கீழக்கரை: ஏர்வாடி அருகே கொம்பூதியில் கண்ணபிரான் கோயில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விழா செப்.,13 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதல்நாள் அதிகாலை 4:00 மணிக்கு சுதர்சன ஹோமமும், காலை 7:00 மணிக்கு கொடியேற்றமும் பின்னர் விநாயகர் கோயிலில் இருந்து கண்ணபிரான் கோயிலுக்கு 108 பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெறும். மதுரா யாதவர் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம், கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 11 மணிக்கு கயிறு இழுக்கும் போட்டி, பகல் 12 மணிக்கு 20 அடி உயரமுள்ள வழுக்குமரத்தில் ஏறும் போட்டி, உறியடி உற்சவம், மாலையில் தேரோட்டமும் நடக்கும். ஏற்பாடுகளை யாதவர் சங்கம் மற்றும் விழாக்கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.