புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2026 10:01
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம கொல்லங்க்கோட்டில் உள்ளது புலிக்கோடு ஐயப்பன் கோவில். இக்கோவிலில் எல்லா ஆண்டும் மார்கழி மாதம் ஆறாட்டு உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று காலை நடை திறந்ததும் துவங்கியது. தொடர்ந்து உஷ பூஜை, லட்சார்ச்சனை நடந்தது. மதியம் 2:00 மணிக்கு கோவிலகம் ஸ்ரீ மூர்த்தி பகவதி அம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க முத்துமணி குடைகளும் ஆடை ஆபரணங்களும் அணிந்த யானைகளின் அணிவகுப்புடன் உற்சவர் எழுந்தருளும் வைபவம் நடந்தது. தொடர்ந்து மாலை உற்சவருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து நாதஸ்வரம் மற்றும் 50க்கும் மேற்பட்ட கலைஞர் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பு நடந்தது. இன்று காலை நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் உற்சவம் நிறைவடைகிறது.