Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் மகம் ... திருவையாறில் தியாகராஜருக்கு இசை கலைஞர்கள் இசை அஞ்சலி திருவையாறில் தியாகராஜருக்கு இசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ‘மஹா தீப மை’ பிரசாதம் விற்பனை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் ‘மஹா தீப மை’ பிரசாதம் விற்பனை துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஜன
2026
10:01

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா தீப மை’ பிரசாதம்,  பக்தர்களுக்கு  விற்பனை செய்யும் பணி, நேற்று முதல்  துவங்கியது. 


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில்,  2,668 அடி உயர, அண்ணாமலையார் மலை உச்சியில் கடந்த டிச., 3ல், ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டது. இதற்காக, 4,500 கிலோ நெய், மற்றும் 1,150 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, ஐந்தரை அடி உயர கொப்பரையில் ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டு, 11 நாட்கள், தொடர்ந்து எரிந்த மஹா தீப கொப்பரையிலிருந்து  சேகரிக்கப்பட்ட, ‘மஹா தீப மை’ பிரசாதம்,  கடந்த, 3ல் ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட  தீப மையுடன்,    வேம்பு இலை மற்றும் கட்டை, தர்ப்பை,  மா இலை மற்றும் மாங்குச்சி கட்டை, அருகம்புல், வில்வ இலை, கரிகாலகட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் சேர்த்து அதனுடன், சுவாமி அபிஷேக  விபூதி, வாசனை பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து, ‘மஹா தீப மை’ பிரசாதம் தயாரிக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 


இதையடுத்து நேற்று முதல்,  பக்தர்களுக்கு, ‘மஹா தீப மை’ விற்பனை செய்யும் பணி தொடங்கியது.  இந்த, தீப மை பிரசாதத்தை  பக்தர்கள் அணிவதால், ஏவல், பில்லி, சூனியம், போன்றவை தாக்காமல், காரிய சித்தி பலனும் கிடைக்கிறது என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த பிரசாதம், மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, பத்து கிராம் கொண்ட தீப மை பிரசாதம், விபூதி, மற்றும் குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து  இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்களுக்கு, பத்து ரூபாய் கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar