Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 144 வருடங்களுக்கு பின் ... மயிலாடுதுறையில் அகில பாரதிய துறவியர் சங்க மாநாடு மயிலாடுதுறையில் அகில பாரதிய ...
முதல் பக்கம் » காவிரி மகா புஷ்கரம் - 2017
ஸ்ரீரங்கம் காவிரியில் குவிந்த பக்தர்கள்: மகா புஷ்கரம் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2017
10:09

திருச்சி: ஸ்ரீரங்கம் காவிரியில் மகா புஷ்கரம் விழா துவங்கியதையடுத்து, அம்மா மண்டபப்படித்துறை காவிரியாற்றில் புனித நீராடி காவிரி தாய்க்கு, ஆரத்தி காண்பித்து ஏராளமானோர் வழிப்பட்டு வருகின்றனர்.

Default Image

Next News

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மகா புஷ்கரம் விழா கோலாகலமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பிருந்து ஆதிநாயக பெருமாள், தாயாருடன் ஊர்வலமாக புறப்பட்டு, அம்மா மண்டபம் சாலையில் உள்ள யாகசாலைக்கு வந்தார்.  இன்று(செப்12) காலை 7 மணிக்கு செண்டலங்கார செண்பக மன்னார்குடி ஜீயர், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோர் பட்டாச்சார்யார்களுடன், அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து, யாகசாலைக்கு கொண்டு வந்தனர். காலை 9 மணிக்கு கோ பூஜை நடத்தி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, 10 மணிக்கு வேத விற்பன்னர்களை கொண்டு யாகசாலை பூஜைகள் துவங்கின. மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு காலை 5 மணியில் இருந்தே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் புனித நீராடி, ரெங்கநாதரை தரிசித்து சென்றனர்.

குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை.இதன்படி 144 வருடங்களுக்கு பின் மகா புஷ்கர் விழா இன்று துவங்கியது.

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரியில் மகா புஷ்கரம் விழா துவங்கியதையடுத்து, அம்மா மண்டபப்படித்துறை காவிரியாற்றில் புனித நீராடி காவிரி தாய்க்கு ஆரத்தி காண்பித்து பக்தர்கள் வழிப்பாடு செய்தனர். காவிரியாற்றில் தண்ணீர் திறக்காததால் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தொட்டியிலும், குழாய்களிலும், புனித நீராடி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. கர்நாடகாவில், கா விரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, குஷால்நகர், ஸ்ரீரங்கபட்டணம், டி.நரசிபுரா, சிவசமுத்திரா, தலக்காடு, பன்னுார், கனகபுரா, சங்கமம் ஆகிய இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, கொடுமுடி, பள்ளிபாளையம், பரமத்தி வேலுார், திருச்சி, சுவாமிமலை, திருவையாறு, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய இடங்களில் நடக்கிறது.

 
மேலும் காவிரி மகா புஷ்கரம் - 2017 »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின் காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகல தொடங்கியது. காஞ்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி அகில பாரதிய துறவியர் சங்க ... மேலும்
 
temple news
நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவம் அனைத்தும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் மூலம் நீங்கும். ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள காவிரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் காவிரி மஹா புஷ்கரம் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar