சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை ராப்பத்து 8ம் நாள் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2026 11:01
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ராப்பத்து விழாவில் 8ம் நாள் வேடுபறி லீலை உற்சவம் நடந்தது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் நடந்தது. டிச., 29 மாலை மோகினி அவதாரத்தில் பெருமாள் உலா வந்தார். டிச.,30 அதிகாலை 5:20 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக பெருமாள் அருள் பாலித்தார். அன்று துவங்கி ராப்பத்து உற்சவம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு உற்சவத்தின் 8வது நாளில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பெருமாள், திருமங்கை ஆழ்வாருக்கு முக்தி கொடுக்கும் லீலை நடந்தது. இன்று ராப்பத்து உற்சவத்தில் நிறைவு நாளாக நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது. டிச., 11 காலை கூடாரவல்லி நாளில் அக்கார அடிசில் வைபவம், ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் வைபவம் நடக்கிறது