வெள்ளி யானை வாகனத்தில் வலம் வந்த ஸ்ரீரங்கம் நம்பெருமாள்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2025 02:03
திருச்சி; வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை கண்டு வழி நடுங்கிலும் பெரும் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சி ஆன தெப்பத் திருவிழா வருகின்ற மார்ச்9ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் மாசி மாதத்தில் 9நாட்கள் நடைபெறும். மாசித்தெப்ப உற்சவத்தின் 6ம்நாளில் நம்பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்கும் வாகன மண்டபத்திலிருந்து வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பின் 4உத்திர வீதிகள் வழியாக வலம்வந்து பின்னர் வாகனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நம்பெருமாளை வழிநெடுகிலும் திரண்டிருந்த பெரும் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி கோஷமிட்டு வாரு வணங்கிச் சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான மாசி தெப்பத்திருவிழா வருகின்ற மார்ச்9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறஉள்ளது.