விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பத்தில் தடுப்புகள் அமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2026 11:01
விருதுநகர்: தினமலர் செய்தி எதிரொலியாக விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் தெப்பத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டது.
விருதுநகரில் ஹிந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான பழமையான மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் வளாகத்தில் தெப்பம் அமைந்துள்ளது. மழைக்காலம் துவங்கிய போது தெப்பத்தில் தண்ணீர் நிறைந்து 16 அடி வரை உயர்ந்தது. பல ஆண்டு களாக தெப்பத்தை சுற்றி கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் மீது எவ்வித தடுப்புகளும், படிக்கட்டுகளுக்கு கேட் என எவ்வித பாதுகாப்பு ஏற்பாடு களும் இல்லாமல் இருந்தது. இதனால் சிறுவர்கள் தடுப்புச்சுவர்கள் மீது அமர்ந்து துாண்டில் போட்டு மீன்களை பிடிக்க ஆபத்தான முறைகளில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சிறுவர்களின் உயிருக்கு அச் சுறுத்தல் ஏற்பட்டது. எனவே கோயில் நிர்வாகம் தெப்பத்தை சுற்றியுள்ள தடுப்புச்சுவர் மீது தடுப்புகள் அமைத்து, தகர கதவுகளை அகற்றி புதிய கதவுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கோயில் தெப்பத்தை சுற்றி இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, படிக்கட்டு பகுதியில் கேட் அமைக்கப்பட்டுள்ளது.