Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... நத்தம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி கண் திறக்கும் நிகழ்ச்சி நத்தம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் அம்மையப்பர், 63 நாயன்மார்கள் திருவீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையத்தில் அம்மையப்பர், 63 நாயன்மார்கள் திருவீதி உலா

பதிவு செய்த நாள்

07 மார்
2026
08:03

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் தையல்நாயகி உடனமர், வைத்தியநாதர் மற்றும் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடந்தது.


மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள, மைக்கண் மாரியம்மன் கோவில் பின்புறம், அரச மர பிள்ளையார் கோவில் வீதியில், தையல் நாயகி உடனமர் வைத்தியநாதர் கோவில் மற்றும் திருமடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் மற்றும் திருமடத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை ஆடலரசுவின் குருபூஜை விழா நடந்தது. இதில் வேள்வி வழிபாடு, சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஒப்பனை, பேரொளி வெளிப்பாடு ஆகியவை நடந்தன. இரவு அம்மையப்பர், நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்களின் திருவீதி உலா கோ-ஆப்ரேடிவ் காலனியில் உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டது. முன்னதாக சுவாமிகளுக்கும், 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து திருவீதி உலா முன்பாக, சங்கொலியும் திருக்கயிலாய வாத்தியங்கள், வான வேடிக்கை முழங்க, நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மையப்பர், நால்வர்கள், 63 நாயன்மார்கள் பல்லாக்கில் திருவீதி உலா சென்றது. முடிவில் தையல்நாயகி உடனமர் வைத்தியநாதர் கோவிலை அடைந்ததும், அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் முத்தங்கி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் இரவு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar