Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் காவிரியில் குவிந்த ...
முதல் பக்கம் » காவிரி மகா புஷ்கரம் - 2017
மயிலாடுதுறையில் அகில பாரதிய துறவியர் சங்க மாநாடு
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் அகில பாரதிய துறவியர் சங்க மாநாடு

பதிவு செய்த நாள்

12 செப்
2017
04:09

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி அகில பாரதிய துறவியர் சங்க மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் தலைவரும், பேரூர் இளைய ஆதினம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். செயலாளர் சுவாமி இராமானந்தா மகராஜ், ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது: காவிரியில் மகா புஷ்கரம் நடத்த முழு ஒத்துழைப்பை நல்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பது. நீர்வள ஆதாரத்துறைக்கு தனி அமைச்சரகத்தை உருவாக்கி, நீர்பாசன ஆயக்கட்டுடையவர்களின் பங்களிப்புடன் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள கோருவது, தென்மாநிலங்களி ல் நிலவிவரும் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கும், வெள்ளசேதம், வறட்சி பாதிப்பு இவ்விரண்டையும் சமன்படுத்துவதற்கும், விவசா யம் அதன் சார்பு தொழில்கள் அபிவிருத்தியடைவதற்கும், நீர்மின்சாரம், நீர்வழி போக்குவரத்து போன்றவற்றை மென்மேலும் மேம்பாடு அடையசெய்யவும், நதிநீர் இணைப்பு திட்ட த்தை மத்திய அரசு உடன டியாக செயல்படுத்த கோருவது, காவிரி, கொள்ளிடம் ஆகிய நதிகளில் மழைக்காலங்களில் வெள்ள நீர் அபரிமிதமாக வெளியேறி கடலில் கலந்து வீணாகி றது.எனவே தமிழக அரசு இவ்விரண்டு நதிகளிலும் ஆய்வுசெய்து வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகள் மற்றும் சிறிய அளவிலான நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்த வேண்டுவது. குடி யிருப்பு பகுதிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை குப்பைகள், கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவது போன்ற செயல்களை பெரும் குற்றமாக கருதி, கடும் தண்ட னை சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைப்பது, காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நதிகளில் உள்ள பாரம்பரிய கலைநய த்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள படித்துறைகளை புராதான படித்துறைகளாக அறிவித்து அவற்றை புணரமைத்து பொலிவுற பாதுகாக்க கோருவது ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவியர்கள் கலந்துகொண்டனர்.

 
மேலும் காவிரி மகா புஷ்கரம் - 2017 »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின் காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகல தொடங்கியது. காஞ்சி ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் காவிரியில் மகா புஷ்கரம் விழா துவங்கியதையடுத்து, அம்மா மண்டபப்படித்துறை ... மேலும்
 
temple news
நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவம் அனைத்தும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் மூலம் நீங்கும். ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள காவிரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் காவிரி மஹா புஷ்கரம் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar