பதிவு செய்த நாள்
03
பிப்
2017
11:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், தைப்பூச தேர்த்திருவிழா, சேவற்கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சென்னிமலை, மலை மீதுள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச விழா விமர்சையாக நடக்கிறது. நடப்பாண்டு விழா, சம்பிரதாய முறைப்படி இசை வேளாளர் சமூக நாட்டாண்மை, பெரியதனக்காரர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், கோவில் கொடி மரத்தில், சேவல் கொடியேற்றப்பட்டு, விழா நேற்று தொடங்கியது. முன்னதாக, கொடியேற்றத்துக்காக கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமி புறப்பாடு, தீர்த்தக்குட ஊர்வலங்கள் மலைக்கு சென்றன. மதியம், 1:40 மணிக்கு, சென்னிமலை இசை வேளாளர் சமூகத்தினர் குல கட்டளைப்படி சேவல் கொடியை தாங்கி, கோவிலை வலம் வந்தனர். முருகன் சன்னதி கொடி மரத்தில், சேவல் கொடியையும், சிவன் ஆலயம் முன், நந்தி கொடியையும் ஏற்றி, 15 நாட்கள் நடக்கவுள்ள தைப்பூசவிழாவை முறைப்படி தொடங்கி வைத்தனர். தேரோட்டம், வரும், 10ல் நடக்கிறது. முக்கிய நிகழ்வான மகாதரிசனம், 14 இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது.