Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாந்தீஸ்வரர் பூஜையில் ... விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி; விருதை கோவிலில் குவிந்த பக்தர்கள் விபச்சித்து முனிவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமாட்சியம்மன் கண்ணன் அலங்காரத்தில் வீதி உலா; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
காஞ்சி காமாட்சியம்மன் கண்ணன் அலங்காரத்தில் வீதி உலா; பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

08 மார்
2025
04:03

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோத்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும், எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். 


இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 4ம் தேதி காலை மகர வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வீதியுலா வந்தார். மூன்றாம் நாளான கடந்த 5ம் தேதி காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும், நான்காம் நாள் உற்சவவமான கடந்த 6ம் தேதி காலை தங்க சூரிய பிரபையிலும், இரவு தங்க ஹம்ஸ வாகனத்திலும், ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று காலை தங்க பல்லக்கிலும், இரவு நாக வாகனத்தில் காமாட்சியம்மன் வீதி உலா வந்தார்.


ஆறாம் நாள் உற்சவமான இன்று காலை முத்து பல்லக்கில் கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். ஏழாம் நாள் உற்சவமான நாளை ரதம் உற்சவமும், எட்டாம் நாள் உற்சவமான நாளை மறுநாள் பத்ரபீடமும், இரவு குதிரை வாகன உற்சவமும் நடக்கிறது. இதில், ஒன்பதாம் நாள் இரவு வெள்ளி ரதம் உற்சவம் விமரிசையாக நடக்கிறது. பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராம ஜென்மபூமியில் அதிகாலை முதல் பிரபு ஸ்ரீராமரை ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar