திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2026 02:03
திருப்போரூர்;திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா, பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் தேதி திருக்கல்யாணம் வைபவத்துடன் விழா நிறைவடைந்தது. பிப்.,27 ம் தேதி தேர்த்திருவிழாவும், மார்ச் 2ம் தேதி தெப்பதிருவிழாவும், 5 ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்து முடிந்தது. திருக்கல்யாணம் உத்சவம் நிறைவடைந்த அன்றிலிருந்து 13 நாட்களுக்கு, விடையாற்றி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இரண்டாம் நாள் உத்சவம் நேற்று நடந்தது. இதில், பகல் 11:00 மணிக்கு உற்சவர் கந்தசுவாமி பெருமானுக்கு மஹா அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மஹா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. விழாவில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.