செந்துறை; நத்தம் அருகே செந்துறை கோட்டைப்பட்டி வாளைக்கிணறு வீரமகாமுனி கோவிலில் கடந்தமாதம் பிப்ரவரி 27- ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மார்ச் 6-பூஜை ஆராதனைகளுடன் வாணவேடிக்கைகளுடன் சுவாமிக்கு ஏகவேஷ்டி அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.நேற்று திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் சேர்ந்து பக்தர்களை வரவேற்றனர்.