Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமாட்சியம்மன் கண்ணன் ... சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்; இந்தியா வெற்றிபெற சிறப்பு வழிபாடு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி; விருதை கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி; விருதை கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

08 மார்
2025
04:03

விருத்தாசலம்; விபச்சித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சியில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். 


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா நடந்து வருகிறது. இந்நிலையில், 6ம் திருவிழாவான இன்று விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி, காலை 8:00 மணிக்கு விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர், விருத்தாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் நுாற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பகல் 12:30 மணியளவில் நுாற்றுகால் மண்டபத்தின் எதிரே உள்ள உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய விபச்சித்து முனிவருக்கு, பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தர மகா தீபாரதனை நடந்தது. அதன்பின், கோபுர வாசல் வழியாக பஞ்ச மூர்த்திகள், விபச்சித்து முனிவர் எழுந்தருள பக்தர்கள் மலர் துாவி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 11ம் தேதி தேரோட்டம், 12ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம், 13ம் தேதி தெப்பல் உற்சவம், 14ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar