பதிவு செய்த நாள்
03
பிப்
2017
11:02
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 9ம் தேதி நடக்கிறது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என, கோவில் நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. உலகளவில் சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவிலில், 22 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்கனவே ஏகாம்பரநாதர், வரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்தது. அந்த வகையில், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவில் சார்பிலும் அதற்கான கடிதம், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, கோவில் உள்பிரகாரத்தில் இருந்து கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக வந்து, வடக்கு கோபுரம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியை தவிர்க்க, குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.கும்பாபிஷேகம் நடைபெறும் வியாழக்கிழமை காலை, பிரதான கிழக்கு ராஜ கோபுரம் வழியாக சங்கராச்சாரியார்கள், ஜெயேந்திரர், விஜயேந்திரர் செல்ல வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் கும்பாபிேஷகம்: காமாட்சி அம்மன் கோவிவில், இதற்கு முன், 1841, 1944, 1976, 1995ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1995 கும்பாபிஷேகத்தில், 75 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வழிபாடு நேரம் மாற்றம்: வழக்கமாக காலை, 5:30 மணியில் இருந்து, 12:30 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கும்பாபிஷேக வேலை நடப்பதால், காலை, 5:30 மணி முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 8ம் தேதி வரை இந்த நடைமுறை இருக்கும். 9ம் தேதி கும்பாபிஷேகம் அன்று பகல், 12:30 மணிக்குத் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
ராஜகோபுர கலசம்: வழக்கமாக, ராஜ கோபுர கலசங்கள், செப்புக் கலசமாகவே இருக்கும். ஆனால், இப்போது, அம்மன் கோவில் ராஜ கோபுர கலசங்கள், ஏழும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த கலசங்கள், இன்று மாலை நான்கு ராஜ வீதிகளில், பக்தர்களின் பார்வைக்காக எடுத்து வரப்படும்.
வைதீக முறையில் கும்பாபிஷேகம்: ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு விதிமுறையில் பூஜைகள் நடக்கும். சைவ கோவில்களில் ஆகம விதிப்படி பூஜையும், பெருமாள் கோவில்களில் வைணவ முறையிலும் நடக்கிறது. காமாட்சி அம்மன் கோவிலில் வைணவ முறைப்படி அனைத்து பூஜைகளும் நடக்கின்றன. காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த, கோவில் செயல் அலுவலர், விஜயன். ஸ்ரீகாரியம், விஸ்வநாத சாஸ்திரி, மடத்து ஸ்ரீகாரியம் விஸ்வநாதய்யர், அர்ச்சகர், நடராஜ சாஸ்திரி. இடம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில். இதற்கு முன் நடந்த கும்பாபிஷேகம் போல இல்லாமல், அனைத்து சன்னிதிகளிலும் வேலைகள் நடந்துள்ளன. பல மாநிலங்களில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் வருவதால், பாதுகாப்பு கருதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று லட்சம் பேர், விழாவை காண வருவர் என,எதிர்பார்க்கிறோம்.
விஸ்வநாத சாஸ்திரி காமாட்சி அம்மன் கோவில்: ஸ்ரீகாரியம்காஞ்சிபுரம் காமாட்சி சன்னிதியில்கள்வர் பெருமாள் வைணவத்தில், பெருமாள் வீற்றிருக்கும், 108 திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இங்குள்ள,காயத்ரி மண்டபத்தில், கள்வர் பெருமாள் உள்ளார். இதனால், 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.