உத்திரகோசமங்கையில் கிளி வாகனத்தில் மங்களேஸ்வரி தாயார் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2015 03:04
கீழக்கரை : உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி கோயில் மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற தலமாகும். ‘மண் முந்தியோ மங்கை(உத்திரகோச மங்கை) முந்தியோ’ என்ற சொல் வழக்கு மூலம் கோயிலின் தொன்மை உலகிற்கு தெரியவரும். இக்கோயிலில் வரும் மே 4 ல் சித்திரை திருவிழாவை யொட்டி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு 7 முதல் நள்ளிரவு 1 மணி வரை கோயிலில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் உற்சவர்களான மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி ஆகியோர் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வேத ஆகம முறைப்படி தேவார, திருவாசக பாடல்கள் இசைக்கப்பட்டு, கைலாச வாத்தியங்கள் முழங்க, 11 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மங்களேஸ்வரி தாயார் கிளி வாகன, அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உத்திரகோசமங்கையில் முதன்முறையாக நடத்தப்படும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர், சிவஸ்ரீ ராஜலிங்க குருக்கள், ராமலிங்க குருக்கள் செய்து வருகின்றனர்.