தஞ்சாவூர்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், நூறு ஆண்டுகளுக்கு பின், இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பாரம்பரிய சின்னமாகவும், சோழர் கால கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்கி வருகிறது.
இங்கு, 19ம் நூற்றாண்டு பின், பல்வேறு காரணங்களால் தேரோட்டம் தடைப்பட்டது. பெரிய கோயில் சித்திரைப் பெருவிழாவின் 15-ம் நாளான இன்று நூறாண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி தஞ்சாவூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.