மின்னல் தாக்கிய நடராஜர் கோவில் கோபுரம்: பொதுமக்கள் பார்வை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2011 10:11
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மின்னல் தாக்கி யாளி (பொம்மை) உடைந்த கோபுரத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.சிதம்பரம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தபோது சிதம்பரம் மேற்கு ராஜகோபுரத்தில் மின்னல் தாக்கியது. அதிர்வில் கோபுரத்தில் இருந்த யாளி (பொம்மை) உடைந்து கீழே விழுந்தது.அதையொட்டி தீட்சிதர்கள் பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து ஹோமம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.மின்னல் தாக்கிய தகவல் பரவியதால் நேற்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மின்னல் தாக்கிய கோபுரத்தை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். நகர மன்ற தலைவர் நிர்மலா கோபுரத்தை பார்த்து அங்கிருந்த தீட்சிதர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.உடைந்த யாளியை புதியதாக அமைக்க தீட்சிதர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.