ரங்கநாதரின் தங்கையாக காவிரி அன்னை கருதப்படுகிறாள். ஆடிப் பெருக்கன்று ரங்கநாதர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலுள்ள படித்துறைக்கு காலையில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம்(அபிஷேகம்) நடக்கும். மாலையில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவர். பெருமாள் முன்னிலையில் வைத்து தீபாராதனை செய்து பின்பு அவற்றை காவிரியில் மிதக்க விடுவர். இந்தக் காட்சியை தரிசித்தால் உணவும், உடையும் செழிப்பாக கிடைக்கும்.