் கைகூடும்.
குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இது உங்கள் ராசிக்கு 6-ம் இடம். இந்த சமயத்தில் முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக அமைய வில்லை. அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குருபகவானின் 9-ம் இடத்துப்பார்வை சாதகமான அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இ ருக்கும். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதே நேரம் முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிற ப்பாக முடிக்க முடியும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பணியாளர்களுக்கு ÷ வலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில், வியாபாரம் தற்÷ பாது வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பின் தங்கும் நிலை ஏற்படலாம். விவசா யத்தில் அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகஇருக்கும்.கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.
2016ம் ஆண்டு நிலைகுரு சாதகமான இடத்துக்கு வந்து விடுவார். ராகுவாலும் எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பணியில் உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். வியாபாரம், தொழிலில் தீயோர் சேர்க்கையால்அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கைக்கு கிடைக்கும். பெண்கள், குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர்.கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.
2017 ஜூலை வரைஇந்த காலகட்டத்தில் செலவும் வரும். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டி வரும். உடல் நலம் மட்டுமின்றி மனத்தளர்ச்சியும் ஏற்படும்.
2017 டிசம்பர் வரைகேதுவின் பலத்தால் நல்ல பணப்புழக்கம் ஏற்படும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பகைவர்களின் தொல்லையில் சி க்கி அலைக்கழிந்தவர்கள் இனி தைரியமாக செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். சனிபகவான் சாதகமற்று இருப்பதால் பெரியோர்களின் ஆ லோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. பணியில் இடமாற்றப் பீதி சிலருக்கு வரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. கலைஞர்கள் புதிய ஒ ப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டி வரும். மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக பளுவை சந்திப்பர். உடல்நல உபாதைகளால் அவதி ப்பட்டவர்கள் குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும். சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். அஷ்டமி நாளில் பைரவரை வணங்கி வாருங்கள்.